பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு10
தலைப்பை நீக்க உதவி
தொகுதிரு சோடாபாட்டில்,
திருத்தந்தையர்களின் குல மரபுச் சின்னம் பக்கத்தை நகர்த்த வசதியாக இருக்கும் பொருட்டு, திருத்தந்தையரின் ஆட்சி முத்திரை பக்கத்தை நீக்க வேண்டுகின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:35, 4 அக்டோபர் 2011 (UTC)
- ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 06:36, 4 அக்டோபர் 2011 (UTC)
- மிக்க நன்றி --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:38, 4 அக்டோபர் 2011 (UTC)
காமன்சுக்கு நகர்த்தல்
தொகுபாலா, காமன்சுக்கு நகர்த்துக வார்ப்புருவில் இருந்த உதவித் தொடுப்புகள் [1] இப்போது காணவில்லை. அவற்றையும் சேர்த்தால் நல்லதாகத் தெரிகிறது. முன்னர் ஒரு முறை படிமம் ஒன்றை கருவி மூலம் காமன்சுக்கு நகர்த்தியிருந்தேன்.--Kanags \உரையாடுக 09:54, 4 அக்டோபர் 2011 (UTC)
- பழைய பதிப்புக்கு மீளமைத்து விட்டேன். மொத்தமாக (உதவித் தொடுப்புகளுடன் மொழி பெயர்த்து விடுகிறேன்)--சோடாபாட்டில்உரையாடுக 10:04, 4 அக்டோபர் 2011 (UTC)
- கருவி மூலம் நகர்த்தப்பழகிவிட்டேன் :-)--சோடாபாட்டில்உரையாடுக 10:09, 4 அக்டோபர் 2011 (UTC)
தற்போதைய படங்கள், அனுமதி
தொகுஇது திட்டத்துக்கு தடையாக அமையாது. ஆனால் தற்போதைய படங்களின் அனுமதி நிலைமை தொடர்பாக ஒரு தரவு பெற்றால் உதவியாக அமையும் என்று நினைக்கிறேன். இதை pywikipedia கொண்டு செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். முன்னர் ரெரன்சு இந்த வேலையைத் தொடங்கினவர். நான் ஏற்றிய படங்கள் பலவற்றுக்கே அனுமதி தெளிவில்லாமல் உண்டு. ஒரு பிரச்சினை நான் அனுமதியை கருத்துக்கள் பெட்டியில் இடுவதாக இருக்கலாம். அனுமதித் தெரிவை மேலே போட்டு, அதை மேம்படுத்த வேண்டும். இது எனது முதல் கவனமாக இருக்கும். --Natkeeran 04:08, 5 அக்டோபர் 2011 (UTC)
- ஸ்ரீகாந்தும் நானும் இது போன்ற ஒரு தரவு/புள்ளிவிவரங்களை உருவாக்கும் பணியைத் திட்டமிடத் தொடங்கியுள்ளோம். ஒரு வாரத்தில் இதை எப்படிக் கையாளுவது என்ற ஒரு சிறு குறிப்பினை தயாரிக்கிறேன். (பிற விக்கிப்பீடியாக்களின் image tagging/file clean up drives பற்றி கொஞ்சம் படிக்க வேண்டியுள்ளது).--சோடாபாட்டில்உரையாடுக 04:13, 5 அக்டோபர் 2011 (UTC)
காமன்சுக்கு நகர்த்த என்ன செய்ய வேண்டும்?
தொகுதமிழ் விக்கியில் நான் இணைத்துள்ள சில படிமங்களை விக்கி காமென்சுக்கு நகர்த்த தாங்கள் பரிந்துரைத்துள்ளீர்கள். இதை எப்படி செய்வது?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:51, 5 அக்டோபர் 2011 (UTC)
- கருவி வழியாக நகர்த்த ஒரு எளிதான வழி உள்ளது. நான் அதைத் தட்டுத் தடுமாறிப் படித்துக் கொண்டிருக்கிறேன் :-). (CommonsHelper மூலம் நகர்த்துக என்ற அந்த வார்ப்புருவில் உள்ள தொடுப்பு மூலம் செல்ல வேண்டும்.) கருவி மெதுவாக வேலை செய்வதால் இன்னும் முழுமையாக கற்க இயலவில்லை. கொஞ்சம் பழகி விட்டு எப்படிச் செய்வதென்றொரு ஒரு உதவிப் பக்கத்தை உருவாக்கி விடுகிறேன். இப்போதைக்கு உரிமம் தெளிவாக உள்ளனவற்றை அடையாளம் கண்டு வார்ப்புரு இடும் வேலையை மட்டும் தொடங்கியுள்ளேன். பின்னர் அவ்வாறு அடையாளம் கண்டவற்றை, மொத்தமாக காமன்சுக்கு நகர்த்தும் எண்ணமும் உள்ளது). கொஞ்சம் பழகிவிட்டு விவரமாக பதில் அளிக்கின்றேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:36, 5 அக்டோபர் 2011 (UTC)
- எவ்வாறான படிமங்களை நகர்த்தலாம் என்பது ஆங்கில விக்கி உதவி இணைப்பில் விபரமாகத் தரப்பட்டுள்ளது. CommonsHelper மூலம் இலகுவாக நகர்த்தலாம். இதற்கு பார்க்க. TUSC இல் கணக்கு ஆரம்பியுங்கள். நான் முன்னர் இலகுவாக ஒரு படிமத்தை ஆங்கில விக்கியில் இருந்து பொதுவுக்கு இடம் மாற்றியிருந்தேன்.--Kanags \உரையாடுக 09:52, 5 அக்டோபர் 2011 (UTC)
புதுப்பயனர்
தொகுநீங்கள் பயனர் பேச்சு:Athiya இந்த பக்கத்தில் எழுதிய எச்சரிக்கையை பார்த்தேன். முதலில் நான் விக்கியில் இணைந்த போது எனக்கென்று பேச்சுப்பக்கம் உண்டென்பதையே சில நாட்கள் தெரியாமல் இருந்தேன். அதே நிலைமையில் இவரும் இருக்கலாம். அதனால் பொறுமையுடன் செயல்பட வேண்டுகிறேன். அவரின் கருத்துறை ஒன்று கூட பேச்சுப்பக்கத்தில் இடம்பெறவில்லை. அதே போல் அவர் பயனர் பக்கமும் வெறுமையாக உள்ளது. அதனால் அவருக்கு இதைப்பற்றி தெரியாமல் இருக்கலாம்.
பேச்சுப்பக்கத்தை பார்க்காமல் இக்கட்டுரையை தொகுக்க வேண்டாம் என்பது போல் ஒரு வார்புருவை உருவாக்கி இது போன்ற கட்டுரைகளில் இடுவது சரியாக இருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் 18:05, 10 அக்டோபர் 2011 (UTC)
- கவனத்தில் கொள்கிறேன். கட்டுரையில் இட வார்ப்புரு உருவாக்கது குறித்து யோசிக்கிறேன். (நல்ல யோசனை, சற்று சிந்தித்து செயல்படுத்த வேண்டும்).--சோடாபாட்டில்உரையாடுக 18:35, 10 அக்டோபர் 2011 (UTC)
விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/grantdraft
தொகுவிக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/grantdraft நன்றாக எழுதப்பட்டுள்ளது. டிசம்பர் 1, 2011 தொடக்க நாள் என்று கூறி உள்ளீர்கள். எமக்கு ஒக்டோபர் இறுதியில் விக்கியூடகத்தில் இருந்து பதில் கிடைத்தால், நவம்பர் மாத்திரமே பரப்புரைக்கு இருக்கும். இத் திட்டத்தை தொடங்க டிசம்பர் பொருத்தமான மாதமா என்றும் ஒரு முறை பரிசீலிக்க வேண்டும். --Natkeeran 21:30, 10 அக்டோபர் 2011 (UTC)
நாடு சார் ஒருங்கிணைப்பாளர்கள் பற்றியும் குறிப்பிடால். இல்லையா.
- இந்தியா
- இலங்கை
- மலேசியா
- சிங்கப்பூர்
- அசுத்திரேலியா
- கனடா
- நோர்வே
- யேர்மனி
- ஐக்கிய இராச்சியம் ??
- ஐக்கிய அமெரிக்கா ??
- பிரான்சு ??
--Natkeeran 21:38, 10 அக்டோபர் 2011 (UTC)
- 1) போட்டி 90 நாட்கள் என்பதால், பரப்புரை ஒரு தொடர்ச்சியான முயற்சி. எனவே பரப்புரைக்கு போதுமான நேர அவகாசம் உள்ளதென நினைகிறேன். மேலும் டிசம்பர் 1 provisional start date தானே. நல்கை வரவைப் பொறுத்து தள்ளிப் பொட்டுக் கொள்ளலாம். (விண்ணப்பத்தில் குறிப்பிடப் படும் தேதிகள் 3 மாதம் வரை நகர்த்திக் கொள்ளக் கூடியவை). நான் நல்கை கிடைத்து குறிப்பிட்ட குறுகிய இடைவெளிக்குள் போட்டியைத் தொடங்க வேண்டும் எனக் கருதுகிறேன். இல்லையெனில் தமிழ் விக்கியின் பிற திட்டங்களுக்கு நிகழும் “loss of focus" இதற்கும் நிகழும். ஒரு மாதம் இடைவெளி என்பதே அதிகம் எனக் கருதுகிறேன். சமூக வலை/இணையத்துக்கும் இரு வாரங்கள் போதும். இணையமல்லா பரப்புரைக்கு ஒரு மாதம் என்பது போதுமானது. நமது விக்கி சூழலில், கிடைக்கும் ஆள்பலம், தன்னார்வலர் சூழலுக்கேற்ப நாம் செயல்பட வேண்டுமெனில், திட்டகட்டங்களுக்கிடையே நீண்ட இடைவெளை, நீட்டித்த ஆயத்த முயற்சிகள் போன்றவை திட்டத்தைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தவை. எனவே மிதமான இடைவெளையில், நெருக்கமான காலகோடே பொருத்தமானது.
- 2) நாடுவாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் பற்றி குறிப்பிடவேண்டாம். அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் கண்டிப்பாக பணியாற்றுவார்கள் என உறுதியின்றி நாம் அவற்றைக் குறிப்பிடக்கூடாது. மேலும் இவ்வளவு ஒருங்கிணைப்பாளர்களைக் குறிப்பிட்டால், "too many cooks" போலவே தோன்றும். wiki loves monuments போன்ற ஆள்பலம் அதிகமுள்ள பல விக்கித்திட்டங்கள் இணைந்து நடத்தும் திட்டங்களுக்கே நாடு சார் ஒருங்கிணைப்பாளர்கள் குறைவே. நம்மைப் போன்று மாதத்துக்கு 20 பேர் மட்டுமே >100 தொகுப்புகள் கொண்ட சிறு திட்டத்தில் ஒரு போட்டிக்கு 15 ஒருங்கிணைப்பாளர்கள் என்று சொன்னால் அவர்களுக்கு கண்டிப்பாக சந்தேகம் எழும். they wont view this as a serious effort at all. ஒருங்கிணைப்பாளர்கள் குழு மிகப் பெரிதாக இருப்பது சீரிய நிருவாகத்துக்கு இடையூறாக இருக்கும். ஆள் அதிகமாக ஆக, குழுவில் உள்ளோர் பேசி முடிவெடுக்கவே நமது நேரமும் முயற்சியும் செலவாகும். திட்டம் நகரத் தொடங்கிய பின்னர், நாம் நமது தேவைக்கேற்ப நாடுவாரியாக ஒருங்கிணைப்பாளர்களை அமைத்துக் கொள்ளலாம். இந்தியா, இலங்கை, நார்வே, கனடா போன்ற இடங்களுக்கு இப்போதிருக்கும் நாம் ஐவரே போதும். அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் தொடர் பங்காளிப்பாளர்கள் உள்ளனர், எளிதில் தெரிவு செய்து விடலாம். பிரான்சு, ஐக்கிய இராச்சியம், யெர்மனி, மலேசியா ஆகிய நாடுகளில் நமது படிம, போட்டி விதிகளை அறிந்த தொடர் தமிழ் விக்கி பயனர் இல்லை. அவர்களைத் தயார் செய்தபின்னரே ஒருங்கிணைப்பாளர்களாக தெரிவு செய்ய வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 03:37, 11 அக்டோபர் 2011 (UTC)
- விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் திட்டமிட்டபடியே செய்யலாம். --Natkeeran 13:20, 11 அக்டோபர் 2011 (UTC)
போட்டியின் போது பயனர்களூக்கு நேரடி நுட்ப உதவி
தொகுநிச்சியமாக, போட்டியின் போது பலருக்கு எப்படிப் பதிவேற்றுவது, எங்கு போன்றவற்றுக்கு நேரடி நுட்ப உதவி தேவைப்படும். அதை வழங்க முன்வரும் பயனர்கள் கொண்ட ஒரு சிறு அணி தேவை. இசுகைப், டீம் வியூவர், மின்னஞ்சல் போன்றவற்றைப் பயன்படுத்தி இதைச் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். --Natkeeran 21:41, 10 அக்டோபர் 2011 (UTC)
- IRC, மின்னஞ்சல் வழியாகத் திட்டமிட்டுள்ளோம். Skype சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் teamviewer என்பது பொருத்தமில்லை. பின்னாளில் ஏதேனும் அவர்கள் கணினியில் நிகழ்ந்தால் நம் மீது புகார் வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. எனவே போட்டியாளர்கள் கணினிக்கு remote செய்வதைத் தவிர்ப்பது நல்லது.--சோடாபாட்டில்உரையாடுக 03:42, 11 அக்டோபர் 2011 (UTC)
- IRC, மின்னஞ்சல், மற்றும் இசுகைப் வழி வழிகாட்டல் நல்லது. மேலதிக அணி இருப்பது வெவ்வேறு சீர் நேர வீச்சுக்களில் உதவி தேடுபவர்களுக்கு உடனடியாக உதவவும் பயன்படும்.--சஞ்சீவி சிவகுமார் 09:48, 11 அக்டோபர் 2011 (UTC)
- நன்றி. அவ்வாறே செய்யலாம். --Natkeeran 13:21, 11 அக்டோபர் 2011 (UTC)
முதற்பக்கத்தில் சிறு திருத்தம்
தொகுதயவுசெய்து முதற்பக்க செய்திகளில் '2011ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மூன்று பெண் தன்னார்வலர்கள், எலன் ஜான்சன் சர்லீஃப் , லேமா குபோவீ, தவக்குல் கர்மான் ஆகியோருக்குக் கூட்டாக அறிவிக்கப்பட்டிள்ளது.' என்ற செய்தியிலுள்ள சிறு தவறைச் சரிசெய்யவும். 'அறிவிக்கப்பட்டிள்ளது'->'அறிவிக்கப்பட்டுள்ளது' --சிவகோசரன் 06:14, 12 அக்டோபர் 2011 (UTC)
- நன்றி சிவகோசரன். சரி செய்துவிட்டேன். முதற்பக்கம் முழுக்க வார்ப்புருக்களால் ஆனது. தனி வார்ப்புருகளை நிருவாகியல்லாதோரும் தொகுக்கலாம் (முதல்பக்க முதன்மை வார்ப்புரு மட்டுமே பூட்டப்பட்டுள்ளது). எ.கா தலைப்பு செய்திகள் உள்ள வார்ப்புரு வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள். எனவே இது போன்ற பிழைகளைக் கண்டால் அனைவரும் திருத்தி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 06:21, 12 அக்டோபர் 2011 (UTC)
- நன்றி. நிருவாகிகளே இதனைச் செய்யலாம் என எண்ணியிருந்தேன் :( --சிவகோசரன் 06:23, 12 அக்டோபர் 2011 (UTC)
