குறிப்பு:

இது எனது பயனர் பேச்சு. ஏனைய பயனர்கள் தங்களது கருத்துக்களைத் தயக்கம் ஏதுமின்றி என்னுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


பயனர்:Aravinth.bios
     
பயனர் பேச்சு:Aravinth.bios
     
பயனர்:Aravinth.bios/திட்டம்
     
பயனர்:Aravinth.bios/கட்டுரைகள்
     
பயனர்:Aravinth.bios/படிமம்
     
பயனர்:Aravinth.bios/பதக்கங்கள்
     
Special:Emailuser/Aravinth.bios
     
பயனர்:Aravinth.bios/மணல்தொட்டி
 
முகப்பு
     
பேச்சு
     
திட்டங்கள்
     
கட்டுரைகள்
     
படிமங்கள்
     
பதக்கங்கள்
     
மின்னஞ்சல்
     
மணற்றொட்டி
     
அடியேனின் பணிவான வேண்டுகோள்தொகு

வணக்கம் அரவிந். நீங்கள் மரவட்டை பற்றிய கட்டுரைப் பகுதியை ஆலமரத்தடியில் இட்டிருந்தீர்கள். ஆலமரத்தடியில் கருத்தாடிய பின் கட்டுரை எழுதவேண்டியதில்லை. எனவே நேரடியாக கட்டுரையை எழுதலாம். ஏதும் சந்தேகங்கள் உதவிகள் தேவையாயின் தயங்காமல் கேட்கலாம். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:54, 17 மே 2012 (UTC)


அரவிந்த், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நானும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் குதிரைலாட நண்டு பற்றிய கட்டுரை மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். ஆலமரத்தடியில் நீங்கள் இட்ட மரவட்டை பற்றிய கட்டுரை அழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அதன் பிரதி உங்களிடம் இல்லாவிட்டால் அதனை இங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம். மரவட்டை என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தொடங்குங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 01:11, 19 மே 2012 (UTC)


முதல் கட்டுரையே பிரமாதமாக எழுதமுடியும் என்று காட்டிவிட்டீர்கள். ஒவ்வொரு சுட்டியையும் இது போன்று சரியான தமிழ்ப்பக்கத்திற்கு இணைத்திருப்பதைப் பார்த்தால் உங்கள் உழைப்பு தெரிகிறது. அனிமலியா, ஆர்த்திரப்போடா, போன்றவைகளுக்கு சரியான தமிழ்ச் சொற்களை நீங்களே கண்டுபிடித்தப்பின் ஆங்கில பெயர்கள் தமிழ் கட்டுரையில் வேண்டாம் என நினைக்கிறேன். விலங்கினம், Arthropoda-கணுக்காலிகள், Chelicerata -கணுக்கொடுக்கி என்றேயிருக்கலாம். வாழ்த்துகள்--நீச்சல்காரன் (பேச்சு) 01:56, 19 மே 2012 (UTC)


பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
குதிரைலாட நண்டு என்ற முதற்கட்டுரையைச் சிறப்பாக எழுதியமைக்காக இப்பதக்கம்! மதனாகரன் (பேச்சு) 02:42, 19 மே 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


தங்கள் முதல் கட்டுரையே முதற்பக்கக் கட்டுரை போல் உள்ளதே வாழ்த்துக்கள். நீங்கள் எந்தத்துறையை சேர்ந்தவர் என்று உங்கள் பயனர் பக்கத்தில் கொடுத்தால் நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:25, 19 மே 2012 (UTC)


அகணிய உயிரிகள்தொகு

நீங்கள் எழுதும் கட்டுரைகளைப் பார்க்கும் போது உயிரியல் துறையார்வம் கொண்டவர் எனத் தெரிகிறது. அந்த வீதத்தில் இந்திய இலங்கை அகணிய உயிரிகளை பற்றி எழுதினால் உதவியாய் இருக்கும். ஆங்கில கட்டுரைகளில் கூட சில அகணிய இந்திய இலங்கை உயிரிகளை வகைப்படுத்தவில்லை. அதனால் உங்களை அகணிய உயிரிகள் பற்றி எழுத வேண்டுகிறேன்.

இவ்வாங்கிலப்பகுப்புகளை பார்க்க.

  1. en:Category:Endemic fauna of Sri Lanka
  2. en:Category:Endemic fauna of India--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:44, 19 மே 2012 (UTC)


குதிரைலாட நண்டு கட்டுரைதொகு

வணக்கம் அரவிந்த், குதிரைலாட நண்டு கட்டுரையில் விக்கிக்கேற்ப சிறு உரை திருத்தங்கள் செய்துள்ளேன். கட்டுரையை மிக அருமையாக வார்த்தெடுத்துள்ளீர்கள். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:35, 19 மே 2012 (UTC)


சுருக்கம் - விளக்கம்தொகு

தாங்கள் குதிரைலாட நண்டு கட்டுரையைச் சிறப்பாகத் தொகுத்து வருகிறீர்கள். மகிழ்ச்சி. தாங்கள் இக்கட்டுரையில் ஒவ்வொரு முறையும் தொகுக்கும் பொழுது கீழுள்ள சுருக்கம் கட்டத்தினுள் குதிரைலாட நண்டு அரவிந் சுகுமார் என்று குறிப்பிட்டு வருகிறீர்கள். இது நீங்கள் தொகுக்கும் கட்டுரைப் பகுதியின் சுருக்கம் குறித்தோ அல்லது நீங்கள் தெரிவிக்க விரும்பும் சிறு தகவல் குறித்தோ குறிப்பிடுவதற்குரிய இடம். இந்த இடத்தில் தாங்கள் இவற்றை மற்றும் குறிப்பிடுங்கள். தங்கள் பெயரையோ கட்டுரையின் பெயரையோ குறிப்பிட வேண்டாம். தாங்கள் தொகுக்கும் ஒவ்வொரு தகவலும் தங்கள் தொகுப்பு விவரத்துடன் கட்டுரையின் வரலாற்றைக் காட்டவும் பக்கத்தில் இடம் பெற்றுவிடும். எனவே இனி இத்தவறு நிகழாதவாறு தொடர வேண்டுகிறேன். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:41, 19 மே 2012 (UTC)


பதில்கள்தொகு

சஞ்சீவி சிவகுமார் தங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து எழுதுவேன். ஆங்கிலப் பக்கங்களிற் கிடைக்கும் அத்தனை தகவல்களும் ஒன்றுவிடாமல் தமிழிலும் கிடைக்கவேண்டும் என்பதே எனது குறிக்கோள். அதற்காகவே குதிரைலாட நண்டுக் கட்டுரையில் அத்தனை தகவல்களையும் உள்ளடக்கியதோடு, எனது வரிகள் சிலவற்றையும் சேர்த்தேன். மேலும் wikimedia இற் தேடி நிறையப் படங்களையும் சேர்த்தேன். தொடர்ந்து எழுதுவேன். நன்றி. --அரவிந் சுகுமார் (பேச்சு) 15:55, 20 மே 2012 (UTC)


Kanags மரவட்டை ஆரம்பம் மீண்டும் கிடைக்குமாறு செய்ததற்கு மிக்க நன்றி. அதை விரைவில் எழுதி முடித்து விடுவேன். தங்கள் உதவிக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி. --அரவிந் சுகுமார் (பேச்சு) 16:23, 20 மே 2012 (UTC)


நீச்சல்காரன் நன்றி. மேலும் ஒரு தகவலைப் புதிதாகச் சேர்த்துள்ளேன். அந்தச் சொற்களுக்கு அவை அங்கீகரிக்கப்பட்ட பெயர்களா எனத் தெரியவில்லை. எனவேதான் இலங்கைப் பாடத்திட்டத்தில் உள்ளபடி பயன்படுத்தினேன். இலங்கையில் ஆங்கில விஞ்ஞானச் சொற்களுக்கு அருமையான தமிட் சொற்களைப் பயன்படுத்துவர். உதாரணமாக tissue எனும் ஆங்கில வார்த்தையை இந்தியாவில் அப்படியே திசுக்கள் என்று பாவிக்கும்போது, இலங்கைப் பாடத்திட்டத்தில் அதற்கு இழையம் எனும் சொல் பாவிக்கப்படுகிறது. இருப்பினும் இதுபோன்ற சில சொற்களுக்கு மட்டும் ஆங்கிலச் சொற்களே நேரடியாகப் பயன்படுத்தப் படுகிறது. Glossary இலும் அவ்வாறே உள்ளது. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. --அரவிந் சுகுமார் (பேச்சு) 15:55, 20 மே 2012 (UTC)


மதனாகரன் தங்கள் பதக்கத்துக்கு நன்றி மதனாகரன். இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மிக்க நன்றி. --அரவிந் சுகுமார் (பேச்சு) 15:55, 20 மே 2012 (UTC)


தென்காசி சுப்பிரமணியன் தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. எனது பயனர் பக்கத்தில் வெகு விரைவில் என்னைப் பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்கிறேன். நான் இலங்கையைச் சேர்ந்தவன். சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவில். தற்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தகவற் தொழினுட்பத் துறையில் பயின்று வருகிறேன். அது தவிர அதே துறையில் வேறு ஒரு படிப்பினையும் மேற்கொண்டு வருகிறேன். எனக்குச் சிறுவயது முதலே பலதுறைகளில் ஆர்வமுண்டு. நிறைய புத்தகங்கள் படிப்பேன். தாங்கள் கூறியது போல உயிரியற் துறையில் மிகுந்த ஆர்வம் உண்டு. அத் துறையிற் படித்து ஒரு இயற்கையியலாளனாக வரவேண்டும் என விரும்பினேன். இருந்தும் பல்வேஎறு காரணங்களால் அது இயலாமற் போய்விட்டது. இருந்தும் தற்போதும் நம்பிக்கை உள்ளது. தாவரங்கள் பற்றிக் கற்பதை சிறுவயது முதல் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளேன். பாகுபாட்டியலிலும், நுண்ணங்கியியலிலும் ஆர்வமுண்டு. Astrophysics, Quantum Physics, Cosmology, Astronomy போன்ற துறைகளில் மிகுந்த ஆர்வமுண்டு. கவிதை மற்றும் இலக்கியங்களில் சிறுவயது முதல் ஆர்வமுண்டு. கவிதை (ஆங்கிலம், தமிழ்) எழுதுதல், ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல், புத்தகங்கள் போன்றன பொழுதுபோக்குகள். இருந்தும் இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்ற எண்ணம் எப்போதும் உள்ளது. ஒரு துறையில் குறிப்பாகக் கவனம் செலுத்த முடியவில்லை. என் முகப்புத்தகத்தில் இணையலாமே. என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள. https://www.facebook.com/hello.ara கடந்த மாதம் என் முகப்புத்தக cover photos இல் இலங்கைக்கு உரித்தான உள்நாட்டுப் பறவைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்தேன். தங்களது வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறேன். நேரம் மட்டுமே பிரச்சினை. கண்டிப்பாக எழுதுவேன், நன்றி --அரவிந் சுகுமார் (பேச்சு) 15:55, 20 மே 2012 (UTC)


பார்வதிஸ்ரீ தாங்கள் செய்த மாற்றங்கள் கட்டுரை வாசிப்பை இலகுவாக்கி உள்ளது. நன்றி. அதை மேலும் இலகுவாக்க ‘உறை கழற்றல்’ பற்றிய ஒரு அறிமுகத்தைப் புதிதாகச் சேர்த்துள்ளேன். தற்போது கட்டுரை ஆங்கிலக் கட்டுரையை விட அதிக தகவல்களுடன் உள்ளது என நம்புகிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி. --அரவிந் சுகுமார் (பேச்சு) 15:55, 20 மே 2012 (UTC)


தேனி.எம்.சுப்பிரமணி. தவறினைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இதுவே எனது முதலாவது தடவை என்ற படியால் இது பற்றித் தெரிந்திருக்கவில்லை. இனிவருங் காலங்களில் இது நிகழாமற் பார்த்துக்கொள்வேன். தற்போது இதன் எல்லா அம்சங்களையும் பயின்று வருகிறேன். மேலும் ஏதாவது பிழைகள் இருப்பின் தயங்காது சுட்டிக்காட்டவும். நன்றி. --அரவிந் சுகுமார் (பேச்சு) 15:55, 20 மே 2012 (UTC)


அடுத்த கட்டுரைதொகு

எனது அடுத்த கட்டுரையை ஆரம்பித்து விட்டேன். தலைப்பு: புவியின் எதிர்காலம்

மிக நீண்ட கட்டுரை என்ற படியால் படிப்படியாகவே எழுத முடியும். நான்கைந்து நாட்களுக்குள் முடித்துவிடுவேன் என நம்புகிறேன். சென்ற ஆக்கத்தைப் போலவே ஆங்கிலத்தில் உள்ள அத்தனை தகவல்களையும் உள்ளடக்கியதாக அமையும். கட்டுரைக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்--அரவிந் சுகுமார் (பேச்சு) 15:55, 20 மே 2012 (UTC)


பயனர் பக்கம்தொகு

நல்லது அரவிந். உங்களைப் பற்றி அறிய ஆசை. பயனர் பக்கத்தில் விபரங்களை தந்தால் மகிழ்வோம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:09, 19 மே 2012 (UTC)


வணக்கம் அரவிந்த். இரண்டு கட்டுரைகளுமே அருமையாக எழுதியுள்ளீர்கள், வாழ்த்துகள். facebook ல் நிறைய படங்களைப் பதிவேற்றியுள்ளதை பார்த்தேன். அவை உங்களுடைய ஆக்கம் எனில் இங்கு பதிவேற்றினால் வேண்டிய கட்டுரைகளுக்கு நீங்களோ அல்லது மற்றவர்களோ பயன்படுத்திக் கொள்ளலாம். கையொப்பம் இட ~~~~ இந்த குறியைப் அல்லது படிமம்:Signature button.png இந்த பொத்தானை பயன்படுத்தவும் (உரையாடல் பக்கங்களில் மறக்காமல் கையொப்பம் இடவும்). மேலும் இங்கு உங்களுக்கு தேவையான விருப்பத்தேர்வுகளை தேர்வுசெய்து கொள்ளலாம் (கையொப்பத்தை மாற்ற வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்). ஏதேனும் உதவி தேவைப்படின் தயங்காமல் கேட்கவும்.--சண்முகம் (பேச்சு) 02:24, 20 மே 2012 (UTC)


உங்கள் அறிவியல் நடை மிக ஈர்ப்பு உடையதாகவும், எளிமையாகவும் அதே வேளை துல்லியமாகவும் உள்ளது. புவியின் எதிர்காலம் பற்றிய கட்டுரை ஆவலுடன் படித்துவருவேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:51, 20 மே 2012 (UTC)


பதில்கள்தொகு

நிச்சயமாக -சஞ்சீவி சிவகுமார். இன்னும் ஓரிரு தினங்களுள் எனது பயனர் பக்கத்தினை வடிவமைத்து விடுவேன். சில பயனர்களின் பக்கங்களைப் பார்வையிட்டதன் மூலம் அது எப்படி அமைய வேண்டும் எனத் தெரிந்துகொண்டேன்.--அரவிந் சுகுமார் (பேச்சு) 16:23, 20 மே 2012 (UTC)


உங்கள் வாழ்த்துக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி சண்முகம். என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விக்கிப்பீடியாவிற்குப் பயன்படும் எனத் தோன்றும் படங்களை நிச்சயம் இங்கே பதிவேற்றுவேன். இணைப்புகளைத் தந்து வழிகாட்டியமைக்கு நன்றி.--அரவிந் சுகுமார் (பேச்சு) 16:23, 20 மே 2012 (UTC)


நன்றி Natkeeran. நடை சிறுவயதிலிருந்தே பல புத்தகங்களை வாசித்து வருவதாலும், இலங்கைக் கல்விமுறையில் பயன்படுத்தப்படும் அற்புதமான வார்த்தைகள் மற்றும் நடையின் பாதிப்பினாலும் வந்தது. கட்டுரையை வெகு விரைவில் முடித்து விடுவேன்.--அரவிந் சுகுமார் (பேச்சு) 16:23, 20 மே 2012 (UTC)


புவியின் எதிர்காலம்தொகு

இக் கட்டுரையின் நீண்ட அறிமுகப் பகுதியை எழுதி முடித்துவிட்டேன். சரியாக எழுதப்பட்டுள்ளதா எனத் தெரிவித்தால், கட்டுரையின் மையப் பகுதியை எழுதுவதற்கு உதவியாகவிருக்கும். ஆங்கிலக் கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். கட்டுரைக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்--அரவிந் சுகுமார் (பேச்சு) 22:58, 20 மே 2012 (UTC)

எழுதுவது அனைத்தும் முதற்பக்கக் கட்டுரை அளவுதான் எழுத வேண்டும் என்று முடிவெடுத்துதான் எழுதுவீர்கள் போலும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:40, 12 சூலை 2012 (UTC)

தென்காசி சுப்பிரமணியன் எதிலும் ஒரு முழுமை இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன் நான். பழகிவிட்டது. முழுமையில்லாத ஒரு கட்டுரையால் யாருக்கு என்ன பயன்? விக்கிப்பீடியாவில் ஒரு விடயத்தைத் தேடி வருபவர்கள் அரை குறையான கட்டுரைகளால் பயனடையப்போவதில்லை. தாங்கள் இக் கட்டுரையை பகுதிகளாகப் பிரித்திருப்பதைப் பார்த்தேன். தாங்கள் பிரித்த பகுதி கட்டுரையின் அறிமுகப் பகுதியே. எனவே அதைப் பிரிப்பது தேவையில்லை. கட்டுரை ‘மனிதனாலேற்படும் தாக்கங்கள்’ இலிருந்தே தொடங்குகிறது. அறிமுகப் பகுதியில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் உள்ளே விரிவாக எழுதப்படும். எனவே முதலே பிரிப்பது தேவையில்லை. நான் ஏற்கனவே கூறியது போல் இது மிக நீண்ட கட்டுரை. உதாரணத்திற்கு இதன் ஆங்கிலக் கட்டுரையைப் பார்க்கவும். அதிலுள்ள அத்தனை விடயங்களும், மேலதிக குறிப்புகளுடன் சேர்க்கப்படும். தொடர் பரீட்சைகள் காரணமாக எழுதுவதைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளேன். பரீட்சைகள் முடிந்தவுடன் மறுபடியும் முழு வீச்சுடன் எழுதுவேன். நேரம் ஒரு பிரச்சினையே.--அரவிந் சுகுமார் (பேச்சு) 15:19, 12 சூலை 2012 (UTC)


முதற்பக்கக் கட்டுரைதொகு2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersதொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aravinth.bios&oldid=3183940" இருந்து மீள்விக்கப்பட்டது