பத்ராவதி (கர்நாடகம்)

பத்ராவதி (Bhadravati) இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தின் சிமோகா வருவாய் வட்டத்தில் உள்ள நகரமாகும். பத்ராவதி நகரம் பெங்களூரிவிலிருந்து 255 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான சிமோகா நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] பத்ராவதி நகராட்சி 67.05 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,51,102 மக்கள் தொகையும் கொண்டது.[3]

பத்ராவதி
ಭದ್ರಾವತಿ
இரும்பு நகரம்
நகரம்
அடைபெயர்(கள்): வெங்கிபுரம் அல்லது உக்கு நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்சிமோகா
தோற்றுவித்தவர்விஸ்வேஷ்வரய்யா
பெயர்ச்சூட்டுபத்ரா ஆறு
பரப்பளவு
 • மொத்தம்67.0536 km2 (25.8895 sq mi)
ஏற்றம்
597 m (1,959 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,51,102
 • அடர்த்தி2,300/km2 (5,800/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்,
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
577301, 577302
தொலைபேசி குறியீடு எண்+91-8282
ஐஎசுஓ 3166 குறியீடுISO எண் 3166-2:IN
வாகனப் பதிவுKA-14
பாலின விகிதம்1.04 /
எழுத்தறிவு விகிதம்73.9%
பெங்களூருவிலிருந்து தொலைவு255 கிலோமீட்டர்கள் (158 mi) NW
சிமோகாவிலிருந்து தூரம்20 கிலோமீட்டர்கள் (12 mi) E
தட்பவெப்ப நிலைகோப்பென் காலநிலை வகைப்பாடு
சராசரி மழைப் பொழிவு950 மில்லிமீட்டர்கள் (37 அங்)
சராசரி கோடைக்கால வெப்பநிலை31 °C (88 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை25 °C (77 °F)
இணையதளம்bhadravathicity.gov.in

பெயர்க் காரணம்

தொகு

இந்நகரில் பாயும் பத்ரா ஆற்றின் பெயரால் இந்நகருக்கு பத்ராவதி எனப் பெயர் ஆயிற்று. இந்நகரத்தின் முந்தைய பெயர் பேன்கிபுரா அல்லது பேன்கி பட்டின ஆகும்.[2] ஹோய்சாளர்கள் இந்நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

மக்கள் தொகையியல்

தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பத்ராவதி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,51,102 ஆகும். அதில் ஆண்கள் 75,009 ஆகவும்; பெண்கள் 76,093 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 86.36% ஆகவும் உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 1014 பெண்கள் என்ற அளவில் பாலின விகிதம் உள்ளது.[4] [5] ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், மொத்த மக்கள் தொகையில் 10% அளவில் உள்ளனர்.[6] பத்ராவதி நகரத்தின் முக்கிய மொழி கன்னட மொழி ஆகும்.

போக்குவரத்து

தொகு

சாலை

தொகு

தேசிய நெடுஞ்சாலை எண் 206 மற்றும் 13 பத்ராவதி நகரத்தின் வழியாக செல்கிறது. பெங்களூருவிலிருந்து சிமோகா செல்லும் பேருந்துகள் பத்ராவதி நகரத்தில் நின்று செல்கிறது.

தொடருந்து

தொகு

சிமோகாபெங்களூர், மைசூர் – சிமோகா, பிரூர் – சிமோகா செல்லும் அனைத்து தொடருந்துகளும், பத்ராவதி தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.[7]

பொருளாதாரம்

தொகு

பத்ராவதி நகரத்தில் இரும்புத் தொழிற்சாலையும், காகித தொழிற்சாலையும் உள்ளது.

சுற்றுலாத் தலங்கள்

தொகு
  • இலக்குமி நரசிம்மர் கோயில்
  • பத்ரா வனவிலங்குகள் காப்பகம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bhadravathi City Statistics". Bhadravathi City Municipal Council. Archived from the original on 2010-10-03. பார்க்கப்பட்ட நாள் 2010-08-01.
  2. 2.0 2.1 "Tourism". Bhadravati City Municipal Council. Archived from the original on 2009-07-31. பார்க்கப்பட்ட நாள் 2010-08-01.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.
  4. Bhadravati City Census 2011 data
  5. "Bhadravati City Population Census 2011 | Karnataka". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2015-11-12.
  6. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  7. "BHADRAVATI, BDVT". Train Running Information. Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 2010-08-01.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhadravathi, Karnataka
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ராவதி_(கர்நாடகம்)&oldid=3806407" இலிருந்து மீள்விக்கப்பட்டது