Raju.Rajendran
வாருங்கள்!
வாருங்கள், Raju.Rajendran, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-వినోద్ வினோத் 17:16, 12 மார்ச் 2008 (UTC)
வேந்தன் அரசு, வாருங்கள், வாருங்கள்! உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஏதும் உதவி வேண்டின் கட்டாயம் கேளுங்கள். இங்குள்ளவர்களில் யாரேனுமோ, நானோ இயன்ற உடனே உதவிக்கு வருவோம். --செல்வா 17:50, 12 மார்ச் 2008 (UTC)
பாராட்டுகள்
தொகுவேந்தன், நீங்கள் எழுதிய பொனொபோ, திபெத் ஆகிய இரண்டும் மிக அருமையாக அமைந்துள்ளது. உங்கள் 123 உடன்படிக்கைக் கட்டுரையும் நல்ல ஆக்கம், ஆனால் அது பயனர் கனகு, பேச்சுப் பக்கத்தில் கூறியவாறு மாற்றி அமைக்கலாம். பார்க்கவும்: பேச்சு:123 உடன்படிக்கை. குறுகிய காலத்தில் 3 அருமையான கட்டுரைகளை எழுதிவிட்டீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுகள்! தொடர்ந்து பங்களித்து தமிழ் விக்கிப்பீட்யாவுக்கு நல்லாக்கம் தர வேண்டுகிறேன்.--செல்வா 00:49, 24 மார்ச் 2008 (UTC)
செல்வா, கனகு.
இந்த கட்டுரையின் தலைப்பை
"அணுக்கரு ஆற்றலை அமைதிவழியில் பயனாக்குவது தொடர்பாக ஐக்கிய அமெரிக்க-இந்திய அரசுகளுக்கிடையான 123 உடன்படிக்கை"
என்று மாற்றிவிடுங்கள். உடன்பாடு என்பதை விட "உடன்படிக்கை" எனும் சொல் சிறந்தது. நான் பின்னர், எல்லா 123 உடன்படிக்கைகளையும், இந்திய -அமெரிக்க 123 ன் வரலாற்றையும் எழுதலாம் என நினைக்கிறேன். இதில் இருந்து தற்போதுளள் கட்டுரைக்கு தொடுப்பு கொடுக்கலாம். இந்த கட்டுரையில் மேலும் சில சரத்துக்களை தொகுக்கும் வழியும் தேவை. (விக்கி உலகத்துக்கு புதியவன் என்பதால் நடைமுறைகள் பல நான் தெரிந்து கொள்ள வேண்டும்). நன்றி
- வேந்தன், அமெரிக்கா, மற்றும் இந்தியா வின் 123 உடன்படிக்கை வாசக வெளியீட்டை அப்படியே 123 உடன்படிக்கையின் பேச்சுப் பக்கத்துக்கு மாற்றியுள்ளேன். 123 உடன்படிக்கை என்ற கட்டுரையைப் பொதுக்கட்டுரையாக்கியுள்ளேன். அமெரிக்க-இந்திய உடன்பாடு குறித்து பின்வரும் தலைப்பில் கட்டுரையை எழுதலாம் (மேலே நீங்கள் தந்த தலைப்பு மிகவும் நீண்டு விட்டது. விக்கி ஏற்றுக் கொள்ளாது:) அணுக்கரு ஆற்றலின் அமைதிவழிப் பயனாக்கம் தொடர்பான அமெரிக்க-இந்திய உடன்படிக்கை. தொடர்ந்து உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். நன்றி.--Kanags \பேச்சு 04:12, 29 மார்ச் 2008 (UTC)
கையொப்பம்
தொகுவேந்தன் அரசு, நீங்கள் தொகுக்கும் பொழுது கையொப்பம் இட உள்ள பொத்தானை அழுத்தினால், யார் எழுதியது எப்பொழுது பதிவு செய்தது என்னும் குறிப்புகள் பதிவாகும். நன்றி.--செல்வா 21:57, 26 மார்ச் 2008 (UTC)
அட்டவணை
தொகு--Raju.Rajendran 19:58, 20 ஏப்ரல் 2008 (UTC) எனது "திணை விளக்கம்" புதிய கட்டுரையில் "திணை - நிலம்" மற்றும் "திணை - பெரும்பொழுது - சிறுபொழுது" கீழ் உள்ளவனவற்றை பட்டியலாக செய்ய எனக்கு தெரியவில்லை.
வேந்தன் அரசு, நீங்கள் எழுதிய அருமையான திணை விளக்கம் கட்டுரையில், இரண்டு அட்டவணைகள் செய்து காட்டியுள்ளேன். பாருங்கள். மீதம் உள்ளவற்றை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இயலாவிடில், நாங்கள் யாரேனும் ஒருவர் வந்து ஆக்கித்தருகின்றோம். எப்படி பல்வேறு வகையான அட்டவணைகளைச் செய்யலாம் என்று இங்கே காட்டப்பட்டுள்ளது. இது தவிர எங்கேனும் உங்களுக்குப் பிடித்தமான அட்டவனணை இருந்தால், அதனை ஒரு படி எடுத்து பதிவு செய்து, பின்னர் தேவையான மாற்றங்கள் செய்து பயன்படுத்தலாம். இன்னும் ஒரு அருமையான கட்டுரை எழுதி வளம் சேர்த்ததற்கு நன்றி வேந்தன் அரசு!! --செல்வா 03:33, 21 ஏப்ரல் 2008 (UTC)
வேந்தன் அரசு, இங்கே பார்க்கவும். இங்கும் பாருங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்! --செல்வா 17:20, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த ஆர்தர் சி. கிளார்க் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 20 நவம்பர் 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |