பட்டுபுறக்காவு பகவதி கோயில்

பட்டுபுறக்காவு பகவதி கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் - அங்கமாலி MC சாலையில் பந்தளம் சந்திப்பில் இருந்து வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் பந்தளத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற இந்து கோயில் [1] ஆகும். 28 ஏப்ரல் 2010 முதல் 7 மே 2010 வரை, கேரளாவில் முதன்முதலாக தேவி பாகவத சத்திரத்தை இக்கோயில் நடத்தியது.

துணைத்தெய்வங்கள்

தொகு

கோயிலின் மூலவர் பத்ரகாளி ஆவார். இக்கோயிலில் கணபதி, சிவன், உதயன், பிரம்மராட்சஸ், யட்சி, நாகா, சுப்ரமணியன், நவகிரகம், அனமாருதா உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன.

கோயில் வளாகம்

தொகு

கோயில் வளாகத்தில் ஆனைக்கொட்டில், புனித குளம், அலுவலக அறை, சில ஆலமரங்கள் உள்ளன. கோயிலில் இந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள், விருந்து மண்டபம் மற்றும் உடை மாற்றும் அறைகள் உள்ளன. கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதற்கான மேடையும் இங்கு உள்ளது. பந்தளம் மத்திய சந்திப்புக்கு அருகில் நவராத்திரி மண்டபம் இணைந்துள்ளது. அங்கு அறிவு, இசை, கலைகளின் தெய்வமான சரஸ்வதி உள்ளார்.

திருவிழாக்கள்

தொகு

இக்கோயிலின் வருடாந்திர விழா மலையாள மாதமான மீனத்தின் அஸ்வதி நாளில் நடத்தப்படுகிறது. அன்றைய தித்தில் சிறப்பு பூசைள் நிகழ்த்தப்பெறுகின்றன. பாரம்பரிய கோயில் கலை, பண்பாட்டுநடத்தப்படுகின்றன. இந்து இதிகாசங்கள் மற்றும் புராணங்களை அடிப்படையாகக் கொண்ட சொற்பொழிவுகள் விரிவுரைகள் அடங்கியதேவி பாகவதர் சாத்திரம், சப்தாஹம், நவாஹம் ஆகியவை அடிக்கடி நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சூன் மாதம் சிலைகளை நிறுவிய தினம் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி இந்தக் கோயிலில் கொண்டாடப்படுகின்ற முக்கிய விழாவாகும். நவராத்திரி மண்டபத்தின் இணைப்புக்கட்டடத்தில் சிறப்புப்பூசைகள், கர்நாடக இசை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.[2] நவராத்திரி விழாவிற்கான ஏற்பாட்டுக் குழுவில் இந்துக்களுடன், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற மதத்தினரும் உள்ளனர். பந்தளத்தின் மத, பண்பாட்டு நல்லிணக்கத்தை இது வெளிப்படுத்துகிறது. நவராத்திரி விழாவின் நிறைவில் வித்யாரம்பம் நிகழ்வு நவராத்திரி மண்டபத்தில் நடத்தப்பெறுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு