நோக்சா

இந்தியாவின் பீகார் மாநிலம் பட்னா மாவட்டத்தில் கணக்கெடுப்பிலுள்ள ஓர் ஊர்

நோக்சா (Nohsa) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் உள்ள புல்வாரி செரீப்பில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகும். இது பாட்னா நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும். [1] புல்வாரி சட்டமன்றத் தொகுதி மற்றும் பாட்லிபுத்ரா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இந்நகரம் வருகிறது.

நோக்சா
Nohsa
நோக்சா Nohsa is located in பீகார்
நோக்சா Nohsa
நோக்சா
Nohsa
இந்தியாவின் பீகாரில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°33′55″N 85°03′21″E / 25.56528°N 85.05583°E / 25.56528; 85.05583
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
கோட்டம்பட்னா
மாவட்டம்பட்னா
மண்டலம்மகத நாடு
நகர்ப்புறம்பட்னா
அரசு
 • வகைகிராம ஊராட்சி
 • நிர்வாகம்நோக்சா கிராம ஊராட்சி
மொழிகள்
 • பேச்சுமாகதி, இந்தி & உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
801505
தொலைபேசிக் குறியீடு0612
ஐஎசுஓ 3166 குறியீடுஐ என்-பி ஆர்
வாகனப் பதிவுபி ஆர்-01
இணையதளம்patna.bih.nic.in


புல்வாரி செரீப்பு வட்டாரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. பாட்னாவிலிருந்து சுமார் 10 கிமீ தூரத்திலும் மற்றும் பாட்னா அனைத்திந்திய மருத்துவக் கல்வி நிறுவனத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவிலும் உள்ளது.

போக்குவரத்து

தொகு

புல்வாரி செரீப்பு தொடருந்து நிலையம் மற்றும் தானாபூர் ரயில் நிலையம் ஆகியவை இந்நகருக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும். அவுரா-தில்லி முக்கியப் பாதையின் மூலம் இந்தியாவின் பல பெருநகரங்களை இந்நகரம் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 139 வழியாகவும் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள விமான நிலையமான செய் பிரகாசு நாராயண் விமான நிலையம் [2] 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Patna Metropolitan Urban Region Population 2011 Census". Census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2014-06-12.
  2. Subha. "Nohsa- Phulwari | Villages in Phulwari Taluk, Patna District, Bihar | Indian Villages". Soki.in. பார்க்கப்பட்ட நாள் 2014-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்சா&oldid=3784598" இலிருந்து மீள்விக்கப்பட்டது