பண்ருட்டி தொடருந்து நிலையம்

பண்ருட்டி தொடருந்து நிலையம் (Panruti railway station, நிலையக் குறியீடு:PRT) ஆனது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி நகரத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். 

பண்ருட்டி
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தேசிய நெடுஞ்சாலை 45C, தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை, பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்11°46′24″N 79°33′17″E / 11.7733°N 79.5546°E / 11.7733; 79.5546
ஏற்றம்26 மீட்டர்
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுPRT[1]
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருச்சிராப்பள்ளி
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
பண்ருட்டி is located in தமிழ் நாடு
பண்ருட்டி
பண்ருட்டி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
பண்ருட்டி is located in இந்தியா
பண்ருட்டி
பண்ருட்டி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இந்த தொடருந்து நிலையம், தென்னக இரயில்வே மண்டலத்தின், திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கிறது. 

இடம் மற்றும் அமைப்பு தொகு

தஞ்சாவூர் - விக்கிரவாண்டி  தேசிய நெடுஞ்சாலையில் (NH 45C) பண்ருட்டி தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. இந்நிலையத்திற்கு அருகே உள்ள விமான நிலையம் 165 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் ஆகும்.

இரயில் தடங்கள்  தொகு

இந்த இரயில் நிலையம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்குடி, திருவாரூர், இராமேஸ்வரம் போன்ற முக்கிய தொடருந்து நிலையங்களை சென்னையுடன் இணைக்கும் ஒரு மைய புள்ளியாக அமைந்துள்ளது.  

மேற்கோள்கள்  தொகு

  1. "Mustseeindia". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு