பம்போர் தொடருந்து நிலையம்
பம்போர் தொடருந்து நிலையம் (Pampur railway station) (நிலையக் குறியீடு:PMPE), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் அமைந்த புல்வாமா மாவட்டத்தில் பம்போரில் உள்ளது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள 4 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். பிற மூன்று தொடருந்து நிலையங்கள் அவந்திபுரா தொடருந்து நிலையம், காக்கபோரா தொடருந்து நிலையம் மற்றும் பஞ்ச்காம் தொடருந்து நிலையங்கள் ஆகும். இந்நிலையம் ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. இந்நிலையம் வடக்கு மண்டல இரயில்வேயின் ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் உள்ளது.
இந்நிலையம் பிர் பாஞ்சல் மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து 1592 மீட்டர் உயரத்தில் உள்ளது.
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | சினார் பாக், பம்போர், புல்வாமா மாவட்டம், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) 192121 இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 33°59′56″N 74°53′42″E / 33.9988°N 74.8950°E | ||||
ஏற்றம் | 1,592.867 மீட்டர்கள் (5,225.94 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | வடக்கு இரயில்வே | ||||
தடங்கள் | ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | ஆம் | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | பயன்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | |||||
மண்டலம்(கள்) | வடக்கு இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | ஃபிரோஸ்பூர் | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 2008 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
இந்நிலையத்திலிருந்து சிறிநகர் தொடருந்து நிலையம் வழியாக தெற்கே பனிஹால் தொடருந்து நிலையம் வரையும், வடக்கில் பாரமுல்லா தொடருந்து நிலையம் வரையிலும் பயணியர் தொடருந்துகள் இயக்கப்படுகிறது. [1]