பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு01
வருக ! தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தொடர்ந்த உங்கள் பங்களிப்பை எதிர்நோக்குகிறோம். --மணியன் 08:28, 14 மார்ச் 2010 (UTC)
- ஆங்கிலத்தில் தாங்கள் எழுதிய பல கட்டுரைகள் இன்றுவரை தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை. ஆகவே தொடர்ந்து உங்கள் பங்களிப்பை எதிர்நோக்குகிறோம். மேலும் தமிழ் விக்கிப்பீடியாவில் பல பயனர்களுக்கு தங்களின் வருகை உதவியாக இருக்கும்.--Hibayathullah 13:01, 14 மார்ச் 2010 (UTC)
உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உதவுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி--ரவி 21:22, 3 ஜூன் 2010 (UTC)
2
தொகு- மன்னிக்கவும், நான் என் தவற்றை திருத்திகொள்கிறேன், உங்களது மேலான கருத்துகளை எனக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன். கார்த்திக்--Jenakarthik 03:02, 2 ஜூன் 2010 (UTC)
சின்னம்
தொகுகாங்கிரசுக்கு ராட்டை போய் இரட்டை மாடு வந்து பின் பசுவும் கன்றும் வந்து பின் கை வந்த கதை உங்களுக்கு தெரியுமா? பசுவிலிருந்து கை வந்த கதை தான் எங்க தேடுனாலும் சிக்கமாட்டிக்குது. --குறும்பன் 17:06, 15 ஜூன் 2010 (UTC)
- நான் கேட்ட கதை :
- ராட்டை - 1951 வரை
- இரட்டை மாடு (yoked bullocks) - 1952-69 வரை (சிண்டிகேட் - இந்திரா பிளவு; இந்திரா கோஷ்டி இந்திய தேசிய காங்கிரசு - requisition என்றழைக்கப்பட்டது)
- பசுவும் கன்றும் (cow and calf) - 1971-78 வரை (சொஷ்யலிஸ்ட் காங்கிரசு - இந்திரா காங்கிரசு பிள்வு; இந்திரா கோஷ்டி இந்திய தேசிய காங்கிரசு - Indira என்றழைக்கப்பட்டது)
- கை (hand) - 1980 - இன்றுவரை. (நடுவில் திவாரி காங்கிரசுக்கு ஏதோ முக்காடு போட்ட பெண் படம் சின்னம் கொடுத்த மாதிரி நினைவு)--Sodabottle 17:39, 15 ஜூன் 2010 (UTC)
- இந்த கூகிள்புத்தக தேடலில் எல்லா கதையும் தெரிகிறது. ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னம் தந்திருக்கிறார்கள்; 1978 இல் தேவராஜ் அர்சின் சொஷ்யலிஸ்ட் காங்கிரசு பசுவும் கன்றும் சின்னத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. (77 தோல்விக்குப் பின் இந்திரா ஓய்ந்திருந்த போது நடந்த பிளவு)--Sodabottle 17:52, 15 ஜூன் 2010 (UTC)
நன்றி சோடாபாட்டில். இந்திய தேசிய காங்கிரசு கட்டுரையில் சின்னங்கள் என்ற தலைப்பில் தகவல்களை சேர்த்துள்ளேன்.--குறும்பன் 22:28, 20 ஜூன் 2010 (UTC)
அடையாள அட்டைக்கான தகவல்கள்
தொகுSodabottle,
- வணக்கம். உங்கள் இயற்பெயர் [redacted] என்று இரவி கூறினார். சரிதானே? நீங்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வருகின்றீர்கள் அல்லவா? உங்களுக்கு அடையாள அட்டை கிடைத்ததா? இல்லையெனில், கீழுள்ளபடி செய்யவும்.
- கீழ்க்காணப்படும் URL -ஐ ஒற்றி புதிய URL-இல் ஒட்டவும்; பின்னர் Enter செய்தால் ஒரு பக்கம் வரும். அதில் உங்களைப் பற்றிய சில தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். அவற்றை உள்ளிட்டு விட்டு Update செய்யவும்.
- http://www.wctc2010.org/idcards/updatedetails.php?a=bWVtYmVyIHVwZGF0ZSBpbmZvMTI3Njg0ODc4Ng%3D%3D&z=Mjc0NV8xMjc2ODQ4Nzg2
- மின்னஞ்சல் முகவரி என்னுடையதாக இருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். --பரிதிமதி 18:07, 18 ஜூன் 2010 (UTC)
- குறிப்பிட்ட தொகுப்புகளை வரலாற்றிலிருந்து நீக்கும் முறையைப் பின்பற்றி உங்கள் பெயரைக் குறிப்பிட்ட தொகுப்பை நீக்கியுள்ளேன். இனி பக்க வரலாற்றிலும் அது தெரியாது. அந்த முறையையும் கற்றுக் கொண்டாகி விட்டது. :) -- சுந்தர் \பேச்சு 05:32, 19 ஜூன் 2010 (UTC)
- நன்றி சுந்தர். ஆங்கில விக்கியருடன் பழகிப் பழகி எனக்கும் “அவுட்டிங் பாரனோயா” வந்து விட்டது. கூகிளில் அடித்தால் உடனே தெரிந்துவிடுமென்பது வெறு கதை :-)--Sodabottle 08:04, 19 ஜூன் 2010 (UTC)
52 கட்டுரைகள்
தொகுவியப்பூட்டுகின்றது!! நன்றி. --செல்வா 16:39, 19 ஜூன் 2010 (UTC)
கட்டுரையாக்குனர் பதக்கம் | ||
கட்டுரைப் போட்டிக்கென 52 கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள் என்ற செய்தியறிந்து வியந்தேன்! உங்களுக்கு ஒரு சிறப்புப் பரிசே அளிக்கலாம். இப்போதைக்கு கட்டுரை ஆக்குனருக்கான இந்த நாள்மீன் பதக்கம். கிழமைக்கு ஒன்றாக ஒரு ஆண்டில் இக்கட்டுரைகளை நல்ல கட்டுரைகளாகவும், சிறப்புக் கட்டுரைகளாகவும் வளர்த்தெடுங்கள், அடுத்த ஆண்டு இன்னொரு பதக்கம் வழங்குவேன். :) -- சுந்தர் \பேச்சு 05:40, 19 ஜூன் 2010 (UTC) |
கட்டுரைப் போட்டி கட்டுரைகள் மாற்றம்
தொகு- வாழ்த்துக்கள் சோடாபொட்டில். இக்கட்டுரைகளை எப்போது நகர்த்தப் போகிறீர்கள்?--Kanags \உரையாடுக 10:38, 10 ஜூலை 2010 (UTC)
- தேர்வு பெற்ற மற்ற கட்டுரைகளேல்லாம் பதிவேற்ற ஒரு முறை வகுக்கும் வரை காத்திருக்கச் சொல்லி சொல்லியிருக்கிறார்கள். (சுந்தரும் ரவியும்)--Sodabottle 12:37, 10 ஜூலை 2010 (UTC)
ம.கோ.இரா. சுடப்பட்ட வழக்கு
தொகுசோடாபாட்டில், இங்குள்ள வாதங்களைப் பார்த்து கட்டுரையை நடுநிலைக்குக் கொண்டு வரத் தேவையான சான்றுகளுடன் தகவல்களைச் சேர்த்து உதவுங்கள். -- சுந்தர் \பேச்சு 06:31, 12 ஜூலை 2010 (UTC)
பதிவேற்றிய கட்டுரைப் போட்டிக் கட்டுரைகள்
தொகுநீங்கள் பதிவேற்றி வரும் கட்டுரைப் போட்டிக் கட்டுரைகள் பட்டியலை வலைவாசல்:கட்டுரைப்போட்டி/கட்டுரைகள் பதிவேற்றும் பணி பக்கத்தில் இட்டால் உதவியாக இருக்கும். நன்றி--இரவி 11:34, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
அமேரிக்கா
தொகுஅமேரிக்கா என்பது சரியான உச்சரிப்பாக (??) இருந்தாலும், தமிழில் அமெரிக்கா எனவே எழுதி வருகிறோம்.--Kanags \உரையாடுக 11:57, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி கனகு. பொதுவெளிக்கு நகர்த்தும் போது தலைப்பை சரிசெய்துவிடுகிறேன்.--சோடாபாட்டில் 12:07, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
பாராட்டு
தொகுஇது வரை எத்தனை சோடா பாட்டில்களைக் காலி ஆக்கி இருந்தால் இந்த அளவு பங்களிப்பீர்கள் :) ! மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களைப் போல் இன்னும் பலர் வர வேண்டும்--இரவி 11:57, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி நன்றி. கொஞ்ச நாள் ஆங்கில விக்கிக்கு லீவு விட்டிருக்கிறேன். அதனால் இங்கு அதிகம் வேலை செய்ய முடிகிறது :-)--சோடாபாட்டில் 12:08, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
நல்லது சோடாபாட்டில். கொஞ்சம் Long Leaveவாகவே போட்டுவிடுங்கள் ;) தனிப்பட்ட முறையில் உங்கள் கட்டுரைகலும், நடையும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. --அராபத்* عرفات 15:28, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
- ஒரு பன்னண்டு வருசமா தமிங்கலந்தான் யூஸ் பண்ணிட்டிருந்தேன். தமிழ் எழுத்து வாசனையேயில்லாம இருந்தது. இப்ப ஏங்கிட்ட சிக்கிகிட்டு தமிழ் கஸ்டப்படுது. :-)--சோடாபாட்டில் 06:56, 1 செப்டெம்பர் 2010 (UTC)
கேபினட் அமைச்சர்
தொகுகேபினட் அமைச்சர் என்பதை தமிழில் ஆய அமைச்சர் எனலாம், விக்சனரியிலும் அப்படிதான் போட்டிருக்கு. சில முறை தவறி தெரியாத்தனமா இதழ்களில் ஆய அமைச்சர் எனவும் எழுதியுள்ளார்கள் ;) --குறும்பன் 18:04, 9 செப்டெம்பர் 2010 (UTC).
- நன்றி குறும்பன். ஒரு find and replace செய்து விடுகிறேன்.--சோடாபாட்டில் 18:09, 9 செப்டெம்பர் 2010 (UTC)
தகவலுக்கு நன்றி
தொகுதகவலுக்கு நன்றி சோடாபாட்டில். இனிவரும் கட்டுரைகளில் சரி செய்து விடுகிறேன்./*Shahulvrn*/ 07:03, 10 செப்டெம்பர் 2010 (UTC)
நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?
தொகுவணக்கம் சோடா பாட்டில், நீங்கள் விரும்பினால் தமிழ் விக்கி நிருவாகப் பொறுப்புக்கு உங்களைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். நன்றி--இரவி 08:02, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி ரவி. பொறுப்பை ஏற்றுக்கொள்ள எனக்கு விருப்பமே--சோடாபாட்டில் 08:06, 16 செப்டெம்பர் 2010 (UTC)
மகிழ்ச்சி, சோடா பாட்டில். விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்கள் ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--இரவி 08:17, 16 செப்டெம்பர் 2010 (UTC)
சோடா பாட்டில், வாக்கெடுப்பு முடிந்து உங்களுக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் விக்கிப்பணியை மென்மேலும் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள்--இரவி 15:21, 23 செப்டெம்பர் 2010 (UTC)
- சோடாபாட்டில், நீங்கள் நிருவாக அணுக்கம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்புகள் தமிழ் விக்கியை முன்னேற்றட்டும்.--அராபத்* عرفات 16:46, 23 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி ரவி, அராபத்--சோடாபாட்டில் 18:28, 23 செப்டெம்பர் 2010 (UTC)
- சோடாபாட்டில், நிருவாகிகளில் ஒருவராக இணைந்ததில் மகிழ்ச்சி. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 21:23, 23 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி கனக்ஸ் :-)--சோடாபாட்டில் 21:30, 23 செப்டெம்பர் 2010 (UTC)
- நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள் !! இனி தமிழ் விக்கியின் துப்புரவுப்பணிகளிலும் உங்கள் பங்கு சீராக இருக்கும்.--மணியன் 23:10, 23 செப்டெம்பர் 2010 (UTC)
- எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சோடா! ----ராஜ்6644 08:11, 25 செப்டெம்பர் 2010 (UTC)
சோடாபாட்டில் நீங்கள் செயலாட்சியரில் (நிருவாகிகளில்) ஒருவராக தேர்வு பெற்றிருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி, நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! உங்கள் சுறுசுறுப்பும், வீச்சும் த.வி-யை மேன்மைப்படுத்தும் என்று நம்புகிறேன். --செல்வா 15:30, 25 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி ராஜ், செல்வா--சோடாபாட்டில் 15:32, 25 செப்டெம்பர் 2010 (UTC)
COORD உதவி
தொகுசோடாபாட்டில்,
- புதுப்பயனர்களை வரவேற்கும் போது உங்கள் கையொப்பத்தையும் தவறாமல் இடுங்கள்:).
- நாசிக் கட்டுரையில் இந்தியத் தகவல் பெட்டியை சேர்த்த போது கட்டுரையின் தொடக்கத்தில் இடது பக்கத்தில் அமைவிட ஆள்கூறுகள் சேர்க்கப்படுகின்றன. அதனை எவ்வாறு (ஆங்கில விக்கியில் [1] உள்ளது போன்று) வலது பக்க மேல் மூலைக்குக் கொண்டு வருவது?--Kanags \உரையாடுக 10:49, 28 செப்டெம்பர் 2010 (UTC)
- 1) நன்றி கனகு. இனி செய்து விடுகிறேன். இதே பிரச்சனையை சரி செய்ய கொஞ்ச நாள் முன்னே coord வார்ப்புருவை நோண்டிக் கொண்டிருந்தேன். display=title மட்டும் வேலை செய்ய மாட்டேங்குது. இதைக் கொஞ்சம் நிதானமாக நோண்ட வேண்டும். முயற்சி செய்து பார்க்கிறேன்.--சோடாபாட்டில் 11:15, 28 செப்டெம்பர் 2010 (UTC)
- இப்பிரச்சினை வார்ப்புரு:Infobox Indian Jurisdiction-2 என்ற வார்ப்புருவில் தானுள்ளது போல் தெரிகிறது. வார்ப்புரு:Infobox Indian Jurisdiction என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தும் போது இப்பிரச்சினை இல்லை.--Kanags \உரையாடுக 12:24, 28 செப்டெம்பர் 2010 (UTC)
- thats because jusidiction only uses display=inline option in the transcluded cooord template (coords appear only inline and not on top right corner). juris 2- uses dislpay=title option which is supposed to display it in a small font on the top right corner but instead displays in the same place where the code was written. i am tinkering the coord/display/title and cooord/display/inline,title pages trying to fix the display code manually.--சோடாபாட்டில் 12:28, 28 செப்டெம்பர் 2010 (UTC)
- சரி செய்ய முடியவில்லை. எங்கோ பெரிய அளவில் வழு இருக்கிறது. coord மட்டுமல்லாமல் top right corner icons (FA, GA, PP) எதுவுமே த. விக்கியில் வேலை செய்யவில்லை. ஆ. விக்கி குழாயடியில் உதவி கேட்டுள்ளேன்.--சோடாபாட்டில் 14:16, 28 செப்டெம்பர் 2010 (UTC)
- வழு பதிய வேண்டுமோ தெரியவில்லை. சுந்தருக்குத் தெரியலாம். நன்றி.--Kanags \உரையாடுக 21:21, 28 செப்டெம்பர் 2010 (UTC)
- சரி செய்துவிட்டேன் கனக்ஸ். ஆலமரத்தடியில் தான் போட்டிருந்த vector.css மாற்றம் தான் அது. புதிய வெக்டார் தோல் பயன்படுத்துபவர்களுக்கு இப்போது எல்லாம் நன்றாகத் தெரியும் (good article, lock, fa போன்ற மேல் வலது மூலை சின்னங்களும் இப்போது தெரிகின்றன). அமைவிடமும் ஒழுங்காகத் தெரிகிறது. இன்னும் பழைய தொலான monobook.css க்கு மாற்ற வில்லை. இந்த மாற்றத்தால் புதிய வழு உண்டாகி உள்ளதா என்பதை இரண்டு மூன்று நாட்கள் சோதித்து பார்த்து விட்டு, பின்னர் பழைய தோலுக்கும் போட்டு விடுகிறேன்.--சோடாபாட்டில் 03:22, 29 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி சோடாபாட்டில், இப்பொழுது ஒழுங்காகியிருக்கிறது. நானும் கவனிக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:55, 29 செப்டெம்பர் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் சோடா பாட்டில். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சோடாபாட்டில் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி --இரவி 11:10, 29 செப்டெம்பர் 2010 (UTC)
- வாணாம் வாணாம். நான் ஒரு அனானியவே இருக்கேன் ;-) --சோடாபாட்டில் 11:13, 29 செப்டெம்பர் 2010 (UTC)
பூக்களின் பெயர்களால் அமைந்த தமிழ்நாட்டு ஊர்களின் பட்டியல்
தொகுபூக்களின் பெயர்களால் அமைந்த தமிழ்நாட்டு ஊர்களின் பட்டியல் என்று ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைக்கிறேன். இது கலைக்களஞ்சிய நடைமுறைக்கு உகந்தது தானே ? உகந்தது என்றால் நல்ல தலைப்பொன்றையும் தரவும்.--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 16:57, 30 செப்டெம்பர் 2010 (UTC)
- இந்த பட்டியலில் உள்ள ஊர்களுக்கு. பூவின் பெயர் அமைந்த ஒற்றுமை தற்செயலானதென்றால் (அதாச்சு எல்லா ஊருக்கும் அந்த ஊருல கிடைக்கிற பூப் பெயரே வைக்கும் பழக்கம் இருந்துச்சுன்னா அது ஒற்றுமை. சும்மா பெயரை வச்சா அது coincidence) கலைக் களஞ்சியக் கட்டுரையாகாது. ஆய்வுக் கட்டுரையாகி விடும். --சோடாபாட்டில் 17:07, 30 செப்டெம்பர் 2010 (UTC)
கட்டுரை பரிந்துரை
தொகுநீங்கள் பரிந்துரைத்ததில் சில ஏற்கெனவே உள்ளன. உள்ளது விரிவாக்கலாம் என்று சொல்லியுள்ளேன். யானையால் மிதித்து மரணதண்டனை உள்ளது என்று நினைக்கிறேன் (நான் நீக்கினேன் கட்டுரையாளர் தவறென்றார் கனகு இணைத்தார்) ஆனால் தேடிப்பார்த்த போது கிடைக்கவில்லை. --குறும்பன் 22:27, 30 செப்டெம்பர் 2010 (UTC)
- கண்டுபிடிச்சிட்டேன் அது துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை யானையால் இடறி அல்ல, --குறும்பன் 00:11, 1 அக்டோபர் 2010 (UTC)
- துப்பாக்கியை நீங்கள் நீக்கியபின் ரகுநாதன் மீண்டும் உருவாக்கி வைத்தார் - அதே யூடா செய்தியைப் போட்டு. உரையாடல் பக்கத்தில் நீக்காதீர்கள் என்று வேண்டுகோள் வேறு. செல்வா, நக்கீரன் கூற்றுப்படி அதைக் “கலைகளஞ்சியப்” படுத்தியவன் அடியேன் தான் ;-).--சோடாபாட்டில் 03:07, 1 அக்டோபர் 2010 (UTC)
எழுத்துக்கள் கட்டங்களாக ஏன்?
