வாருங்கள், Rnarendr!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 09:34, 29 டிசம்பர் 2007 (UTC)

நல்வரவு

தொகு

வணக்கம் இரவீந்திரன், உங்களைப் பற்றிய தகவல்களை எமக்கும் அறியத்தந்தமைக்கு நன்றிகள். ஹாசன் பற்றிய உங்கள் கட்டுரை மிக நன்று. தொடர்ந்து எழுதுங்கள். ஏதேனும் உதவி தேவை என்றால் தயங்காமல் பயனர்களின் பேச்சுப்பக்கங்களில் கேளுங்கள். உதவி செய்யக் காத்திருக்கிறோம். நன்றி.--Kanags \பேச்சு 22:44, 29 டிசம்பர் 2007 (UTC)

ரவீந்திரன், பயனர் பேச்சுப் பக்கம் பற்றி கொஞ்சம் விளக்கம்: ஒவ்வொரு பயனருக்கும் அவரவர் பயனர் பக்கங்களும் ஒவ்வொருவருக்கும் உரையாடல் பக்கமும் (பேச்சுப் பக்கம்) உள்ளன. (மேலே உள்ள menu tabs ஐக் கவனியுங்கள்). உரையாடல் பக்கங்களில் உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம் அல்லது பொதுவான ஆலமரத்தடியிலும் உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்.--Kanags \பேச்சு 12:26, 30 டிசம்பர் 2007 (UTC)
நல்வரவு ரவீந்திரன். உங்கள் பங்களிப்புகள் மேலும் வளர்ந்து விக்கிப்பீடியாவை சிறப்பிக்கும் வேண்டுகிறேன். எமது உதவிகளை இயன்றவரை செய்வோம். நன்றி. --Natkeeran 01:43, 31 டிசம்பர் 2007 (UTC)

ஹாசன்

தொகு

ரவீந்திரன், ஹாசன் பற்றிய கட்டுரையை முறையாக வளர்த்தெடுத்து வருவது கண்டு மகிழ்ச்சி. அக்கட்டுரையில் ஹோய்சாலர் கட்டிடக்கலை பற்றியும் எழுதி வருகிறீர்கள். ஹோய்சாலர் கட்டிடக்கலை பற்றி ஏற்கனவே குறுங்கட்டுரை ஒன்று உள்ளது. அக்கட்டுரையை மேம்படுத்தினால் நல்லது. நன்றி.--Kanags \பேச்சு 12:13, 31 டிசம்பர் 2007 (UTC)

நரேந்திரன் இரவீந்திரன், நீங்கள் ஹாசன் கட்டுரையை மிக அழகாக வளர்த்தெடுத்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்! இயன்றபொழுதெல்லாம் தொடர்ந்து பங்களிப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாருக்கும் ஆர்வம் இருப்பின், அவர்களையும் அழைத்து ஈடுபடுத்துங்கள். விக்கியில் ஏதும் உதவி வேண்டுமெனில் தயங்காது கேளுங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!--செல்வா 03:10, 2 ஜனவரி 2008 (UTC)

Happy New Year 2008 Rnarendr! :)

தொகு

Hi handsome! Could you please help me preparing a brief version of this wiki article that is still not available in the Tamil (.ta) language page? If you could, that would be so great and I will be very thankful! English version This is the version that could help as a source for the Tamil (.ta) version of this article. It would be great if you could help even with a 1-3 sentence translation, as even a short-stub article would help to get it started and serve as a basis for future development. Thanks so much and Happy New Year!

Angayarkarasi 08:29, 1 ஜனவரி 2008 (UTC)

எ-கலப்பை

தொகு

நீங்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து பங்களிப்பதானால் எ-கலப்பை மென்பொருளை பாவித்து வேகமாகத் தட்டச்சுச் செய்யலாம். தமிழ் ஒலிப்பு முறைப்படி தட்டச்சுச் செய்யவேண்டும் என்றால் அதில் அஞ்சல் விசைப்பலகையைத் தேர்ந்தெடுங்கள்--உமாபதி \பேச்சு 11:52, 2 ஜனவரி 2008 (UTC)

ஆம், நீங்கள் உமாபதி சொன்னதுபோல் எ-கலப்பை மென்பொருளைப் பயன்படுத்தி எளிதாக தமிழில் இடலாம். தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் கூகுள் எழுத்துரு மாற்றியைக் கொண்டு இவ்வளவு அழகாக செய்துள்ளது, எனக்கு வியப்பை ஊட்டுகின்றது. கட்டுரைகளில் திருத்தங்களை நானும் மற்றவர்களும் செய்து கட்டாயம் உதவுவோம். கடைசியாக, என்னை நீங்கள் செல்வா என்றே தயங்காமல் கூறலாம். நான் விரும்புவதும் அதுவே. இங்கு அடைமொழிகள் தருவது வழக்கம் இல்லை. நாம் எல்லோருமே தோழமையான பங்களிப்பாளர்கள்தான். மீண்டும் உங்களின் அருமையான பங்களிப்புக்குப் பாராட்டுகள். பலரும் பரிந்துரைக்கும் தமிழ் 99 முறையை நீங்கள் கையாளலாம். --செல்வா 21:59, 2 ஜனவரி 2008 (UTC)

