அருட்செல்வன்
வாருங்கள், அருட்செல்வன்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
சாதியற்ற தமிழ் சமுதாயம் உருவாக ஒன்று சேருவோம்
தொகுஅருட்செல்வன், விக்கிப்பீடியாவுக்கு வரவேற்கிறேன். நீங்கள் மேற்குறித்த தலைப்பில் உருவாக்கிய கட்டுரை கலைக்களஞ்சியத்துக்கு எந்த விதத்திலும் பொருத்தமற்றது. தனி வலைப்பதிவுகளுக்குப் பொருந்தலாம். எனவே இந்தக் கட்டுரையையும் மற்றும் நீங்கள் உருவாக்கிய கற்கை நன்றே!கற்கை நன்றே!பிச்சை புகினும் கற்கை நன்றே!" என்ற கட்டுரையையும் நீக்கியுள்ளேன். தகவற் களஞ்சியத்துக்கு ஏதுவான தரமான கட்டுரைகளைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.--Kanags 13:36, 14 ஜூன் 2007 (UTC)
- அருட்செல்வன், ஏதோ ஒரு கட்டுரை அல்ல, கலைக்களஞ்சிய நடையில் (அதாவது கட்டுரை நடையில்), அடிப்படையான பொருள்கள் பற்றி விளக்குமுகமாக எழுதும் கட்டுரை. உங்களுக்கு நன்றாக எழுத இயலுகின்றது. அருள்கூர்ந்து ஒரு சில கலைக்களஞ்சியகளையாவது பார்த்து எப்படி ஒரு பொருளைப் பற்றி அறிமுகம் தந்து, தொடங்கி பயனுடைய கருத்துக்களைத் தந்து விளக்கி எழுதுகிறார்கள் என்று பார்க்க வேண்டுகிறேன். ஆங்கில விக்கியிலோ பிற மொழி விக்கியிலோ சென்றும் காணலாம். உங்களை தமிழ் விக்கிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களால் நல்ல கலைக்களஞ்சிய-நடைக் கட்டுரைகள் எழுதி பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்.--செல்வா 14:20, 14 ஜூன் 2007 (UTC)
2007 ஆண்டு அறிக்கையும் கருத்து வேண்டுதலும்
தொகுகடந்த இரு ஆண்டுகளாக ஆண்டு இறுதியில் அந்த ஆண்டுச் செயற்பாடுகள் நோக்கிய ஒரு அலசலைச் செய்து தமிழ் விக்கிப்பீடியாவை மேலும் மேம்படுத்த பருந்துரைகள் செய்வது வழக்கம். இவ்வருட ஆண்டு அறிக்கை கீழே:
த.வி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அதன் பேச்சுப் பக்கத்தில் தந்தால் எமது பணிகளை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும், மேலும் சிறப்பாக வளர்க்கவும் அவை உதவும். நன்றி.
--Natkeeran 00:47, 20 டிசம்பர் 2007 (UTC)
பங்களிப்பு வேண்டுகோள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:32, 21 சூலை 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் அருட்செல்வன்,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |