நீ நான் நிலா
நீ நான் நிலா (Nee naan nila) 2007 ஆம் ஆண்டு எம். பி. எஸ். சிவகுமார் இயக்கத்தில், ஆர். வி. பரதன், லண்டன் ரவி மற்றும் மேக்னா நடிப்பில், ஆர். விஸ்வநாதன் தயாரிப்பில், தினா இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1][2][3][4][5]
நீ நான் நிலா | |
---|---|
இயக்கம் | எம். பி. எஸ். சிவகுமார் |
தயாரிப்பு | ஆர். விஸ்வநாதன் |
கதை | எம். பி. எஸ். சிவகுமார் எம். சந்துரு (வசனம்) |
இசை | தினா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆர். கே. ராஜரத்தினம் எஸ். எ. சதிஷ் குமார் |
படத்தொகுப்பு | அனில் மல்நாட் |
கலையகம் | பரதன் பிலிம்ஸ் |
வெளியீடு | மே 25, 2007 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுகல்லூரி மாணவர்களான வினோத் (ஆர்.வி. பரதன்) மற்றும் ராஜா (லண்டன் ரவி) இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கும் எதிரிகள். இருவரும் தங்கள் வகுப்பில் படிக்கும் நிலா என்ற பெண்ணைக் காதலிக்கின்றனர். ஓவியம் வரைவதில் திறமையான வினோத் முரட்டு சுபாவமுடையவன். நிலாவைக் காதலிப்பதற்காக தன்னை மாற்றிக்கொள்ள விரும்பாதவன் வினோத். ஆனால் நிலாவிற்காக ராஜா தன் குணத்தை மாற்றிக் கொள்கிறான். கல்லூரி சுற்றுலாவிற்காகக் கொடைக்கானல் செல்லும் இடத்தில் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும் நிலாவை ராஜா கவனித்துக் கொள்கிறான். தன் காதலைத் தெரிவிக்கும் வினோத்திடம் தான் ராஜாவை காதலிப்பதாகச் சொல்கிறாள்.
ஒரு நாள் வாகன விபத்தில் ராஜா இறக்கிறான். இறந்தபின் ஆவியாக வருகிறான். ராஜா இறந்ததை அறிந்த நிலா தற்கொலைக்கு முயல்கிறாள். அவளை மற்றவர்கள் காப்பாற்றுகின்றனர். வினோத்தின் அறைக்குச் செல்லும் ராஜாவின் ஆவி அங்கு நிலாவை ஓவியமாக வினோத் வரைந்திருப்பதைப் பார்த்து அவன் நிலாவின் மீது வைத்துள்ள காதலைப் பற்றி அறிகிறது. வினோத்திடம் நிலாவின் மனதை மாற்ற அவளுக்குப் பிடித்தவகையில் நடந்துகொள்ளுமாறு கூறுகிறது. அதைக்கேட்டு வினோத்தும் தன்னை மாற்றிக்கொள்கிறான். ஆனாலும் நிலா வினோத்தைக் காதலிக்க பிடிவாதமாக மறுக்கிறாள். இறுதியில் நிலா என்ன முடிவெடுத்தாள் என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
தொகு- ஆர். வி. பரதன் - வினோத்
- லண்டன் ரவி - ராஜா
- மேக்னா - நிலா
- மணிவண்ணன் - செல்லப்பா
- கருணாஸ் - மொக்கச்சாமி
- பவ்யா கிருஷ்ணன்
- மனோபாலா
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- பாலு ஆனந்த்
- கல்லுக்குள் ஈரம் ராமநாதன்
- முத்துக்காளை
- பயில்வான் ரங்கநாதன்
- கூல் சுரேஷ்
- சங்கீதா பாலன்
- அச்சமில்லை கோபி
- அப்புக்குட்டி
- திருப்பூர் ராமசாமி
- ரகசியா
- அபிநயஸ்ரீ
இசை
தொகுபடத்தின் இசையமைப்பாளர் தினா. பாடலாசிரியர்கள் பா. விஜய், நா. முத்துக்குமார் மற்றும் எம். ஜி. கண்ணப்பன்.[6][6][7][8][9]
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | டார்லிங் | காயத்ரி | 1:43 |
2 | என் காதல் தெய்வ | விஜய் யேசுதாஸ் | 3:11 |
3 | காதல் காதல் | ஹரிஷ் ராகவேந்திரா | 4:27 |
4 | மாத்து மாத்து | டிம்மி, சுசித்ரா, தினா | 4:44 |
5 | மதம் புடிச்ச | சுனிதா சாரதி | 4:13 |
6 | ஊர மறந்தோம் | ஹரிஹரன் | 4:50 |
7 | ஒய்யலே | சிலம்பரசன், மஹதி | 3:43 |
8 | உன்னை சந்தித்தேன் | ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி | 3:50 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "நீ நான் நிலா".
- ↑ "நீ நான் நிலா". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ "நீ நான் நிலா".
- ↑ "நீ நான் நிலா".
- ↑ "நீ நான் நிலா".
- ↑ 6.0 6.1 "பாடல்கள்".
- ↑ "பாடல்கள்". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ "பாடல்கள்".
- ↑ "சிம்பு பாடல்".