முற்றும்

தொகு

நண்பர்களே, என்னால் இயன்ற வரை ஹாசனை பற்றிய கட்டுரையை எழுதி முடித்துவிட்டேன். இதை நீங்கள் சரி பார்த்து, ஏதேனும் கருத்துக்கள்/செய்திகள் விடுபட்டிருந்தால் அதை இக்கட்டுரையுடன் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.நன்ற!--Rnarendr 15:51, 3 ஜனவரி 2008 (UTC)

கண்டிப்பாக செய்வோம். கட்டுரை நன்றாக வந்துள்ளது, பாராட்டுக்கள். இந்தக் கட்டுரைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும். -- சுந்தர் \பேச்சு 16:07, 3 ஜனவரி 2008 (UTC)
என்னுடைய கருத்தும் வேண்டுகோளும் அதுவே. அழகாக கட்டுரையை வளர்த்தெடுத்துள்ளீர்கள். இது தொடர்பாகவோ அல்லது வேறு தலைப்புகளிலோ, நீங்கள் கட்டாயம், இயன்றபொழுது பங்களியுங்கள். நன்றி.--செல்வா 17:50, 3 ஜனவரி 2008 (UTC)
வந்த உடனேயே ஒரு பெருங்கட்டுரையை நன்றாக முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்தும் எழுதுங்கள். ஹாசன் கட்டுரையைத் தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உண்டா என அறிய ஆவல். --உமாபதி \பேச்சு 09:20, 4 ஜனவரி 2008 (UTC)

தட்பவெப்பநிலை-வானிலை

தொகு

இந்தியாவின் தட்பவெப்பநிலை என்பது பொருந்தும். காலநிலை என்பது காலங்களின் வரலாறுபோல் தோற்றம் தருகின்றது. பருவகாலம் என்னும் சொற்பொருள் வலுத்து வரவேண்டுமெனில், இந்தியாவின் பருவகாலங்கள் அல்லது இந்தியாவின் பருவகாலநிலைகள் எனலாம். Climate என்பது தட்பவெப்பநிலை. Weather என்பது வானிலை. தனியாக காலநிலை என்பது பொருந்தாதது போல தெரிகின்றது. --செல்வா 06:04, 4 ஜனவரி 2008 (UTC)

இந்தியாவின் தட்பவெப்பம் என்றால் இக்கட்டுரையின் தலைப்பு சரியாக இருக்கும். பேச்சுப்பக்கதில் நான் இட்டுள்ள கருத்தைப் பார்த்தீர்களா? தலைப்பை மாற்தலாமா? காலநிலை என்பது தவறு நினைக்கிறேன்.பேச்சுப் பக்கத்தைப் பாருங்கள். நீங்கள் தந்துள்ள ஆங்கில சொற்களுக்குப் ஈடான தமிழ்ச்சொற்கள் ஆக்கலாம்.--செல்வா 03:25, 8 ஜனவரி 2008 (UTC)

இந்திய தட்பவெப்பம் (காலநிலை) சொற்கள்

தொகு

பரிந்துரை

தொகு

Alpine climate - ஆல்ப்மலய காலநிலை தட்பவெப்பம்
Humid subtropical ==> ஈரப்பத கீழ்வெப்பமண்டல
Tropical wet and dry ==> வறண்ட மற்றும் ஈர வெப்பமண்டல
Tropical wet ==> ஈர வெப்பமண்டல
Semi-arid ==> குறைய வறண்ட, குறை புன்நில, குறை வெங்கான்நில
Arid ==> வறண்ட, புன்புல, வெங்கான்நில, பொட்டல் என பல பெயர்கள் வழங்கலாம். ஆனால் வறண்ட என்பது போதும்.
--செல்வா 03:47, 8 ஜனவரி 2008 (UTC)

தட்பவெப்பம் பற்றி

தொகு

தட்பவெப்பம் என்பது Temperature அல்ல!! தட்பம் என்பது குளிர்நிலையைக் குறிக்கும். வெப்பம் என்பது வெப்பநிலையைக் குறிக்கும். தட்பவெப்பம் என்பது இவ்வேறுபாடுகளால் உள்ள சூழ்நிலை,காரணிகள் எல்லாவற்றையும் குறிக்கும். அதுதான் Climate. தட்பவெப்பம் என்று கூறும்பொழுது "நிலை" என்று கூறத்தேவை இல்லை. வெப்பநிலை, குளிநிலை, தட்பவெப்பம் எனபன வெவ்வேறானவற்றைக் குறிக்கும். Please understand that Temperature is வெப்பநிலை and don't mixup this with தட்பவெப்பம். The tamil terminology அடிதடி , தட்டுமுட்டு, வெட்டுகுத்து, and numerous such expressions mean not the individual words in those, but like "disturbance/turmoil", "household things", "violent orgy" etc. In short they are sort of idiomatic (with some underlying rationale) expressions. --செல்வா 04:12, 8 ஜனவரி 2008 (UTC)

