Mohandoss
வாருங்கள், Mohandoss!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--சிவகுமார் 16:48, 28 ஜூலை 2006 (UTC)
வாழ்க்கை வரலாறு எழுதல்
தொகுதங்கள் பங்களிப்புகள் நன்று. தாங்கள் வலைப்பதியும் திருச்சியைச் சேர்ந்த மோகன்தாஸ் தானா? விக்கிப்பீடியா நடையில் கட்டுரைகளை எழுத கீழே பார்க்கவும். {{ வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு }} --சிவகுமார் 17:14, 28 ஜூலை 2006 (UTC)
- சோழர் கட்டுரைகளில் தங்கள் பங்களிப்புகள் நன்று. தொடர்ந்து பங்களியுங்கள், நன்றி.--Sivakumar \பேச்சு 15:26, 17 மே 2007 (UTC)
ஆதாரங்களை (நூற்கள்) சேர்த்தால் நன்று.
தொகுஉங்கள் கட்டுரைகள் தரமான ஆய்வு அடிப்படையில் அமைந்தாலும், நீங்கள் அந்த ஆய்வுக்கான நூற்களையும் இறுதியில் சேர்ப்பது பயன் பெருக்கும். நன்றி. --Natkeeran 01:52, 1 செப்டெம்பர் 2007 (UTC)
படங்கள்
தொகுஉங்களிடம் இருக்கும் கோயில்கள் படங்களையும் கட்டற்ற முறையில் சேர்த்தால் நன்றாக இருக்கும். நன்றி. --Natkeeran 01:57, 1 செப்டெம்பர் 2007 (UTC)
கவனிக்க
தொகுநீங்கள் தொடர்ந்து பங்களிப்பதையிட்டு மகிழ்ச்சி. எல்லாத் தகவல்களையும் ஒரே கட்டுரையில் சேர்க்காமல் தனித்தனிக் கட்டுரைகளாக எழுதுங்கள். சீவக சிந்தாமணி தொடர்பாக ஏற்கனவே ஒரு தனிக்கட்டுரை உள்ளது. --கோபி 09:54, 3 செப்டெம்பர் 2007 (UTC)
சில விளக்கம்
தொகுகோபி - சோழர் இலக்கியம் என்பது தனிப்பட்ட கட்டுரையென்றே நான் கருதுகிறேன். எழுதி முடித்ததும் அங்கங்கே சென்று அந்த தனிக் கட்டுரையிலும் முடிந்தவரை update செய்கிறேன். உதாரணம் ஐம்பெருங்காப்பியங்கள் இங்கே எழுதியதும் ஐம்பெருங்காப்பியங்கள் கட்டுரைக்குச் சென்று சீவக சிந்தாமணியை இணைத்தேன்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் எழுதிக் கொண்டிருந்த சோழர் இலக்கியத்திற்கு உள் வந்ததாலேயே அங்கே போட்டேன்.
- சோழர் இலக்கியங்கள் என்பதனுள் எல்லாத் தகவல்களையும் உள்ளடக்காமல் ஒட்டக் கூத்தர், கல்லாடம், கலிங்கத்துப் பரணி எனத் தனித்தனியாக அமைப்பதே கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமானதாகும். ஏனென்றால் கலிங்கத்துப் பரணி பற்றித் தேடிவரும் ஒருவருக்கு அது பற்றிய கட்டுரையே தேவை. முழு சோழர் இலக்கியம் பற்றியும் வாசிக்க வேண்டியதில்லைதானே. சோழர் இலக்கியம் பற்றிய கட்டுரையில் ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமான அறிமுகம் போதும். இவற்றையும் பார்க்க அல்லது முதன்மைக் கட்டுரை எனக் குறித்த கட்டுரைகளுக்குத் தொடுப்புக் கொடுத்தாற் போதும். நன்றி. --கோபி 10:00, 3 செப்டெம்பர் 2007 (UTC)
மேலும் உங்கள் பேச்சுப் பக்கக் கருத்துக்களின் கீழ் கையெழுத்திட ~~~~ என்பதைப் பயன்படுத்தலாம். நன்றி. --கோபி 10:02, 3 செப்டெம்பர் 2007 (UTC)
கலிங்கத்துப் பரணி பற்றியும் ஒட்டக்கூத்தர் பற்றியும் நான் கொடுத்திருக்கும் அறிமுகம் "ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமான அறிமுகம் போதும். " என்று நீங்கள் சொன்னது தான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒட்டக்கூத்தர் பற்றி இன்னமும் கூட நிறைய எழுதமுடியும், வேண்டும். அதைப் போலவே கலிங்கத்துப் பரணியும்.
ஆனாலும் ஒட்டக்கூத்தர், கலிங்கத்துப்பரணி பற்றிய கட்டுரைகள் தொடக்கம் கூட இல்லாமல் இருப்பதாகத் தெரிவதால் ஆரம்பித்தாவது வைக்கிறேன். அறிவுரைக்கு நன்றி. மோகன்தாஸ் 10:05, 3 செப்டெம்பர் 2007 (UTC)
அறிவுரை எல்லாம் இல்லை. :-) என் கருத்தைச் சொன்னேன். என் கருத்து பிழையாகவும் இருக்கலாம். நீங்கள் சுட்டிக் காட்டியதுபோல இங்கே பெருமளவு தலைப்புக்களில் கட்டுரை இல்லை. உள்ள பல கட்டுரைகளும் மிகச் சிறியவை. முடிந்தளவு தகவல்களைச் சேர்த்தீர்களானால் மிகவும் பயனுள்ளது. நன்றி. கோபி 10:08, 3 செப்டெம்பர் 2007 (UTC)
கோபி சென்று பார்த்தேன் கலிங்கத்துப்பரணி ஆகட்டும் ஒட்டக்கூத்தர் ஆகட்டும் கட்டுரை முன்பே உள்ளது.
அதனால் என்னிடம் இருக்கும் தகவல்களை இணைக்க முயல்கிறேன். ஆனால் சோழர் இலக்கியம் என்ற கட்டுரையின் முக்கியத்துவத்தை வேண்டு அங்கும் அந்தத் தகவல்கள் இருக்கட்டும். மோகன்தாஸ் 10:11, 3 செப்டெம்பர் 2007 (UTC)
ஆம், கட்டுரைகளைத் தொடங்கும்முன் ஒருமுறை தேடிப் பார்ப்பது நல்லது. ஏனெனில் ஏற்கனவே கலிங்கத்துப்பரணி உள்ளது. சில சமயங்களில் இத்தகைய இடைவெளிகள் போன்றவற்றால் ஒரேதலைப்பில் கட்டுரைகள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுவதுண்டு, நன்றி. --கோபி 10:12, 3 செப்டெம்பர் 2007 (UTC)
ஒரு சிறு உதவி
தொகுஇது போல் இருக்கும் சில கட்டுரைகளை எடுத்துக்காட்டாக குந்தவை பிராட்டி என்றொரு கட்டுரை இருக்கிறது. ஆனால் வழமையாக குந்தவை என்ற கட்டுரையே வழங்கப்பட்டுவருகிறது.
இது போல் குந்தவை பிராட்டி என்று தேடி வரும் கட்டுரைகளை குந்தவையை நோக்கி எப்படி அனுப்புவது.மோகன்தாஸ் 10:22, 3 செப்டெம்பர் 2007 (UTC)
- குந்தவைப் பிராட்டி கட்டுரைக்குச் செல்லுங்கள்.
- #REDIRECT[[குந்தவை]] என்ற நிரல்துண்டை உள்ளீடு செய்யுங்கள் அல்லது தொகுத்தல் பெட்டியின் மேலே #R என்று பொறிக்கப்பட்டுள்ள பொத்தானை அழுத்துங்கள்.
இத்தகவலை நாம் விக்கிப்பீடியா:பக்க வழிமாற்றுதல் முறை என்ற உதவிப் பக்கத்தில் பதிய வேண்டும். -- Sundar \பேச்சு 11:07, 3 செப்டெம்பர் 2007 (UTC)
நீங்கள் கொடுத்த உரல் வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன் :( மோகன்தாஸ் 11:27, 3 செப்டெம்பர் 2007 (UTC)
படிமங்களின் பதிப்புரிமை
தொகுநீங்கள் அண்மையில் பல படங்களைப் பதிவேற்றியுள்ளீர்கள். அவற்றை எந்த காப்புரிமையின்கீழ் அளிக்கிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்தவும். இயன்றால் இங்கு பதிவேற்றவும். -- Sundar \பேச்சு 10:17, 3 செப்டெம்பர் 2007 (UTC)
எங்கே தெளிவுபடுத்த முடியும் சுந்தர்?மோகன்தாஸ் 10:22, 3 செப்டெம்பர் 2007 (UTC)
அந்தந்த படிமங்களின் விளக்கப் பக்கங்களுக்குச் சென்று {{cc-by-sa}} போன்ற வார்ப்புருக்களை இணைக்க வேண்டும். கட்டற்ற காப்புரிமைகளின்கீழ் அளிக்கும்போது உங்களுடைய காப்புரிமை விலகி விடும் என்பதை நினைவில் கொள்ளவும். commons:Commons:Licensing (ஆங்கில மொழியில்) என்ற பக்கத்தையும் பார்க்கவும். -- Sundar \பேச்சு 10:59, 3 செப்டெம்பர் 2007 (UTC)
- சுந்தர் பொதுவில் த.வி தொடர்பான படங்களை பதிவேற்றுவதை தற்போது பரிந்துரைப்பது இல்லை. காரணம் இரண்டு திட்டங்களையும் ஒருங்கே co-ordinate செய்து இன்றைப்படுத்த வசதி தற்போது இல்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களுடைய கொள்கைகள் என்ன எனபது பற்றியும் போதிய தெளிவு இல்லை. மேலும், அடிக்கடி பொதுவில் இங்குப் பயன்படுத்தப்பட்ட படிமங்களை நீக்கியிருக்கின்றார்கள் எனவே தற்போதைக்கு இங்கு இடுவதே பொருத்தம் என்று எனக்குப் படுகின்றது. அல்லது இரண்டு இடத்திலும் இடலாம். --Natkeeran 13:54, 3 செப்டெம்பர் 2007 (UTC)
மதிப்பீடுகள்
தொகு..."'இராமாயணம்' பாடிப் பெரும் புகழ்பெற்ற கம்பன், ஒட்டக்கூத்தனை விடப் பெரிய புலவன்."...
கலைக்களஞ்சியத்தில் மதிப்பீடுகளை முதலிலேயே தருவது அவ்வளவு நல்லதல்ல. தகவல்களை முதலில் பகிர்ந்து விட்டு பின்னர் தருவதே நன்று. --Natkeeran 15:54, 3 செப்டெம்பர் 2007 (UTC)
வேண்டுமென்று செய்ததல்ல - மாற்றிவிட்டேன் மோகன்தாஸ் 16:03, 3 செப்டெம்பர் 2007 (UTC)
பிழை திருத்தியமைக்கு நன்றி!
தொகுவணக்கம்! சிம்மவிஷ்ணு கட்டுரையின் பிழை திருத்தியமைக்கு நன்றி! எனக்குத் தமிழ்த் தட்டச்சு தெரியாது, எனினும் MSWORD-ல் Insert->Symbol வசதி மூலமே அப்பக்கத்தை அச்சேற்றினேன்!
- -)
-122.164.180.194 05:58, 5 செப்டெம்பர் 2007 (UTC)
நன்றியெல்லாம் சொல்லாதீங்கங்க அது என்ன பெரிய விஷயம் நேரம் இருந்தது செய்யமுடிந்தது அவ்வளவே மோகன்தாஸ் 06:58, 5 செப்டெம்பர் 2007 (UTC)
பிழைத்திருத்தம்
தொகு- மோகாதாஸ் கட்டுரைகளில் பிழைகளை காணுமிடத்து உடனடியாக திருத்திவிடலாம். திருத்தம் சர்சைக்குரியதாயின் மாத்திரம் பேச்சுப் பக்கத்தில் குறிப்பை விட்டு பின்பு திருத்தலாம்.--டெரன்ஸ் \பேச்சு 06:15, 6 செப்டெம்பர் 2007 (UTC)
சாமுராய்
தொகுநீங்கள் எழுதிய சாமுராய் கட்டுரை மிகவும் நன்று.--Sivakumar \பேச்சு 08:52, 10 செப்டெம்பர் 2007 (UTC)
பாராட்டுக்கள்
தொகுஉங்கள் பங்களிப்புக்கள் மிகச் சிறப்பாக உள்ளன. நீங்கள் தொடர்ந்தும் சளைக்காமல் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி. --கோபி 17:03, 10 செப்டெம்பர் 2007 (UTC)
- மோகன்தாஸ், நீங்கள் இசைக்குழுக்களைப் பற்றியும், வர்லாறு மற்றும் பல துறைகளில் அருமையாக கட்டுரைகள் ஆக்கியும் தொகுத்தும் வருவது கண்டு மகிழ்கிறேன். நெஞ்சார்ந்த பாராட்டுகள். அருள்கூர்ந்து இயன்றவாறு தொடர்ந்து பங்களியுங்கள்! நன்றி.--செல்வா 17:29, 10 செப்டெம்பர் 2007 (UTC)
சிறு குறிப்பு
தொகுபுதிய கட்டுரைகளை ஆக்கும் போது ஆங்கில விக்கிக் கட்டுரைக்கான இணைப்பை வழங்குவது கட்டுரையை விரிவாக்க விரும்புவோருக்கு உதவியாக இருக்கும். நன்றி. --கோபி 17:18, 10 செப்டெம்பர் 2007 (UTC)
கோபி அடுத்த முறை அவசியம் செய்கிறேன். நன்றி மோகன்தாஸ் 17:24, 10 செப்டெம்பர் 2007 (UTC)
if
தொகுஒரு வார்ப்புருவில் if பயன்படுத்தி எழுதிய நிரல் (நான் சுட்டது!) பின்வருமாறு அமையும்.
|- {{#if:{{{Birth_name|}}}| ! இயற் பெயர் {{!}} {{{Birth_name}}} {{!}}- }}
இங்கு "{{#if:|" என்பது தான் check. கட்டுரையில் Birth_name=xxx என வரும் போது மட்டுமே இது தொழிற்படும் அல்லது மறைந்துவிடும். if கூற்றுக்குள் "|" அடையாளங்களைப் பாவிக்க முடியாது. அதற்க்காக | என்ற வார்ப்புருவை பாவிக்கலாம்.--டெரன்ஸ் \பேச்சு 02:21, 12 செப்டெம்பர் 2007 (UTC)
மீண்டும் நல்வரவு!
தொகுமோகன்தாஸ், மீண்டும் உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுக் கட்டுரைகள் புது வீச்சு பெறும் என நம்புகிறேன். --செல்வா 21:26, 22 ஏப்ரல் 2008 (UTC)
சோழ ஒவியம்
தொகுமன்னனின் ஓவியத்தை பயன்படுத்தி உள்ளேன். அதிலும் ஏதும் சர்ச்சை என்றால் தெரிவிக்கவும். நன்றி. --Natkeeran 18:24, 30 ஏப்ரல் 2008 (UTC)
இல்லை --மோகன்தாஸ் 18:30, 30 ஏப்ரல் 2008 (UTC)
இதையும் பாக்க:
தொகுவார்ப்புரு:நூல் தகவல் சட்டம் --Natkeeran 20:54, 4 மே 2008 (UTC)
எனக்கு சரிவர தேடத் தெரியவில்லை, சில தமிழ்ப் புத்தகங்களில் உரல்களை நோட்டமிட்டேன்.
infobox எங்கேயும் உபயோகிக்காமல் இருந்ததால், புதிதாய் ஒன்றை உருவாக்கினேன்.
எனக்கு பழையதை உபயோகிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நீங்களே ஒரு முடிவு சொல்லுங்கள்.
--மோகன்தாஸ் 20:57, 4 மே 2008 (UTC)
எது சிறந்ததோ, அதைப் பயன்படுத்தாலாம். --Natkeeran 00:34, 5 மே 2008 (UTC)
பங்களிப்பாளர் அறிமுகம்
தொகுவணக்கம் mohandoss, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 11:04, 5 அக்டோபர் 2009 (UTC)
தேவைப்படும் கட்டுரைகள்
தொகுவணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)
உங்களுக்குத் தெரியுமா
தொகுநீங்கள் பங்களித்த என் பெயர் ராமசேஷன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 29, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த முதலாம் இராஜராஜ சோழன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜனவரி 25, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த சாளுக்கிய சோழர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 23, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த மூன்றாம் இராஜேந்திர சோழன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகத்து 1, 2012 அன்று வெளியானது. |
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத்திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த சோழர் படை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் திசம்பர் 01, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |