துருவ மான்

(பனிமான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

Euteleostomi

துருவ மான் அல்லது பனி மான் (Reindeer/ ராங்கிபெர் தாரான்டசு) எனப்படுவது ஒரு மான் சிற்றினமாகும்.

துருவமான்
புதைப்படிவ காலம்:பிளாய்டோசீன் 620,000 BP[1] முதல் இன்று வரை
நார்வேயில் ஒரு ரெயின்டீர்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
மான்
பேரினம்:
ரெயின்டீர்

சி.எச்.ஸ்மித், 1827
இனம்:
R. tarandus
இருசொற் பெயரீடு
Rangifer tarandus
(லின்னேயஸ், 1758)
வட அமெரிக்க மற்றும் யூரேசியப் பகுதிகளாக ரெயின்டீர் வாழ்விடம் பிரிக்கப்பட்டுள்ளது.
வேறு பெயர்கள்

செர்வசு தாரான்டசு (லின்னேயஸ், 1758)

பரவல்

தொகு

இவை வட அமெரிக்காவில் கரீபு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை துருவப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக வாழக்கூடியவை ஆகும். இவை வாழும் பகுதிகளைப் பொறுத்து இவற்றின் கூட்டத்திலுள்ள மான்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. உருசியாவின் தூந்திரப் பகுதியில் காணப்படும் தைமிர் எனப்படும் தூந்திர துருவ மான்களின் (R.t. sibiricus) கூட்டமே உலகின் மிகப்பெரிய காட்டு துருவ மான் கூட்டமாகும்.[3] இதில் உள்ள மான்களின் எண்ணிக்கை 4,00,000-10,00,000 ஆகும். மனிதர்கள் மத்திய பிளாய்டோசீன் காலம் முதல் துருவ மான்களைச் சார்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

ஆண், பெண் இரண்டிற்குமே கொம்புகள் வளர்கின்றன. பொதுவாக ஆண் துருவ மான்களின் கொம்புகள் பெரியவையாக உள்ளன. கொம்பில் கிளைகளுண்டு. ஆண், பெண் இரண்டிலும் கலைக்கொம்புகள் காணப்பட்டாலும் ஆண் கொம்பு பெரியதாகவும், கிளைகள் மிகுந்துமிருக்கும். மற்ற மான்களைப் போல உடலமைப்பு இருப்பதில்லை. குளம்புகளும், பக்கக் குளம்புகளும் பெரியவை. கொம்பின் முதற்கிளை கீழ் நோக்கி வளைந்திருக்கும். வாயை சுற்றி முடி இருக்கும். மேற்பகுதி கரும் பழுப்பாகவும், வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். காதும், வாலும் குட்டையாகக் காணப்படும். 1.25 மீ உயரமும், 20 கி.கி எடையும் இருக்கும்.

பயன்கள்

தொகு

லாப்லாந்து பகுதியில் பனிக்கட்டிப் பாதையில் சறுக்கு வண்டி இழுத்துச் செல்ல பயன்படுகிறது. விரவிய ஓடுவதுடன் நீண்ட தொலைவு பயணத்திற்கும் மூட்டைகளை ஏற்றிச் செல்ல பயன்படுகிறது. தோல் ஆடையாகவும், பாலும் இறைச்சியும் உணவாகவும் பயன்படுகின்றன. பொதுவாக, இவை இறைச்சி, தோல், கொம்புகள், பால் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்காகப் பயன்படுகின்றன.

பிரபலமான கிறித்துமசு தாத்தாவின் வண்டியை இழுக்க இவை பயன்படுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

இதனையும் காண்க

தொகு

மேலும் படிக்க

தொகு
  • "Caribou Census Complete: 325,000 animals" (PDF), Caribou Trails: News from the Western Arctic Caribou Herd Working Group, Nome, Alaska: Western Arctic Caribou Herd Working Group, August 2012, பார்க்கப்பட்ட நாள் 14 January 2014 This 15 page well-illustrated and highly informative August 2012 edition of the Western Arctic Caribou organization newsletter, reported the 2011 census results of the WACH, which is Alaska's largest caribou herd.

உசாத்துணை

தொகு
  1. Kurtén, Björn (1968). Pleistocene Mammals of Europe. Transaction Publishers. பக். 170–177. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4128-4514-4. https://books.google.com/books?id=OsPBXSNL8ZkC&pg=PA170. பார்த்த நாள்: 6 August 2013. 
  2. Gunn, A. (2016). "Rangifer tarandus". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T29742A22167140. http://www.iucnredlist.org/details/29742/0. பார்த்த நாள்: 24 July 2016. 
  3. Russell, D.E.; Gunn, A. (20 November 2013). Migratory Tundra Rangifer. 

நூல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

கரீபு பற்றிய இணைப்புகள் (வட அமேரிக்கா)

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவ_மான்&oldid=4174075" இலிருந்து மீள்விக்கப்பட்டது