பப்பனி (Pappani) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள சிறுவத்தி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[4][5][6] மேலும் இக்கிராமம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இக்கிராமமானது காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும், நெல் விவசாயம் இம்மக்களின் தொழில் ஆகும், தேவேந்திர குல வேளாளர் மற்றும் முத்தரையர் சமூக மக்கள் அதிகளவில் வசிகின்றனர். ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக ஜடா முனீஸ்வரன் கோவில் இருக்கிறது. இதனை ஆலமரத்து முனி என்று சொல்லப்படுகிறது. இதைபோன்று விநாயகர், சப்த கன்னி, தர்ம முனீஸ்வரர், மலையாளத்து காளி, கருப்பு போன்ற கோவில்களும் ஊருக்கு சிறப்பு அளிக்கிறது. பதினெட்டாம்படி கருப்புசாமி திருக்கோவில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கிடாய் வெட்டி திருவிழா நடைபெறுகிறது.

பப்பனி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சிவகங்கை
மக்களவை உறுப்பினர்

கார்த்தி சிதம்பரம்

சட்டமன்றத் தொகுதி காரைக்குடி
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். மான்குடி (இ.தே.கா)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. "தேவகோட்டை வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பனி&oldid=3710513" இலிருந்து மீள்விக்கப்பட்டது