நீலகண்டம்
நீலகண்ட மலை அல்லது நீல்கந்த் (Nilkantha (or Neelakant, Neelkanth, Nilkanth, Nilkanta) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கார்வால் கோட்டத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள இமயமலையில் அமைந்த உயர்ந்த கொடுமுடிகளில் ஒன்றாகும். இது பத்ரிநாத்திற்கு கிழக்கே 9 கிலோ மீட்டர் தொலைவில், 3,474 மீட்டர் உயரத்தில் உள்ளது. [2]
நீலகண்டம் | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,500 m (21,300 அடி) |
புடைப்பு | 1,200 m (3,900 அடி)[1][2] |
ஆள்கூறு | 30°43′12″N 79°24′00″E / 30.72000°N 79.40000°E |
புவியியல் | |
மூலத் தொடர் | இமயமலையின் கார்வால் பகுதி |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 3 சூன் 1974, சோனம் புல்சோர், கன்னையா லால், திலீப் சிங், நிமா தோர்ஜி |
நீலகண்ட மலையின் வடகிழக்கில் 2,500 மீட்டர் உயரத்தில் சடோப்பந்த் கொடுமுடி உள்ளது. இதன் தென்மேற்கில் பன்பதியா பனிமலை உள்ளது. இதன் மேற்கில் கங்கோத்ரி பனிச்சிகரங்கள் உள்ளது.
பெயர்க்காரணம்
தொகுசமஸ்கிருத மொழியில் நீல் என்பதற்கு நீல நிறம் என்றும், கண்டம் என்பதற்கு தொண்டை என்று பொருள். சிவபெருமான் திருப்பாற்கடலை கடையும் போது தோன்றிய நஞ்சை உட்கொண்டார். அதனை கண்ட பார்வதி தேவி, நஞ்சு வயிற்றில் செல்லாதவாறு, சிவபெருமானின் தொண்டையை அழுத்தி பிடித்துக் கொண்டார். நஞ்சு தொண்டையில் தங்கியதால், தொண்டை நீல நிறமாக காட்சியளிக்கிறது என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Corrected SRTM data, available at Viewfinder Panoramas
- ↑ 2.0 2.1 Garhwal-Himalaya-Ost, 1:150,000 scale topographic map, prepared in 1992 by Ernst Huber for the Swiss Foundation for Alpine Research, based on maps of the Survey of India.
- ↑ Sharma 1996, ப. 290
- ↑ See: name #93 in Chidbhavananda, p. 31.