நட்பு (திரைப்படம்)

நட்பு என்பது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், ஸ்ரீ பாரதி, ராதாரவி, காந்திமதி ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படத்தின் கதை வசனம் வைரமுத்து.[2] இப்படத்தை அமீர்ஜான் இயக்கி, இளையராஜா இசையமைத்துள்ளார்.

நட்பு
இயக்கம்அமீர்ஜான்
தயாரிப்பு வீரலட்சுமி கம்பைன்ஸ்
கதை வைரமுத்து
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
ஸ்ரீ பாரதி
ராதாரவி
வெளியீடு1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

ஆற்றின் அருகே ஒரு கிராமம் உள்ளது கிராமத்துக்குச் செல்லவேண்டுமானால் ஆபத்தான அந்த ஆற்றைக் கடந்தே செல்லவேண்டியுள்ளது. இதனால் கிராம மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி பலர் உயிரிழக்கின்றனர். இதனால் இந்த கிராமத்துக்கு பாலம் அமைக்கவேண்டி மக்கள் முயற்சிக்கின்றனர். இந்த கிராமத்துக்குப் பாலம் வந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடுவார்கள் என்பதால் அதை வரவிடாமல் ஒரு அரசியல்வாதி தடுக்க முயல்கிறார். இந்த அரசியல்வாதிக்கும் அந்த ஊர் மக்களுக்குமான போராட்டத்தைச் சித்தரிக்கும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "நட்பு தமிழ் திரைப்படம்". http://spicyonion.com/tamil/movie/paalam/. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  2. "கடமை கண்ணியம் கட்டுப்பாடு". கட்டுரை. தி இந்து. 4 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்பு_(திரைப்படம்)&oldid=3712157" இலிருந்து மீள்விக்கப்பட்டது