வலைவாசல்:பரதநாட்டியம்

தொகு

வணக்கம் ஆதவன்!
தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்!

  • இந்த வலைவாசலின் பக்கத்தினை அமைப்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால்... நீங்கள் என்னைக் கேட்கலாம்.
  • ஒரு ஆலோசனை: பரதநாட்டியம் குறித்த கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனவா என்பதனையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:25, 24 சூன் 2013 (UTC)Reply
பரதநாட்டிய வலைவாசலினை அமைப்பதற்கு வாழ்த்துகள். மிகப்பெரும் வலைவாசலாக மாறக்கூடிய தலைப்பு, எனவே வேண்டிய கட்டுரைகள் என தலைப்பிட்டு தேவைப்படும் கட்டுரைகளை பட்டியலிடுங்கள். மேலும் நடனராஜனான சிவபெருமானின் தாண்டவங்களான நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் பரதத்தின் 108 கர்ணங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. அத்துடன் சிவதாண்டவங்களும் இந்த வகையில் அமையும் எனவே, இந்த வகையான கட்டுரைகளை உருவாக்கி தருகிறேன். அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:02, 24 சூன் 2013 (UTC)Reply

தாங்கள் கோரிக்கை வைத்தவாறு பரதநாட்டிய வலைவாசலின் வடிவமைப்பினை செய்துள்ளேன் நண்பரே. தற்போதைக்கு ஒரு நிறம் கொடுத்துள்ளேன். அவற்றினை தங்களுடைய எண்ணப்படி மாற்றிக் கொள்ளவும். தாங்கள் அமைத்திருந்த வலைவாசல் முகப்பு 15 இன்ச் ஸ்ரின் கொண்ட என் மானிட்டருக்கு வெளியே சென்றது. அதனால் முகப்பு படமொன்றை இணைத்துள்ளேன். இனி தங்களுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கட்டுரைகளை இணைத்துக் கொள்ளலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:08, 24 சூன் 2013 (UTC)Reply

நன்றி (இணைய) நண்பரே --::) # நி $ ஆதவன் # ( உரையாட ) 16:11, 26 சூன் 2013 (UTC)Reply
வாழ்த்துக்கள் ஆதவன், உங்கள் கையொப்பம் சிறப்பாக உள்ளது. கலக்கல் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:20, 26 சூன் 2013 (UTC)Reply
நன்றி தமிழ்க்குரிசில்--:) # நி $ ஆதவன் # ( உரையாட ) 16:27, 26 சூன் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறந்த நகைச்சுவை உணர்வாளர் பதக்கம்
கட்டுரைப் போட்டியின் பேச்சுப் பக்கம் பார்த்தேன். என்னத்த சொல்றது. என்னை நல்ல திணறத் திணறக் கலாய்ச்சிட்டீங்க.

முடியல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:49, 28 சூன் 2013 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டதுReply


  விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:48, 29 சூன் 2013 (UTC)Reply

  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:40, 28 சூலை 2013 (UTC)Reply
இருந்த வேளைகளில் மொத்தம் கட்டுரைப்போட்டியில் செலவழித்து இப்போ பேச்சுப் பக்கத்தில் புலம்ப வேண்டியதைப் போயிற்று.இனி சற்று பரதநாட்டிய கட்டுரைகளை உருவாக திட்டம். அஹ் -- :) # நி $ ஆதவன் # ( உரையாட ) 07:31, 29 சூன் 2013 (UTC)Reply
பரதநாட்டியம் பற்றி போதுமான கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் இல்லை. எனவே மொத்த பணிசுமையையும் தாங்களே ஏற்க வேண்டியிருக்கும். நூலகத்தில் சில பரதம் சம்மந்தமான நூல்களைக் கண்டேன். தங்களுக்கு உதவக்கூடும். [1]. பெரும்பணியை செம்மையாய் செய்து முடிக்க வாழ்த்துகள் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:48, 29 சூன் 2013 (UTC)Reply

நன்றி ஆதவன் உங்கள் ஆதரவு என்றும் தேவை எனக்கு

வணக்கம், Aathavan jaffna/தொகுப்பு 1!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 05:38, 2 சூலை 2013 (UTC)Reply

2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013

தொகு

தேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:06, 5 சூலை 2013 (UTC)Reply

சரி, பட்டையைக் கெளப்ப வேண்டியது தான். :) -- :) நிஆதவன் ( உரையாட ) 09:02, 5 சூலை 2013 (UTC)Reply
ஆமாம். போன தடவை விட்டதை இந்த தடவை பிடித்தே ஆக வேண்டும் :)--அராபத் (பேச்சு) 09:54, 5 சூலை 2013 (UTC)Reply
அவ்வளா ஆசை கிடையாது.எனினும் பட்டியலில் தலைப்புக்கள் போதாது.-- :) நிஆதவன் ( உரையாட ) 15:10, 5 சூலை 2013 (UTC)Reply

மணல்தொட்டி

தொகு

ஆதவன், உங்களுக்கென மணல்தொட்டியை உங்கள் பயனர் வெளியில் ஆரபிக்க வேண்டும். விக்கிப்பீடியா வெளியில் அல்ல. உங்கள் மணல்தொட்டி இங்குள்ளது.--Kanags \உரையாடுக 01:21, 14 சூலை 2013 (UTC)Reply

பகுப்புகள்

தொகு

ஆதவன், பகுப்புகளுக்கு கட்டுரைகள் போன்று வழிமாற்று ஏற்படுத்த முடியாது. புதிய பகுப்பை ஏற்படுத்தி விட்டு, பழைய பகுப்பை நீக்க வேண்டும். நீங்களே புதிய பகுப்பை ஆரம்பித்து பழைய பகுப்பில் உள்ள கட்டுரைகளைப் புதிய பகுப்பில் சேருங்கள். பின்னர் பழைய பகுப்புக்கு delete வார்ப்புருவை இணைத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 12:57, 21 சூலை 2013 (UTC)Reply

நன்றி கனக்ஸ்.இது எனக்குத் தெரியாது.அவ்வாறே செய்கிறேன்.-- :) நிஆதவன் ( உரையாட ) 13:01, 21 சூலை 2013 (UTC)Reply

வலைவாசல் படம்

தொகு

தற்போது கட்டுரைகளில் பரத வலைவாசலை இணைப்பதைக் கண்டேன். அவற்றில் படம் விடுபட்டுள்ளது. எனவே வார்ப்புரு:வலைவாசல்/Images/சைவம் என்ற பக்கத்தில் உள்ளது போல பரதநாட்டிய வலைவாசலுக்கு உகந்த படிமத்தின் பெயரை வார்ப்புரு:வலைவாசல்/Images/பரதநாட்டியம் என்பதில் இணைத்திடுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:40, 21 சூலை 2013 (UTC)Reply

நன்றி நண்பரே! . புதிதாகவே பழகுகிறேன்.அப்படியே செய்கிறேன்.-- :) நிஆதவன் ( உரையாட ) 02:57, 22 சூலை 2013 (UTC)Reply

வாழ்த்துகள்

தொகு

இவ்வளவு இளவயதில் விக்கிப்பீடியாவில், அதுவும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒருவர் கட்டுரையைத் தொகுக்கக் கற்பதே அதிசயமான ஒன்று! அதிலும் புலமை மிக்கோர் எழுதத் தகுந்த தலைப்புகளில் நீங்கள் எழுதுவது மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகிறது. நீங்கள் தொடங்கியுள்ள பரத நாட்டிய வலைவாசல் மிக அருமையாக உள்ளது. தோற்றத்திற்கு சற்றும் குறைந்ததல்ல அதன் உள்ளடக்கம். :) வாழ்த்துகள் ஆதவன். சிறப்பு :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:17, 27 சூலை 2013 (UTC)Reply

