நோரா பதேகீ

கனடிய நடிகை, வடிவழகி மற்றும் பாடகி

நோரா பதேகீ (Nora Fatehi, பிறப்பு: பிப்ரவரி 6, 1992) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த கனேடிய நடனக் கலைஞரும், நடிகையும் ஆவார். இந்தி, தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். பதேகீ ரோர்: டைகர் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.[5][6]

நோரா பதேகீ
2023 இல் பதேகீ
பிறப்பு6 பெப்ரவரி 1992 (1992-02-06) (அகவை 32)[1][2]
கனடா[a][3][4]
பணி
  • நடனக் கலைஞர்
  • நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது

இவர் டெம்பர், பாகுபலி 1, கிக் 2 போன்ற தெலுங்கு திரைப்படங்களில் வரும் குத்தாட்டப் நடனங்கள் மூலம் பிரபலமடைந்தார், டபுள் பேரல் மற்றும் காயங்குளம் கொச்சுண்ணி ஆகிய இரண்டு மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில், உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 9 இல் பதேகீ ஒரு போட்டியாளராக பங்கேற்றார். 2016 இல், இவர் சலக் திக்லா சா என்ற உண்மைநிலை தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். சத்யமேவ ஜெயதே என்ற இந்தித் திரைப்படத்தில் வரும் "தில்பார்" பாடலின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பதிப்பில் நோரா பதேகீ இடை நடனமாடினார்,[7] இப்பாடல் வெளியான முதல் 24 மணி நேரத்தில் யூடியூப்பில் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்தது, இது இந்தியாவில் அத்தகைய பார்வைகள் எண்ணிக்கை சாதனை படைத்த முதல் இந்தி பாடலாக அமைந்தது. தில்பார் பாடலின் அரபு பதிப்பை வெளியிட மொராக்கோ இப்-ஆப் குழுவான பஃநயிர் (Fnaïre) உடன் இணைந்து பணியாற்றினார்.[8][9]

2019 ஆம் ஆண்டில், தான்சானிய இசைக்கலைஞரும் பாடலாசிரியருமான ரேவானியுடன் இணைந்து தனது முதல் பன்னாட்டு ஆங்கில அறிமுகப் பாடலான பெபெட்டா-வை வெளியிட்டார். சீட்ரீட் டான்சர் 3டி (2020) மற்றும் புஜ்: தி பிரைட் ஆப் இந்தியா (2021) ஆகிய இந்தி திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். டான்சு தீவானே சூனியர்சு மற்றும் சலக் திக்லா சா 10 ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்திருக்கிறார்.

வாழ்க்கை

தொகு

பதேகீ கனடாவில் பிறந்து வளர்ந்தவர், பஞ்சாபி மற்றும் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்தவர்.[10] இவர் டொராண்டோவில் உள்ள வெசுட்வியூ சென்டினியல் மேல்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். இவர் யார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பன்னாட்டு உறவுகளைப் படித்தார்.[11] இவர் தன்னை "இதயத்தில் ஓர் இந்தியன்" என்று கருதுவதாக நேர்காணல்களில் கூறியுள்ளார்.[12]

தொழில்

தொகு

பதேகீ ரோர்: டைகர் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் என்ற இந்தி திரைப்படத்தில் தனது முதல் தோற்றத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பூரி ஜெகன்நாத்தின் டெம்பர் திரைப்படத்தில் "இட்டாகே ரெச்சிபோதாம்" என்ற பாடலில் குத்தாட்ட நடனத்துடன் தெலுங்குத் திரைப்படத்துறையில் தோன்றினார்.[13] விக்ரம் பட் இயக்கிய மகேசு பட் தயாரிப்பில் இம்ரான் ஆசுமி மற்றும் குர்மீத் சௌத்ரி ஆகியோருடன் இணைந்து நடித்த மிச்டர் எக்சு திரைப்படத்தில் இவர் சிறப்புத் தோற்றத்தில் நடனமாடினார். பாகுபலி திரைப்படத்தில் "மனோகரி" பாடலிலும்,[14] கிக் 2 திரைப்படத்தில் "குக்குருகு" போன்ற திரைப்படங்களில் வரும் குத்தாட்டப் பாடல்களில் நடனமாடுபவராக தோன்றியுள்ளார்.[15]

சூன் 2015 இன் பிற்பகுதியில், ஷேர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒப்பந்தமானார். ஆகத்து 2015 இன் பிற்பகுதியில், வருண் தேஜுக்கு சோடியாக பூரி ஜெகன்நாத் இயக்கிய லோஃபர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒப்பந்தமானார். நவம்பர் 2015 இல் ஊபிரி படத்திலும் கையெழுத்திட்டார்.[16] திசம்பர் 2015 இல், பதேகீ ஒன்பதாவது சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.[17] 12 வது வாரத்தில் (நாள் 83) வீட்டிற்குள் 3 வாரங்கள் கழித்தார் பின்பு வெளியேறினார். இவர் 2016 இல் உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியான சலக் திக்லா சாவிலும் பங்கேற்றார். இவர் சஞ்சய் சூரிக்கு சோடியாக மை பர்த்டே சாங் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடித்தார்.

2020 ஆம் ஆண்டு சீட்ரீட் டான்சர் 3டி என்ற நடனத் திரைப்படத்தில் தோன்றினார், இது இவரது முக்கியத் துணை வேடத்தில் நடிக்கும் முதல் படமாகும்.[18] ஜாக் நைட் உடன் இணைந்து "டர்ட்டி லிட்டில் சீக்ரெட்" பாடலை வெளியிட்டார், இது இவரது முதல் பன்னாட்டு சிங்கிள் பாடலாகும்.[19][20][21]

2022 ஆம் ஆண்டில், தேங்க் காட் திரைப்படத்தில் யோகானி பாடிய "மெணிகே" பாடலில் பதேகீ தோன்றினார், இது "மெணிகே மகே ஹிதே" என்ற இலங்கைச் சிங்கள மொழி பாடலின் மறு உருவாக்கமாகும்.[22][23] ஆயுசுமான் குரான்னாவுடன் ஆன் ஆக்சன் ஹீரோ திரைப்படத்தில் "ஜெஹ்தா நாசா" பாடலில் தோன்றினார்.[24][25] அதே ஆண்டில் இவர் 2022 உலகக்கோப்பை காற்பந்து நிறைவு விழாவில் ஒரு நிகழ்ச்சியை வழங்கினார்.[26][27] டான்சு தீவானே சூனியர்சு (சீசன் 1), சலக் திக்லா சா 10 போன்ற நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்காற்றியுள்ளார்.[28] 2018 ஆம் ஆண்டு ஸ்ட்ரீ திரைப்படத்தில் "கமரியா" பாடலில் சிறப்புத் தோற்றத்தில் இராஜ்குமார் இராவுடன் தோன்றிய பிறகு, 2023 ஆம் ஆண்டில் "அச்சா சிலா தியா" பாடலில் இராஜ்குமார் இராவுடன் தோன்றினார்,[29] இப்பாடல் 1995 ஆம் ஆண்டு பேவஃபா சனம் என்ற இந்தித் திரைப்படத்தில் இடம்பெற்ற "அச்சா சிலா தியா துனே மேரே பியார் கா" திரைப்படப் பாடலின் மறு உருவாக்கம் ஆகும்.[30][31]

ஊடகங்களில்

தொகு

பிலிம்பேரின் வேதன்சி பதக், "ஒரு பாடல் ஒன்றன் பின் ஒன்றாக, இவ்வளவு நம்பிக்கையுடன் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் நடனமாடக்கூடியவர்கள் யாரும் இல்லை என்பதை பதேகீ நிரூபித்தார்." [32] டாபர் மற்றும் கேக்சோன் போன்ற நிறுவனங்களுக்கு இவர் விளம்பர தூதராக உள்ளார்.[33][34]

