வாருங்கள், Raj6644! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Raj6644, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Raj6644, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--ரவி 11:20, 29 ஜூலை 2010 (UTC)

பாராட்டுகள் தொகு

பிரம்மதேசம் கட்டுரை மிக அருமையாக உள்ளது. ஒரு புதியவர் விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொண்டு எழுதியுள்ளது வியப்பளிக்கிறது. இது போல் மேலும் பல கட்டுரைகளைத் தர வேண்டுகிறேன். நன்றி--ரவி 11:20, 29 ஜூலை 2010 (UTC)

பாராட்டுக்களுக்கு நன்றி ரவி!!!. தமிழ்.விக்கிபீடியாவில் தமிழை பயன்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. சாதாரண உரையாடலுக்கு கூட கூகிள் transliteration னை நாடவேண்டி உள்ளது. பயனர் பகுதியில் Gmail லில் இருக்கும் தமிழ் மாற்று கருவியை போன்ற ஒன்றரை சேர்க்குமாறு கேட்டுகொள்கின்றேன். ஒரு சந்தேகம், இக்கட்டுரைக்கான தர நிர்ணயித்தலை யார் வழங்குவர்?. ராஜ்6644 11:47, 29 ஜூலை 2010 (UTC)

தர நிர்ணயம் என்றெல்லாம் ஏதும் இல்லீங்க. உங்கள் கட்டுரையில் வேண்டிய மாற்றங்களைப் பிற பயனர்கள் செய்து உதவுவர். நேரடியாக விக்கியிலும் பிற தளங்களிலும் தட்டச்சு செய்ய விக்கிப்பீடியா:தமிழ் தட்டச்சு பார்க்கவும்--ரவி 14:51, 29 ஜூலை 2010 (UTC)

வாழ்த்துக்கள். நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து பங்களித்து வாருங்கள். -- மாஹிர் 16:23, 29 ஜூலை 2010 (UTC)
வாழ்த்துகள்!! நன்றாகவே எழுதியுள்ளீர்கள்..பிறமொழி விக்கியில்அனுபவமுள்ளது போலத் தெரிகிறது.விக்கியில் தரத்தை நிர்ணிப்பவர் என்று யாருமில்லை. இது கூட்டு முயற்சி. அனைவருக்கும் பொதுவான தரத்தில் அமையும் வரை சகபயனர்கள் திருத்துவர்;விவாதத்திற்குரிய திருத்தங்கள் பேச்சுப் பக்கத்தில் உரையாடப்பட்டு உடன்பட்ட (consensus) முடிவு எடுகப்படும்.
இணையத்தில் தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய நான் பயர்ஃபாக்ஸ் உலாவியில் Tamilkey extension பயன்படுத்துகிறேன்.தமிழிற்கும் ஆங்கிலத்திற்கும் மாறுவதும் தட்டச்சுவதும் எளிதாக உள்ளது.--மணியன் 21:42, 29 ஜூலை 2010 (UTC)
அனைவரின் பாராட்டுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். உண்மையை சொல்லவேண்டு என்றால் பிரம்மதேசம் கட்டுரையை ஆங்கிலத்தில் உருவாக்குவதற்கு பயனர் --Sodabottle அவர்கள் மிகவும் துணையாக இருந்தார். பயனர் --Sodabottle அவர்கள் ஆங்கில விக்கிபீடியாவில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரை தமிழில் பல கட்டுரைகள் வழங்க நாம் அனைவரும் அவரை ஊக்குவிக்க வேண்டும். ரவி அவர்களே சந்தேகத்திற்கு விடை அளித்தமைக்கு நன்றி.

வாங்க வாங்க தொகு

வருக ராஜ்,

உங்களை இங்கு(ம்) காண்பதில் மிக்க மகிழ்ச்சி :-). --Sodabottle 19:03, 29 ஜூலை 2010 (UTC)

சோடா! நீங்க பெரிய ஆள்தான் போங்க! உங்கல இங்க பாக்குறதுல என்னக்கும் சந்தோஷம். --ராஜ்6644 04:53, 30 ஜூலை 2010 (UTC)

அருமையான கட்டுரை தொகு

நண்பரே, பிரமதேசம் கட்டுரையை மிகவும் அருமையாக வளர்த்துள்ளீர்கள்! பாராட்டுகள். தங்களின் முதல் கட்டுரையிலேயே விக்கி நடை, மேற்கோள்கள் மற்றும் இணைப்புகளை மிகவும் அருமையாக கொடுத்துள்ளீர்கள்! இது மிக வியப்பை அளிக்கிறது. தங்களின் தமிழ்விக்கி பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். --கார்த்திக் 19:43, 29 ஜூலை 2010 (UTC)

நன்றி கார்த்திக் --ராஜ்6644 04:58, 30 ஜூலை 2010 (UTC)
நன்றாக எழுதியுள்ளீர்கள், பாராட்டுகள். சில பகுதிகளில் உரை திருத்தம் செய்துள்ளேன். பார்க்கவும். மக்கள்தொகை தெரிந்தால் அதனைச் சேர்க்கலாம். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். கட்டுரைக்குள் வரும் இன்னும் சில ஊர்களின் பெயர்கள் திருத்தப்பட வேண்டும் என்று நினைக்கின்றேன். சூனம்பேடு

கடப்பக்கம் என்பன சூணாம்பேடு,, கடப்பாக்கம் அல்லது கடைப்பக்கம் என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மீண்டும் என் வாழ்த்துகள்--செல்வா 19:51, 29 ஜூலை 2010 (UTC)

நன்றி செல்வா! கடப்பாக்கம். முன் ஒரு காலத்தில் அது கடைப்பக்கம்யென்று அழைக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அது இந்நாளில் நடைமுறையில் கடப்பக்கம் யென்றே அழைக்கப்படுகின்றது. ---ராஜ்6644 04:58, 30 ஜூலை 2010 (UTC)

செய்கிறேன் நண்பரே! தொகு

மதிப்பிற்குரிய நண்பரே அன்பு வணக்கம்!

என் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் இட்டிருந்த மடல் கண்டேன். கண்டிப்பாகச் செய்கிறேன்! ஆனால் இப்பொழுது எனக்குச் சில வேலைகள் இருக்கின்றன. அவற்றை முடித்துவிட்டு அடுத்த திங்கள்(மாதம்) செய்கிறேன்.

என்னையும் மதித்து என்னிடம் உதவி என்று கேட்டு வந்த முதல் ஆள் தாங்கள்தாம். எனவே கண்டிப்பாகத் தாங்கள் கேட்டதை நான் செய்யாமல் விட மாட்டேன். ஆகவே இதைப் பற்றி எந்தக் கவலையுமின்றித் தாங்கள் தங்களுடைய பிற பணிகளில் ஈடுபடுங்கள்! இதை நான் பார்த்துக் கொள்கிறேன்! வணக்கம்! நட்புடன்--இ.பு.ஞானப்பிரகாசன் 13:59, 31 ஜூலை 2010 (UTC)

உங்களுடைய இந்த உதவிக்கு மிக்க நன்றி. உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்வோர் பட்டியலில் பார்த்தேன் அதனால் உங்களை நாடினேன். ---ராஜ்6644 14:34, 31 ஜூலை 2010 (UTC)

வருந்துகிறேன்! தொகு

அன்பு நண்பரே வணக்கம்!


நீங்கள் கேட்ட 'ஊராட்சி ஒன்றிய' த்திற்கான பக்கத்தை எனக்கு முன்பு திரு.ஹிபயதுல்லா அவர்கள் மொழிபெயர்த்து விட்டிருக்கிறார். என்னை அவர் முந்திக் கொண்டுவிட்டார். உங்களுக்கு உதவும் வாய்ப்பை இழந்து விட்டதற்காக மிகவும் வருந்துகிறேன்!
உங்கள் அன்பன்--இ.பு.ஞானப்பிரகாசன் 10:10, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
உதவ வேண்டும் என்று நினைத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஞானப்பிரகாசன்!. இன்னொரு முறை உங்களிடம் உதவி கேட்டு வருவேன் நண்பரே. உங்களுடைய இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் .---ராஜ்6644 11:35, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Raj6644&oldid=569232" இலிருந்து மீள்விக்கப்பட்டது