நண்டு உண்ணும் தவளை
நண்டு உண்ணும் தவளை | |
---|---|
பெ. காகிரிவோரா மேற்கு சாவகம் தீவின் போகோரில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெஜர்வாரியா
|
இனம்: | பெ. காகிரிவோரா
|
இருசொற் பெயரீடு | |
பெஜர்வாரியா காகிரிவோரா கெராவென்கார்சுடு, 1829 | |
வேறு பெயர்கள் | |
|
நண்டு உண்ணும் தவளை (Crab-eating frog)(Fejervarya cancrivora) என்பது தைவான்,[2] சீனா, பிலிப்பீன்சு உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தவளையாகும்.[3] இது குவாமிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இவை தைவானிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.[4] இது சதுப்புநிலங்களில் வாழ்கிறது. நீர்நில வாழ்வனவற்றில் தற்காலத்தில் அறியப்பட்ட 144 சிற்றினங்களில் கடல் நீரில் குறுகிய கால வாழக்கூடிய சிற்றினம் இதுவாகும்.[5]
யூரியா உற்பத்தி மற்றும் தக்கவைப்பை அதிகரிப்பதன் மூலமும், யூரியா மற்றும் சோடியம் மாற்றத்தில் சிறிது அதி உப்புத்தன்மையுடன் இருப்பதன் மூலமும் இந்த தவளை கடல் சூழலை (சுருக்கமான காலத்திற்குக் கடல் நீரில் மூழ்கி அல்லது நீண்ட காலத்திற்கு உவர் நீரில் மூழ்கி) பொறுத்துக்கொள்ளக் கூடிய தன்மையுடையதாக உள்ளது.[6][7][8] முதிர்ச்சியடைந்த தவளைகள் 2.8% அதிக உப்புத்தன்மையுடைய உப்பு நீரில் வாழ முடியும் இதன் தலைப்பிரட்டைகள் 3.9% அதிக உப்புத்தன்மையுடைய நீரில் வாழக்கூடியன.[9]
உணவுமுறை
தொகுநண்டு உண்ணும் தவளையின் உணவு ஆதாரங்கள் முக்கியமாக உள்நாட்டில் கிடைக்கும் இரையால் தீர்மானிக்கப்படுகின்றன. நன்னீருக்கு அருகில், இதன் உணவில் பெரும்பாலும் பூச்சிகள் உள்ளன. ஆனால் உவர் நீர் உள்ள சூழலில், நண்டுகள் உட்பட சிறிய ஓடுடைய கணுக்காலிகளை முக்கிய உணவாகக் கொள்கின்றன.[10]
மனித நுகர்வு
தொகுதென்கிழக்காசியாவில், நண்டு உண்ணும் தவளை உள்நாட்டில் உணவுக்காக வேட்டையாடப்படுகிறது. இந்தோனேசியாவின் சாவகம் தீவில் தவளைக்கால் இறைச்சிக்காக இது வளர்க்கப்படுகிறது.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Yuan Zhigang, Zhao Ermi, Shi Haitao, Diesmos, A.; Alcala, A.; Brown, R.; Afuang, L.; Gee, G.; Sukumaran, J.; Yaakob, N.; Leong Tzi Ming, Yodchaiy Chuaynkern, Kumthorn Thirakhupt, Das, I. et al. (2004). "Fejervarya cancrivora". IUCN Red List of Threatened Species 2004: e.T58269A11759436. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58269A11759436.en. https://www.iucnredlist.org/species/58269/11759436. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Lue, Kuang-Yang. "Fejervarya cancrivora". BiotaTaiwanica. Archived from the original on 16 December 2016. பார்க்கப்பட்ட நாள் 12 December 2012.
- ↑ Rare species of frog, snake in Orissa
- ↑ Wostl, Elijah, Eric N. Smith, and Robert N. Reed. 2016.
- ↑ Hopkins, Gareth R.; Brodie, Edmund D. (2015). "Occurrence of Amphibians in Saline Habitats: A Review and Evolutionary Perspective". Herpetological Monographs 29: 1–27. doi:10.1655/HERPMONOGRAPHS-D-14-00006.
- ↑ Knut Schmidt-Nielsen; Lee, Ping (1962). "Kidney function in the crab-eating frog (Rana cancrivora)". Journal of Experimental Biology 39 (1): 167–177. http://jeb.biologists.org/cgi/reprint/39/1/167.pdf.
- ↑ Dicker, Sebastian Ernest; Elliott, Annie B. (March 1970). "Water uptake by the crab-eating frog Rana cancrivora, as affected by osmotic gradients and by neurohypophysial hormones". Journal of Physiology 207 (1): 119–32. doi:10.1113/jphysiol.1970.sp009052. பப்மெட்:5503862. பப்மெட் சென்ட்ரல்:1348696. http://www.jphysiol.org/cgi/pmidlookup?view=long&pmid=5503862. பார்த்த நாள்: 2022-06-12.
- ↑ Tatsunori, Seki; Sakae, Kikuyama; Noboru, Yanaihara (1995-10-15). "Morphology of the skin glands of the crab-eating frog: Rana cancrivora". Zoological Science 12 (5): 623–6. doi:10.2108/zsj.12.623. http://ci.nii.ac.jp/naid/110003323347/en/.
- ↑ Gordon, Malcolm S.; Schmidt-Nielsen, Knut; Kelly, Hamilton M. (1961), "Osmotic regulation in the crab-eating frog (Rana cancrivora)", Journal of Experimental Biology, pp. 659–678
- ↑ Annie B. Elliott; Letha Karunakaran (October 1974). "Diet of Rana cancrivora in fresh water and brackish water environments". Journal of Zoology 174 (2): 203–215. doi:10.1111/j.1469-7998.1974.tb03152.x.
- ↑ Kusrini, MD (2005).