நன்றி தமிழ்க்குரிசில் , நீங்களும் பரதநாட்டிய கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள் என்பது மகிழ்ச்சி (அலாரிப்பைப் பார்த்தேன்), மேலும் பல கட்டுரைகளை உருவாக்கித்தர வேண்டுகிறேன். பரதநாட்டியம் சம்பந்தமான கட்டுரைகளை விக்கியில் காணக்கிடைப்பதே அரிது போல் உள்ளது.பரதநாட்டிய வலைவாசலின் கருத்துக்களை கூறவும். குறைகளை நிவர்த்திசெய்வோம். -- நி ♣ ஆதவன் ♦   (உரையாட படத்தை சொடுக்கவும்)) 12:27, 28 சூலை 2013 (UTC)Reply

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Aathavan jaffna/தொகுப்பு 1!

 

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 08:27, 3 ஆகத்து 2013 (UTC)Reply

மிக்க நன்றி ரவி :) -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 09:15, 3 ஆகத்து 2013 (UTC)Reply

வணக்கம் ஆதவன்,

தொகு

வணக்கம் ஆதவன், உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, எனக்கு இங்கே இந்த கட்டுரை உருவாக்குவதில் உங்களுடைய உதவி கண்டிப்பாக தேவைப்படுகிறது. , நான் விக்கிபீடியாவிற்கு புதியவன் என்பதால் எனக்கு சில சில குழப்பங்கள் இருக்கிறது. உங்களுக்கு என்னுடன் ஸ்கைப் இல் தொடர்பு கொண்டு பேச முடியுமா? Baabuji இதுதான் என்னுடைய ஸ்கைப் முகவரி உங்களுக்கு எந்த நேரத்தில் வரமுடியும் என்று என்னுடைய இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்புங்கள், அந்த நேரத்தில் நானும் உங்களுடன் இணைந்து இந்த கட்டுரைகளை சரியான முறையில் வடிவமைப்போம். மின்னஞ்சல் - Baabuji@gmail.com

நன்றி, அன்புடன் நா. பாபுஜி Baabuji (பேச்சு) 05:50, 6 ஆகத்து 2013 (UTC)Reply

பதிப்புரிமை மீறல்

தொகு

பதிப்புரிமை மீறல் உள்ள (வலைப்பதிவு, வலைப்பூ, நூல்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டவை) உள்ளடக்கங்களைச் சேர்க்க வேண்டாம். திராட்சை கட்டுரையில் இருந்து நீக்கியுள்ளேன். மற்றவர்களால் தொகுக்கப்பட்டால் {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}} இவ்வார்ப்புருவை அவர்கள் பேச்சுப் பக்கத்தில் இட்டு, குறிப்பிட்ட பகுதியை அகற்றிவிடுங்கள். கட்டுரை முழுவதும் பதிப்புரிமை மீறல் எனின் நீக்கல் வார்ப்புருவை இடுங்கள். --Anton (பேச்சு) 12:33, 6 ஆகத்து 2013 (UTC)Reply

சரி, அன்டன் மிக்க நன்றி -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 13:56, 6 ஆகத்து 2013 (UTC)Reply

நன்றி

தொகு

மிக்க நன்றி. நந்தினிகந்தசாமி

பதக்கம்

தொகு
  விக்கிப்பீடியா ஊக்குவிப்பாளர் பதக்கம்
Nandhinikandhasamy (பேச்சு) 08:03, 10 ஆகத்து 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி 'சூறாவளி' நந்தினி அவர்களே! -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 15:09, 15 ஆகத்து 2013 (UTC)Reply

பக்கத்தின் பெயரை மாற்றுதல் - நூல்கள்

தொகு

நூல்களின் பக்கத்தின் பெயரை மாற்றும்போது எல்லாவற்றுக்கும் <பக்கத்தின் பெயர்> (நூல்) என்று இருக்கத் தேவையில்லை. எ.கா: இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு என்ற கட்டுரையினை "நூல்" எனக் குறிப்பிடத் தேவையில்லை. இலங்கைத் தமிழர் என்ற நூல் இருந்தால் இலங்கைத் தமிழர் (நூல்) என்று மாற்றுவது பிரதான கட்டுரையில் இருந்து வேறுபடுத்திக் காட்டும். மாற்றுவது கட்டாயம் என உணர்ந்தால் குறித்த கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கலந்துரையாடவும். --Anton (பேச்சு) 05:32, 14 ஆகத்து 2013 (UTC)Reply

சரி அன்டன், அது இலங்கைவரலாறு எனும் பகுப்பின் கீழ் இருந்தது. ஆகையால் வரலாறாக இருக்குமெனப் பார்த்தேன். ஆனால் நூல். ஆகையால் அவ்வாறு நகர்த்தினேன். மன்னிக்கவும்.-- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 07:21, 14 ஆகத்து 2013 (UTC)Reply
இது ஒரு வழிகாட்டலே, மன்னிப்பு கேட்கும் அளவிற்கல்ல :)

மேலும், நீங்கள் தொகுத்த 10 மேற்பட்ட கட்டுரைகளில் பதிப்புரிமை மீறல் இருந்தது. வேறு வலைத்தளங்கள், வலைப்பூக்களில் இருந்து அப்படியே நகல் செய்து இங்கு பயன்படுத்த முடியாது. வரும்நாட்களில் இதைக் கவனத்திற் கொள்ளுங்கள். நன்றி. --Anton (பேச்சு) 08:16, 14 ஆகத்து 2013 (UTC)Reply

ஆம் அன்டன் , கட்டுரைபோட்டியின் போது அவ்வாறு செய்திருந்தேன், பின் ஒருவரது பேச்சுப் பக்கத்தில் பதிப்புரிமை மீறல் விளக்கம் கண்டு அதை நிறுத்திவிட்டேன். அதன் பின் அவ்வாறு செய்வதை நிறுத்தியும் விட்டேன், இடைஞ்சலுக்கு மன்னிக்கவும், தங்கள் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி அன்டன் -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 15:14, 15 ஆகத்து 2013 (UTC)Reply
புரிதலுக்கு நன்றி ஆதவன். மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை. பிழையில் இருந்துதான் எல்லோரும் கற்றுக் கொள்கிறோம். --Anton (பேச்சு) 07:19, 16 ஆகத்து 2013 (UTC)Reply
  விருப்பம் -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 09:46, 16 ஆகத்து 2013 (UTC)Reply
    ஆதவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.(பயனர் பேச்சு:muthuppandy pandian)

கட்டுரைக் வேண்டுதல்

தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. குறிப்பாக பின்வரும் தலைப்புக்கள்:

  • தமிழ் விக்கியூடகங்களை மாணவர்கள் எப்படிப் பயன்படுத்தலாம்
  • தமிழ் விக்கியூடகங்கள் மாணவர்களுக்கு எப்படி உதவலாம்
  • இலங்கையில் தமிழ் விக்கியூடகங்களின் வளர்ச்சியும் வாய்ப்புக்களும்

400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)Reply

நல்ல தலைப்புத் தெரிவு. கட்டுரையை ஆர்வலுடன் எதிர்பாக்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:52, 20 ஆகத்து 2013 (UTC)Reply

தங்களது அறிவுரைக்கு நன்றி

தொகு

அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில். இப்பக்கத்தின், தலைப்பை மாற்றியமைப்பது பற்றி தங்களது கோரிக்கையினை ஏற்கின்றேன். தங்களது அறிவுரைக்கு நன்றி... User:Saba rathnam

Return to the user page of "Aathavan jaffna/தொகுப்பு 1".