உங்கள் கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன் ஆனாலும் தட்பவெப்பம் என்பது Temperature அல்ல என்ற உங்கள் கருத்தில் எனக்கு ஒரு ஐயம் உள்ளது. தங்கள் கூறியதுபோல தட்பவெப்பம் சொல் குளிர் மற்றும் வெப்ப அளவினை குறிக்கும் சொல். அதாவது இங்கு குளிர் என்னும் சொல் வெப்பநிலையின் குறைந்த அளவையும் வெப்ப சொல் வெப்பநிலையின் அதிக அளவையும் குறிக்கிறது என்பதே என் கருத்து. இதற்கு எடுத்துக்காட்டாக மேலும் கடலுக்கடியில் உள்ள சூழ்நிலையை தட்பவெப்பத்தால் (low and high temperature) ஆராயப்படுகிறது. Climate என்னும் சொல் கடலின் மேல்மட்டத்திலிருந்து வளி மண்டலத்தின் பகுதி (stratosphere) வரையுள்ள இடத்தில் ஏற்படும் வளி மண்டல மாற்றங்களை தனக்குள் அடக்குகிறது. A term/word defining relative difference between a maximum and minimum temperature cannot be considered as a word equivalent to Climate --Rnarendr 05:02, 8 ஜனவரி 2008 (UTC)

தட்பவெப்பம் என்பதுதான் சரியான சொல் என்பதற்குச் சான்றுகோள்கள் தந்துள்ளேன். நீங்கள் பார்த்தீர்களா? தலைப்பை மாற்றாலாமா? பார்க்கவும்: பேச்சு:இந்தியாவின் காலநிலை --செல்வா 05:54, 20 ஜனவரி 2008 (UTC)

காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லை

தொகு

கலைச்சொற்கள்

தொகு

மீண்டும் நல்வரவு நரேந்திரன். செல்வாவின் பக்கத்தில் உங்கள் வேண்டுகோகளைப் பார்த்தேன். தமிழ் விக்சனரியில் (http://ta.wiktionary.org) தற்போது 100 000 மேலான சொற்கள் கிடைக்கின்றன. tamilvu தரவுத்தள சொற்கள் தமிழ் விக்சனரியில் பதிவேற்றப்பட்டுள்ளன. தமிழ் லெக்சிக்கனில் தேடிப் பாக்கலாம் (http://dsal.uchicago.edu/dictionaries/winslow/). இவை தவிர பல இடங்களை விக்கிப்பீடியா:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு பக்கத்தில் காணலாம். மேலும் சிரமங்கள் இருந்தால் பட்டியலை ஆலமரத்தடியில் சேருங்கள், இங்குள்ள பயனர்கள் இயன்றவரை உதவ முயற்சி செய்வார்கள். நன்றி. --Natkeeran 12:16, 15 ஜூலை 2008 (UTC)

மீண்டும் நல்வரவு

தொகு

வாருங்கள் நரேந்திரன் இரவீந்திரன்! நல்வரவு! நீங்கள் என் பேச்சுப்பக்கத்தில் விட்டிருந்த உங்கள் செய்தியைப் பார்த்தேன். கார்த்திக் பாலா என்பவர் ஏற்கவே உங்களுக்கு மறுமொழி இட்டிருந்தார். நானும் ஒரு மாத காலமாக பங்களிக்க இயலவில்லை. உங்கள் பங்களிப்பை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி. --செல்வா 22:29, 13 ஆகஸ்ட் 2008 (UTC)

Firn தொடர்பான சொற்களுக்குத் தமிழ் நிகரிகள்

தொகு

Firn Snow, Firn Ice, Glacier Ice என்பதன் இணையான தமிழ் வார்த்தை என்ன? என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். Firn snow அடை தூவிப்பனி அல்லது அடைபனி அல்லது அடைபனித்தூவி எனலாம். Firn Ice என்பதற்கு அடை உறைபனி அல்லது உறை அடைபனி எனலாம். Glacier Ice என்பதற்கு பனியாற்றுப் பனிக்கட்டி அல்லது பையாற்றுப் பனிக்கட்டி அல்லது பனியாற்று உறைபனி அல்லது பனியாற்றுக் கட்டி எனலாம். --செல்வா 15:02, 19 நவம்பர் 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rnarendr&oldid=310004" இலிருந்து மீள்விக்கப்பட்டது