நீம் கா தானா
நீம் கா தானா (Neem Ka Thana), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டம் மற்றும் சுன்சுனூ மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட நீம் கா தானா மாவட்டத்தின்[1] நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது சிகர் நகரத்திற்கு வடகிழக்கே 85 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்ப்பூர் நகரத்திற்கு வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
நீம் கா தானா | |
---|---|
நகரம் | |
இராஜஸ்தான் மாநிலத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°44′06″N 75°46′47″E / 27.735018°N 75.779730°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | நீம் கா தானா மாவட்டம் |
ஏற்றம் | 446 m (1,463 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 36,000 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 332713 |
வாகனப் பதிவு | RJ-23B |
இணையதளம் | https://neemkathana.rajasthan.gov.in/home/dptHome |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 25 வார்டுகளும்; 6,202 குடியிருப்புகளும் கொண்ட நீம்கா தானா நகராட்சியின் மக்கள் தொகை 36,231 ஆகும். அதில் 19,065 ஆண்கள் மற்றும் 17,166 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.32 %% ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகையில் இந்து சமயத்தினர் 93.63%, இசுலாமியர் 6.17% மற்றும் பிறர் 0.20% ஆக உள்ளனர்.[2]
தொடருந்து சேவைகள்
தொகுநீம் கா தானா தொடருந்து நிலையம், ஜெய்ப்பூர்-தில்லி நகரங்களை இணைக்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajasthan CM Ashok Gehlot announces formation of 19 new districts, 3 Divisional headquarters in Rajasthan". AIR News. 17 March 2023. https://newsonair.com/2023/03/17/rajasthan-cm-ashok-gehlot-announces-formation-of-19-new-districts-3-divisional-headquarters-in-rajasthan/.
- ↑ Neem-Ka-Thana Town Population Census 2011
- ↑ Nim Ka Thana Station | NMK | Grade D Station