பத்தினி (1997 திரைப்படம்)

பி. வாசு இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பத்தினி (Paththini) என்பது 1997 ஆண்டைய இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இதை பி. வாசு எழுதி இயக்க, ஜெயராம் மற்றும் குஷ்பு ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க பிரகாஷ் ராஜ் மற்றும் சனகராஜ் ஆகியோர் துணை வேடங்களில்நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை தேவா மேற்கொண்டார். படம் 1997 செப்டம்பரில் வெளியடப்பட்டு, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[1][2]

பத்தினி
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். நரேந்திரன்
கதைபி. வாசு
இசைதேவா
நடிப்புஜெயராம் (நடிகர்)
குஷ்பூ
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுஇரவீந்தர்
படத்தொகுப்புபி. மோகனராஜ்
கலையகம்குட் லக் பிலிம்ஸ்
வெளியீடு26 செப்டம்பர் 1997
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

1990 களின் நடுவில் பல தோல்விப் படங்களுக்குப் பிறகு, பி. வாசு வாய்மையே வெல்லும், (1997) படத்தின் வழியாக மறுபிரவேசம் செய்தார். படத்தின் வெற்றியானது அவருக்கு குட் லக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தது, பதினியை படமானது ஹாலிவுட் படமான, ஸ்லீப்பிங் வித் தி எனிமி (1991) படத்தை தழுவி எடுக்கபட்டது. 1993 ஆம் ஆண்டய வெற்றித் திரைப்படமான புருஷ லட்சணம் படத் தயாரிப்புக் குழுவினரும், இயக்குனரும், நடிகர், நடிகைகள் இப்படத்தில் மீண்டும் ஒன்றிணைந்தனர்.[3]

இபபடத்திற்கான இசையை தேவா மேற்கொண்டார்.[4][5] பாடல் வரிகளை வாலி, காளிதாசன், பிறைசூடன், வலம்புரி ஜான் ஆகியோர் எழுதினர்.

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் காலம்
1 ஆலபுழா மனோ, சுஜாதா காளிதாசன் 04:32
2 ஆனந்தம் மனோ வாலி 05:11
3 மெல்லத்தான் சொல்ல சுவர்ணலதா பிரைசுதன் 06:17
4 ஓ தென்றலே சித்ரா வலம்புரி ஜான் 05:23
5 சுமைத்தாங்கி சித்ரா காளிதாசன் 06:30
6 சுகமண பாட்டு கே. ஜே. யேசுதாஸ் வாலி 05:35

வெளியீடும், வரவேற்பும்

தொகு

இந்த படம் 1997 செப்டம்பரில் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது. மேலும் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை.[6]

இப்படம் அடுத்த ஆண்டில் தமிழக அரசின் இரண்டு விருதுகளை வென்றது - பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் சிறந்த படம் மற்றும் நடிகை குஷ்பூவுக்கு சிறப்பு பரிசு என்பவையே அவை.[7]

குறிப்புகள்

தொகு
  1. "Pathini (1997) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-11.
  2. "Pathini (1997) - Movie Review, Story, Trailers, Videos, Photos, Wallpapers, Songs, Trivia, Movie Tickets". gomolo.com. Archived from the original on 2018-03-11. பார்க்கப்பட்ட நாள் 2018-03-11.
  3. "A-Z (IV)". indolink.com. Archived from the original on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
  4. "Raaga - Hindi Tamil Telugu Malayalam Kannada Punjabi Bengali Gujarati Marathi Rajasthani Songs MP3 downloads music videos". play.raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
  5. https://www.jiosaavn.com/album/pathini/v7p4Y3zbqWo_
  6. "Best of 1997". indolink.com. Archived from the original on 19 November 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
  7. DINAKARAN dinakaran.com. "dinakaran". web.archive.org. Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தினி_(1997_திரைப்படம்)&oldid=4146456" இலிருந்து மீள்விக்கப்பட்டது