வாருங்கள்!

வாருங்கள், Arunadann2, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 01:06, 10 நவம்பர் 2008 (UTC)Reply

குறிப்புகள்

தொகு

உங்கள் கட்டுரைப் பங்களிப்புகளைக் காண மகிழ்ச்சி. ஓரிரு வரிக் கட்டுரகைத் தவிர்த்து இயன்ற அளவு விரிவான கட்டுரைகளாக எழுதினால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 08:21, 22 டிசம்பர் 2008 (UTC)

அருநாடன், உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்பவர்களில் நானும் ஒருவன். 6-7 வரிகள் எழுதினாலே 2 கிலோ 'பைட் வந்துவிடும். ஆகவே கூடிய மட்டிலும் 2 கிலோ 'பைட்டுக்குக் குறைவாக இல்லாமல் எழுத முடிந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 'பைட் அளவை விட, நாம் இட்ட கட்டுரையில், 2-3 புதிய செய்திகள் நல்ல நடையில் உள்ளதா? யாரும் இந்த 4-வரி கட்டுரையைப் படித்து எதுவும் ஒரு சிறிதாயினும் பயன் பெறுவார்களா என்னும் நோக்கில் கணித்து எழுதுவது நல்லது, அல்லவா? யாரும் ஒரு வரி கட்டுரை எழுதினாலும், மற்றவர்கள் வந்து ஒரு சிறிதேனும் வளர்த்தெடுத்தல் நல்லது. இதுபோல் பல முறை நான் செய்திருக்கின்றேன். அந்த ஒரு வரி கட்டுரை ஒரு தூண்டுகோலாக, அதைப்பற்றி நாமும் தெரிந்து கொண்டு, மேலும் பங்களிக்க ஒரு வாய்ப்பாக நாம் கருதலாம். வேறு யாரும் ஒரு வரி கட்டுரை எழுதினாலும் இவ்வாறு நீங்கள் பங்களிக்க வேண்டுகிறேன். நான் இங்கு சிறு குறிப்பாக இட்டதே எத்தனை 'பைட்டுகள் என்று பாருங்கள் :) --செல்வா 13:32, 22 டிசம்பர் 2008 (UTC)

2,991 'பைட்டு என்று கணக்கிட்டுள்ளது.--செல்வா 13:34, 22 டிசம்பர் 2008 (UTC)

2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்

தொகு

வணக்கம் கணேஷ்:

உங்கள் மடலுக்கு நன்றி. பதில் அனுப்பி உள்ளேன்.

நாம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் பற்றி கருத்துக் கோருவோம். மேலும் விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

100000 சொற்கள் கொண்ட தமிழ் விக்சனரி

தொகு
  • அருநாடன், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
  • தமிழ் விக்சனரியில் அனைத்து துறைகள் சார்ந்த 100 000 சொற்கள் ஏற்கனவே உண்டு. மேலும் சொற்களை விக்கி முறையிலேயே இலகுவாக தொகுக்கலாம்.
  • தமிழ் விக்சனரி இணைப்பு - http://ta.wiktionary.org/

--Natkeeran 04:42, 28 டிசம்பர் 2008 (UTC)

2010 செயற்திட்டம்

தொகு

வணக்கம் அருநாடன்:

சில காலங்களுக்கு பின்பு உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் சென்னையில் பயிற்சி கொடுக்க முடியுமா?

உங்களது கருத்துக்களையும் இங்கு பதியுங்கள். நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 02:57, 19 டிசம்பர் 2009 (UTC)

விக்கிப்பீடியா விளக்கக் குறுநூல்

தொகு

அன்பர்களே....!!

விக்கிப்பீடியா பற்றிய ஒரு குறுநூல் உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். இந்நூலை நல்லேர் பதிப்பகம் பதிப்பிக்க முன்வந்துள்ளது. இந்நூல் விக்கிப்பீடியா பற்றிய அடிப்படைகளை விளக்கும் விதமாகவும், 20-25 பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். முக்கியமாக புதிய பயனர்கள் எவ்வாறு புதிய கட்டுரைகளை உருவாக்குவது என்பது குறித்து இருக்க வேண்டும். இதற்கு தற்போதைய பயனர்கள் தங்களால் ஆன உதவியை (volunteering) செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • தமிழ் விக்கிப்பீடியா எனும் தலைப்பில் நான் எழுதிய நூல் டெம்மி அளவில் 169 பக்கங்களில் சென்னை, மணிவாசகர் பதிப்பகத்தால் அச்சிடப்பட்டு விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளது. அப்பதிப்பகத்தினர் பள்ளி மாணவர்களுக்கான உரை நூலான வெற்றி துணைவன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியிடுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டு வருகிறது. இம்மாதத்தில் வெளியிடப்படலாம். --Theni.M.Subramani 08:36, 4 மே 2010 (UTC)Reply

மால்?

தொகு

சாப்பிங் மால் என்பதற்கு பேரங்காடியா? -- மாஹிர் 12:33, 5 ஜூன் 2010 (UTC)

அடையாள அட்டைக்கான தகவல்கள்

தொகு

அருநாடன்,

  • நீங்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கின்றீர்களா? உங்களுக்கு அடையாள அட்டை வேண்டுமா? ஆம் எனில், கீழுள்ள படி செய்யுங்கள்.
  • கீழ்க்காணப்படும் URL -ஐ ஒற்றி புதிய URL-இல் ஒட்டவும்; பின்னர் Enter செய்தால் ஒரு பக்கம் வரும். அதில் உங்களைப் பற்றிய சில தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். அவற்றை உள்ளிட்டு விட்டு Update செய்யவும்.
  • மின்னஞ்சல் முகவரி என்னுடையதாக இருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். --பரிதிமதி 17:42, 18 ஜூன் 2010 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:54, 21 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Arunadann2,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பதிப்புரிமை மீறல்

தொகு
 

வணக்கம், Arunadann2!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntonTalk 23:59, 21 அக்டோபர் 2014 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arunadann2&oldid=3183948" இலிருந்து மீள்விக்கப்பட்டது