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் ’’’ஃபெர்ராரி’’’ எனும் தலைப்பில் செய்த மாற்றங்களில் 04:32 (+2306) மற்றும் 04:34 (+139) மணிக்குச் செய்யப்பட்ட மாற்றங்களில் மட்டும் கட்டுரைத் தலைப்பு என் கணினியில் கட்டங்களாக வருகிறது. இந்தக் குறைபாடு என் கணினியில் மட்டும்தானா? இல்லை பிற கணினிகளிலுமா? கவனிக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 05:25, 3 அக்டோபர் 2010 (UTC)
- எனது இரு கணினிகளிலும் ஒழுங்காகத் தெரிகிறதே. வேறு வேறு உலாவிகளிலும் சோதித்து விட்டேன். கட்டுரைத் தலைப்பு மட்டும் கட்டமாக உள்ளதா, உள்ளடங்கங்களும் அப்படியே உள்ளனவா? (ஒருங்குறி உடைந்திருந்தால் நடக்க வாய்ப்புண்டு ஏதாவது interwiki links காப்பி செய்யும் போது புதிய எழுத்துரு வந்திருக்கக் கூடும்).--சோடாபாட்டில் 05:46, 3 அக்டோபர் 2010 (UTC)
தற்போது அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் ஃபஜ்ர் எனும் கட்டுரைக்கான தலைப்பு (07:50 . . (+460)) மட்டும் கட்டமாகத் தெரிகிறது. கட்டுரைக்கான பக்கத்தில் எந்தவிதமான மாறுபாடுகளுமில்லை நன்றாக இருக்கிறது. அந்தக் கட்டங்களை பிரதி செய்து ஒட்டினால் ஃபஜ்ர் என்று சரியாகத்தான் வருகிறது. இந்தக் குறைபாடு ஏனென்று புரியவில்லை. --தேனி.எம்.சுப்பிரமணி. 08:10, 3 அக்டோபர் 2010 (UTC)
- ம்ம்ம்ம். மர்மமாக உள்ளது. வேறிடத்திலிருந்து பரிசோதனை செய்து பார்க்கிறேன்--சோடாபாட்டில் 08:12, 3 அக்டோபர் 2010 (UTC)
கட்டுரைப்போட்டிக் கட்டுரைகள்
தொகுகட்டுரைப்போட்டிக் கட்டுரைகளைப் பதிவேற்றும் உங்கள் பணியைப் பாராட்டுகிறேன், சோடாபாட்டில். -- சுந்தர் \பேச்சு 09:20, 5 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி சுந்தர். அலுப்பாக இருக்கிறது. ஆனாலும் பல்லைக் கடித்துக் கொண்டு one step at a time முன்னேறிக் கொண்டிருக்கிறேன் :-)--சோடாபாட்டில் 09:22, 5 அக்டோபர் 2010 (UTC)
- மெதுவாக நகர்ந்தாலும் போதும், உங்களை நீங்களே அழுத்திக் கொள்ள வேண்டாம். -- சுந்தர் \பேச்சு 09:25, 5 அக்டோபர் 2010 (UTC)
table sorting
தொகுபாரத ரத்னா கட்டுரையில் உள்ள பட்டியலை பாருங்கள், அதேபோல en:Bharat Ratna கட்டுரையில் sorting வசதி உள்ளது. இதனை இங்கு கொண்டுவர ஜாவாஸ்கிரிப்ட் சேர்க்கப்படவேண்டும். முயன்று பாருங்களேன். -- மாஹிர் 16:23, 6 அக்டோபர் 2010 (UTC)
- vector இல் எனக்கு en. wiki இல் உள்ளது போலவே த. விக்கி பட்டியலும் sort ஆகுதே. த. விக்கி கட்டுரையில் உள்ள இரண்டு காலம்களும் எனக்கு sort ஆகின்றன. நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?--சோடாபாட்டில் 16:28, 6 அக்டோபர் 2010 (UTC)
- புரிந்து விட்டது மாஹிர். முயலுகிறேன்.--சோடாபாட்டில் 16:34, 6 அக்டோபர் 2010 (UTC)
- இப்பொழுது வேலை செய்கிறது. நன்றி - மாஹிர் 06:07, 9 அக்டோபர் 2010 (UTC)
- ஆ நான் ஒண்ணுமே செய்யலீங்களே...--சோடாபாட்டில் 06:20, 9 அக்டோபர் 2010 (UTC)
"ஆம் ஆண்டு பிறந்தவர்கள்"
தொகு64 பக்கங்களில் ஆம் ஆண்டு பிறந்தவர்கள் என இருக்கின்றன. த.விக்கீயில் AWB / Category rename போன்று எதேனும் பயன்படுத்த இயலுமா? ஸ்ரீகாந்த் 12:22, 9 அக்டோபர் 2010 (UTC)
- இப்படியான பிழையான பகுப்புக்களை நீக்கிவிட வேண்டும். பகுப்புக்களை வழிமாற்றவோ அல்லது பெயர் மாற்றவோ முடியாது. அத்துடன் பகுப்பு:வாழும் நபர்கள் என்ற பகுப்பும் தேவையற்றதாக நான் கருதுகிறேன்.--Kanags \உரையாடுக 12:29, 9 அக்டோபர் 2010 (UTC)
- கனக்ஸ், Biographies of Living Persons - BLP பிரச்சனை விக்கிமீடியா முழுவதும் சட்டச்சிக்கலை ஏற்படுத்தும் பிரச்சனை. இதுவே இன்று விக்கிமீடியா எதிர்கொள்ளும் அதி முக்கியமான publicity /legal பிரச்சனை இது தான். ஏற்கனவே ஆங்கில / டாய்ச்சி விக்கிகளில் இதற்காக தனி ஆராய்ச்சிகள் நடக்கின்றன. எப்படியும் கொஞ்ச நாளில் நமக்கும் வரும். எனவே இப்பகுப்பை நாமும் பின் பற்றுவது அவசியமென் நான நினைக்கிறேன்.--சோடாபாட்டில் 12:50, 9 அக்டோபர் 2010 (UTC)
- ஸ்ரீகாந்த், AWB கொண்டு செய்ய இயலும். ஆனால் நான் AWB ஓட்டியதே இல்லை. சுந்தர் ஏற்கனவே தானியங்கிகளை இயக்கி வருகிறார். அவரது பாட்டுக்கு இந்த வேலையை ஒப்படைக்கலாம். அவரிடம் கேட்டுப்பாருங்கள்.--சோடாபாட்டில் 12:50, 9 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி சோடா, சுந்தரை கேட்கிறேன். BLP - அவ்வளவு என், கேரள மாநிலத்திலியே,விக்கீ சீ.டி யில் சர்ச்சை பண்ணாங்களே.நம்ம அரசியல்வாதிகள் பக்கம் வளர்ந்தால் நமக்கும் அதே பிரச்சனை உண்டு.சீக்கரம் banner ரெடி பண்ணனும். ஸ்ரீகாந்த் 13:12, 9 அக்டோபர் 2010 (UTC)
- நான் ஒரு முப்பதைக் காலி செய்து விட்டேன். அரசியல்வாதிகள் வரைக்கும் போக வேண்டாம் எழுத்தாளர்களே போதும்
- -)--சோடாபாட்டில் 13
- 15, 9 அக்டோபர் 2010 (UTC)
- YYYY பிறப்புகள் என்று தானுலவி மூலம் எளிதாக மாற்ற முடியும். நான் முயலுகிறேன். -- மாஹிர் 16:08, 9 அக்டோபர் 2010 (UTC)