நேரியமங்கலம்
நேரியமங்கலம் (Neriamangalam) என்பது இந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். [1] பெரியாறுஆற்றங்ரையில் இந்த ஊர் அமைந்து்ளது. இது எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களின் எல்லையில் உள்ளது.
நேரியமங்கலம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°3′0″N 76°47′0″E / 10.05000°N 76.78333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,994 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 686693 |
தொலைபேசிக் குறியீடு | 0485 |
வாகனப் பதிவு | கேஎல்-44 |
அருகிலுள்ள நகரம் | கொச்சி |
மக்களாவைத் தொகுதி | இடுக்கி மாவட்டம் |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | கோதமங்கலம் |
இந்த பகுதியில் விவசாயமே பிரதானமாக உள்ளது. நேரியமங்கலம் பாலம், இராணிக்கல்லு (இராணியின் கல்) போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பெரியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நேரியமங்கலம் பாலம், பெரும்பாலும் 'மலையிடங்களின் நுழைவாயில்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது இடுக்கி மாவட்டத்தின் உயர் பகுதிகளுக்கு, குறிப்பாக மூணாறுக்குச் செல்லும் வழியில் உள்ளது. இந்த பாலத்தை திருவிதாங்கூர் மகாராஜா 1935இல் உருவாக்கினார். இப்போது பாலம் தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 49இன் ஒரு பகுதியாகும்.
முக்கிய இடங்கள்
தொகுஇங்குள்ள புனித சூசையப்பர் தேவாலயம், இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த சிரோ-மலபார் கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாகும். இந்த பிராந்தியத்தில் ஒரு முக்கியமான கல்வி நிறுவனமான ஜவஹர் நவோதயா வித்யாலயா, அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் அதிக சராசரி மழை பொழியும் இடங்களில் ஒன்றாகும். எனவே இந்த இடம் 'கேரளாவின் சிரபுஞ்சி' என்று கருதப்படுகிறது. இங்கிருந்து சுமார் 17.6 கி.மீ (11 மைல்) தொலைவில் கோதமங்கலம் அமைந்துள்ளது.
புள்ளிவிவரங்கள்
தொகு2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நேரியமங்கலத்தில் 15,994 மக்கள் தொகை 8,017 ஆண்களும் 7,977 பெண்களும் உள்ளனர்.[2]
குறிப்புகள்
தொகு- ↑ "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
- ↑ "District Census Handbook 2011: Ernakulam" (PDF). censusindia.gov.in. 2011. p. 217.