பந்திங்-செமினி சாலை

மலேசிய கூட்டரசு சாலை 31

பந்திங்-செமினி சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 31 (ஆங்கிலம்: Malaysia Federal Route 31; அல்லது Banting–Semenyih Road); மலாய்: Laluan Persekutuan Malaysia 31 அல்லது Jalan Banting–Semenyih) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு கூட்டரசு சாலை ஆகும்.[1]

மலேசிய கூட்டரசு சாலை 31
Malaysia Federal Route 31
Laluan Persekutuan Malaysia 31

பந்திங்-செமினி சாலை
Jalan Banting–Semenyih
வழித்தட தகவல்கள்
நீளம்:45.8 km (28.5 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:தெலுக் டத்தோ
 5 கிள்ளான்-பந்திங் நெடுஞ்சாலை

E32 மேற்கு கடற்கரை விரைவுச்சாலை

32 லாபோகான் டாகாங்–நீலாய்
248 புக்கிட் சங்காங் சாலை
29 புத்ரா ஜெயா-சைபர் ஜெயா
214 புத்ரா ஜெயா-டெங்கில்
B13 யுனிடென்-டெங்கில் சாலை
B48 சாலாக் பெசார் சாலை

E8 மலேசிய தெற்கு வழித்தடம்

B17 ரெக்கோ சாலை
B24 என்னாம் காக்கி சாலை

E21 காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை

1 கூட்டரசு சாலை 1
தெற்கு முடிவு:செமினி
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பந்திங், ஜுக்ரா, மோரிப், புத்ராஜெயா, சைபர்ஜெயா, டெங்கில், ஜெண்டராம், சவுத்வில் நகரம், பண்டார் பாரு பாங்கி, காஜாங், பாங்கி, சிலாங்கூர்
நெடுஞ்சாலை அமைப்பு

இந்தச் சாலை, மலேசியாவில் மிகப் பிரபலமான மோரிப் கடற்கரைக்குச் செல்லவும்; கேரி தீவு செல்வதற்கும் பயன்படுத்தப் படுகிறது.

பொது

தொகு

புத்ராஜெயா வட்டச் சாலை 45.8 கிமீ (28.5 மைல்) நீளம் கொண்டது; மற்றும் இந்தச் சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]

செமினி

தொகு

செமினி, (Bandar Semenyih) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், உலு லங்காட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்.[3]

காஜாங் நகரின் தென்கிழக்கே 8 கி.மீ. (5 மைல்) தொலைவிலும்; கோலாலம்பூர் மாநகருக்குத் தென்கிழக்கே 28 கி.மீ. (17 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது.

காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை

தொகு

செமினியின் சுற்றுப்புறங்கள் மலைப் பாங்கான சூழலைக் கொண்டவை. இந்த நகருக்கு அருகில் உள்ள மிக உயர்ந்த மலை புக்கிட் ஆராங் (Bukit Arang); 560 மீ (1,840 அடி) உயரம் கொண்டது. இயற்கை எழில் சூழ்ந்த பல அருவிகளுக்கு, செமினி நகரம் பிரபலமானது.[4]

இந்த நகரத்தில் தீக்கோழி வளர்ப்புப் பண்ணை (Ostrich Wonderland Show Farm) மிகவும் பிரபலமானது.[5] காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை மற்றும் காஜாங்-சில்க் நெடுஞ்சாலை போன்ற புதிய நெடுஞ்சாலைகள் மூலம் இந்த நகரம் மிகவும் எளிதாக அணுகக்கூடிய நகரமாக விளங்கி வருகிறது.

விளக்கம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
  3. "Hulu Langat Municipal Council". பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
  4. "Best Trails in Semenyih". பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  5. "Ostrich Wonderland, Semenyih, Selangor". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்திங்-செமினி_சாலை&oldid=4121267" இலிருந்து மீள்விக்கப்பட்டது