வாருங்கள், Gaayathiri!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Ravidreams 23:34, 19 பெப்ரவரி 2007 (UTC)

Gaayathiri, உங்கள் வரவு நல்வரவாகுக. நீங்கள் த.விக்கு வந்தவுடன் ஆக்கியிருந்த ஏரல் கடல், கஸ்பியன் கடல் ஆகியவை நல்ல ஆக்கங்கள். இயன்ற அளவு தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--செல்வா 13:27, 20 பெப்ரவரி 2007 (UTC)

தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள். --கோபி 15:49, 20 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி. விக்கிப்பீடியா எப்பொழுதோ வலைப்பதிவு மூலம் அறிமுகமாகி விட்டது. ஆனால் பயனராக இப்போதுதான் வந்திருக்கிறேன். கட்டுரைகள் தொகுப்பதில் புதிதாகையால் சில இடர்ப்பாடுகள். உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. காயத்திரி 03:44, 21 பெப்ரவரி 2007 (UTC)

நல்வரவு காயத்திரி. உங்களின் பங்களிப்புடன் த.வி. மேலும் சிறப்புறும். உங்களைப் பற்றிய சில தகவல்களை பயனர் பக்கத்தில் பகிர்ந்தால் நன்று. நன்றி. --Natkeeran 04:27, 21 பெப்ரவரி 2007 (UTC)
தகவல்களுக்கு நன்றி.--Natkeeran 05:49, 22 பெப்ரவரி 2007 (UTC)

அவுஸ்திரேலியா தொகு

காயத்திரி, அவுஸ்திரேலியா தொடர்பான கட்டுரைகளை எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் [[[அவுஸ்திரேலிய டொலர்]] கட்டுரையை மீட்டெடுத்திருக்கிறேன்:-). {{தகவற்சட்டம் நாணயம்}} பக்கத்தையும் மேம்படுத்தியுள்ளேன். தகவற்சட்டத்தில் ஏதேனும் திருத்தம் செய்வதானால் (இப்போதைக்கு) அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள். சட்டம் இன்னமும் மேம்படுத்தப்படவேண்டியுள்ளது. தொடர்ந்து பங்களியுங்கள். அவுஸ்திரேலியா கட்டுரையையும் மேம்படுத்தி உதவலாம். நன்றி.--Kanags 04:38, 3 மார்ச் 2007 (UTC)

உதவி தொகு

பிழையான தலைப்பு உடைய ஒரு பக்கத்தின் தலைப்பை மாற்ற பக்கத்தின் மேல் உள்ள "நகர்த்து" என்ற இணைப்பை அழுத்தி புதுத் தலைப்பை தாருங்கள். இதன் மூலம் பழைய தலைப்பில் இருந்து புதுத் தலைப்புக்கு வழிமாற்று உருவாகும். --Ravidreams 14:07, 17 மார்ச் 2007 (UTC)

நன்றி ரவி. அப்படியே செய்கிறேன் - காயத்திரி 14:26, 17 மார்ச் 2007 (UTC)

மீண்டும் வருக!! தொகு

காயத்திரி, நீங்கள் எங்கே பல நாட்களாக காணவில்லை. அண்மையில் பவழமல்லி கட்டுரையில் நீங்கள் ஜனவரி 2008ல் பங்களித்து இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன். பல நல்ல கட்டுரைகளை எழுதிய நீங்கள், எப்பொழுதெல்லாம் இயலுமோ அப்பொழுதெல்லாம் வந்து உதவுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நீங்கள் எழுதிய புளோரன்ஸ் நைட்டிங்கேல், சாக் கடல், முடிவிலி, ஏரல் கடல்,கஸ்பியன் கடல், அவுஸ்திரேலிய டொலர் முதலான கட்டுரைகளை நாங்கள் மறக்கவில்லை. பவழமல்லி கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றம் (தாய்லாந்தில் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக இருப்பது பற்றி) துல்லியம் நிறைந்ததாக உள்ளது. --செல்வா 18:39, 5 ஏப்ரல் 2008 (UTC)

உங்களுக்குத் தெரியுமா திட்டம் தொகு



பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:08, 21 சூலை 2011 (UTC)Reply

தொடர்ந்து பங்களிக்க வேண்டுகோள் தொகு

இந்தப் பக்கத்தையும், உங்கள் பங்களிப்புக்களையும் இன்றுதான் பார்த்தேன் :). தமிழ் விக்கிப்பீடியா பத்து வயதை அடைந்துள்ள இந்தத் தருணத்தில் நீங்கள் மீண்டும் பங்களிக்கத் தொடங்கினால், தமிழ் விக்கிக்கு தொடர்ந்து பங்களிக்கும் பெண் பங்களிப்பாளர்களில் ஒரு எண்ணிக்கையைக் கூட்டலாம். உங்கள் தொடர்ந்த பங்களிப்பை எதிர் பார்க்கின்றோம். :)--கலை (பேச்சு) 07:29, 16 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gaayathiri&oldid=1879650" இலிருந்து மீள்விக்கப்பட்டது