குறிப்புகள்

தொகு
  1. அவர் மாண்ட்ரீல் அல்லது டொராண்டோவில் பிறந்தார் என்று ஆதாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், பதேகீயிடமிருந்து சரியான நகரம் பற்றிய அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rumoured couple Nora Fatehi, Angad Bedi share the same birthday; wish each other in the sweetest way possible". The Times of India. 17 February 2017. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/rumoured-couple-nora-fatehi-angad-bedi-share-the-same-birthday-wish-each-other-in-the-sweetest-way-possible/articleshow/57016419.cms. 
  2. "Bigg Boss 9 contestant Nora Fatehi dances like crazy at her birthday party". 21 April 2016. https://indianexpress.com/article/entertainment/television/bigg-boss-9-contestant-nora-fatehi-dances-like-crazy-at-her-birthday-bash/. 
  3. ""I had a crush on Hrithik Roshan," Nora Fatehi gets candid". Hindustan Times. 20 April 2019. https://www.hindustantimes.com/brunch/i-d-right-swipe-ryan-gosling-on-tinder-says-nora-fatehi/story-x6pGaMO13SoXrdk8fkuIoK.html. 
  4. "5 unknown facts about 'Dilbar' girl Nora Fatehi". The Times of India. 25 April 2019. https://timesofindia.indiatimes.com/videos/entertainment/hindi/5-unknown-facts-about-dilbar-girl-nora-fatehi/videoshow/69035251.cms. 
  5. "Roar : Tigers Of The Sundarbans – Cast". roarthefilm.com. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021.
  6. "Make way for Moroccan model Nora Fatehi as she makes her debut with Roar" (in en). India Today. 14 October 2014. https://www.indiatoday.in/movies/bollywood/story/moroccan-model-nora-fatehi-debut-with-roar-tigers-of-the-sunderbans-223157-2014-10-14. 
  7. "Dilbar – YouTube". பார்க்கப்பட்ட நாள் 15 January 2019 – via YouTube.
  8. "Nora Fatehi's Arabic version of Dilbar has set the internet on fire and how! Watch video" (in en). Times Now. 5 December 2018. https://www.timesnownews.com/entertainment/news/bollywood-news/article/nora-fatehis-arabic-version-of-dilbar-has-set-the-internet-on-fire-and-how-watch-video/324543. 
  9. "Dilbar Arabic Version". பார்க்கப்பட்ட நாள் 15 January 2019 – via YouTube.
  10. https://www.thehindu.com/features/metroplus/ready-for-the-competition/article6978413.ece
  11. "Who are Nora Fatehi's parents? Know everything about her family". PINKVILLA (in ஆங்கிலம்). 26 December 2022. பார்க்கப்பட்ட நாள் 27 December 2022.
  12. "I'm an Indian at heart: Bigg Boss 9 contestant Nora Fatehi". The Indian Express. 9 February 2016. https://indianexpress.com/article/entertainment/bollywood/im-an-indian-at-heart-bigg-boss-9-contestant-nora-fatehi/. 
  13. Kumar, Hemanth (15 January 2017). "NTR dances like a dream: Nora Fatehi" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/NTR-dances-like-a-dream-Nora-Fatehi/articleshow/45435183.cms. 
  14. "Nora Fatehi signed for a special song in 'Baahubali'" இம் மூலத்தில் இருந்து 2015-03-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150330020643/http://ibnlive.in.com/news/nora-fatehi-signed-for-a-special-song-in-baahubali/536504-8-66.html. 
  15. Pasupulate, Karthik (15 January 2017). "Nora Fatehi to groove with Ravi Teja in Kick 2" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Nora-Fatehi-to-groove-with-Ravi-Teja-in-Kick-2/articleshow/46849131.cms. 
  16. Jonnalagedda, Pranita (16 January 2017). "Nora Fatehi's item song will add a desi tadka to the Intouchables remake" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Nora-Fatehis-item-song-will-add-a-desi-tadka-to-the-Intouchables-remake/articleshow/49909012.cms. 
  17. Tungekar, Samreen (30 September 2017). "Bigg Boss is just entertainment, shouldn't be taken so seriously: Nora Fatehi's secrets" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/brunch/bigg-boss-is-just-entertainment-shouldn-t-be-taken-so-seriously-nora-fatehi-s-secrets/story-dPX6UB9HKjFGdM46kaEWXN.html. 
  18. "Street Dancer: Varun Dhawan kicks off second schedule of the film in snowy London". in.com. Archived from the original on 13 February 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  19. "Nora Fatehi who turned director for 'Dirty Little Secret' opened up about challenges of being behind the camera". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  20. "Nora Fatehi's new international single 'Dirty Little Secret' out". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/nora-fatehis-new-international-single-dirty-little-secret-out/articleshow/92121045.cms. 
  21. Dhiman, Nikshey (9 September 2022). "Nora Fatehi Video: Nora's 'Dirty Little Secret' is making records, Have you watched it yet?". DNP INDIA (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  22. "Thank God song 'Manike': Ajay Devgn tells Sidharth Malhotra to control his lust for Nora Fatehi; he fails miserably". The Indian Express (in ஆங்கிலம்). 16 September 2022. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  23. "Not an item song! Sidharth Malhotra defends Thank God's Manike ft Nora Fatehi". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  24. "Ayushmann Khurrana and Nora's Jheda Nasha to be out soon, disappointed fans react". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  25. "An Action Hero song Jehda Nasha teaser: Ayushmann Khurrana and Nora Fatehi sizzle in dance track". The Indian Express (in ஆங்கிலம்). 16 November 2022. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  26. "Nora Fatehi Dazzles Fans With Her Performance At FIFA World Cup 2022 Final". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 27 December 2022.
  27. . 
  28. "Karan Johar, Madhuri Dixit and Nora Fatehi to judge Jhalak Dikhhla Jaa 10". The Indian Express (in ஆங்கிலம்). 18 July 2022. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  29. "Rajkummar Rao, Nora Fatehi to star in heartbreak anthem Achha Sila Diya". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  30. "Achha Sila Diya music video: Rajkummar Rao, Nora Fatehi face off". Hindustan Times (in ஆங்கிலம்). 19 January 2023. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  31. "Exclusive! Aakash Ahuja on working with Nora Fatehi, Rajkummar Rao in Achha Sila Diya: The duo are easy to work with". Zoom TV (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  32. Pathak, Vedanshi (21 September 2021). "Nora Fatehi on her ever growing fandom, films and her envious figure". Filmfare. பார்க்கப்பட்ட நாள் 10 July 2023.
  33. "Dabur ropes in actor Nora Fatehi as brand ambassador for cooling oil". The Times of India. 13 June 2023. https://timesofindia.indiatimes.com/dabur-ropes-in-actor-nora-fatehi-as-brand-ambassador-for-cooling-oil/articleshow/100964810.cms. 
  34. "CakeZone announces actress Nora Fatehi as its brand ambassador". The Financial Express. 26 July 2022. https://www.financialexpress.com/business/brandwagon-cakezone-announces-actress-nora-fatehi-as-its-brand-ambassador-2606787/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோரா_பதேகீ&oldid=4108174" இலிருந்து மீள்விக்கப்பட்டது