- வார்ப்புருக்குள் வார்ப்புருக்களே நமது முதல்பக்க அமைப்பு :-). இங்கு விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 06:46, 12 அக்டோபர் 2011 (UTC)
- இவ்விணைப்பு இயங்கவில்லை :( --சிவகோசரன் 04:28, 13 அக்டோபர் 2011 (UTC)
படிமங்களின் பதிப்புரிமை
தொகுஏற்கனவே பதிவேற்றப்பட்ட சில படிமங்களுக்கு காப்புரிமை பற்றிய தகவல்கள் இடப்படாமலுள்ளன. அவற்றுக்கு காப்புரிமைத் தகவல்களை இடவேண்டுமாயின் அதனை பதிவேற்றிய பயனர் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா? அல்லது உள்ள படிமத்துக்குக் காப்புரிமைத்தகவல்களை நேரடியாகச் சேர்க்க முடியுமாயின் எவ்வாறு?--சஞ்சீவி சிவகுமார் 03:44, 13 அக்டோபர் 2011 (UTC)
- பதிப்புரிமைத் தகவல்கள் படிமப் பக்கங்களில் வார்ப்புருக்களாகவே இணைக்கபடுகின்றன. எனவே மீண்டும் பதிவேற்றத் தேவையில்லை. மற்ற பக்கங்களைத் தொகுப்பது போலவே தொகுத்து வார்ப்புருக்களை இணைத்து விடலாம். அல்லது அவர்கள் மூலத்தையும் /தான் எடுத்ததா என்று எழுத்தில் குறிப்பிட்டால் கூடப் போதுமானது. நாம் அதற்கேற்றார் போல தகுந்த வார்ப்புருவினை இணைத்து விட்லாம்.--சோடாபாட்டில்உரையாடுக 03:47, 13 அக்டோபர் 2011 (UTC)
படிமம்:Maddakkalappu manmiyam.jpg பக்கத்தில் தேவையான் வார்ப்புரு + நியாயப் பயன்பாட்டுக் காரணத்தை இணைத்துள்ளேன். அதை ஒரு மாதிரியாகக் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 03:53, 13 அக்டோபர் 2011 (UTC)
நன்றி சோடாபாட்டில்--சஞ்சீவி சிவகுமார் 03:57, 13 அக்டோபர் 2011 (UTC)
லாப்ரடார் பூங்கா தொடருந்து நிலையம்
தொகுசகோ, இந்த பக்கத்தில் லாப்ரடார் பூங்காதொடருந்து நிலையம், தலைப்பில் பூங்கா விற்கு அடுத்து ஒரு இடைவெளி இட வேண்டுகிறேன். நன்றி.--Jenakarthik 12:28, 14 அக்டோபர் 2011 (UTC)
- திருத்தியிருக்கிறேன். கார்த்திக், இதனை நீங்களே செய்யலாம், பக்கத் தலைப்பை நகர்த்துவதன் மூலம்.--Kanags \உரையாடுக 12:34, 14 அக்டோபர் 2011 (UTC)
G MAP
தொகுஜி மேப்களில் விக்கிப்பீடியா என்ற ஒரு பகுதி வருகிறதே அது எதற்கு? அவைகளை விக்கிப்பீடியாக்களில் கொண்டு வரலாமா?தென்காசி சுப்பிரமணியன் 06:13, 15 அக்டோபர் 2011 (UTC)
- google maps?. விக்கிப்பீடியாவில் கட்டுரைகளில் புவியியல் ஆட்கூறு எண்கள் இணைக்கப்பட்டிருந்தால் அக்கட்டுரைகளின் இணைப்புகள் நிலப்படங்களில் தோன்றும்படி கூகுள் செய்துள்ளது. ஒரு மேலதிகத் தகவல் தருவதற்கு. அவற்றை நாம் இங்கு இணைக்க இயலாது (நமது உரிமம் பிறர் பயன்படுத்த அனுமதிக்கிறது, கூகுள் உரிமம் தடை செய்கிறது)--சோடாபாட்டில்உரையாடுக 06:16, 15 அக்டோபர் 2011 (UTC)
Non-free media use rationale
தொகுNon-free media use rationale எப்படி வேலை செய்கிறது. வேண்டிய படங்களை இணைத்துவிட்டு இந்த rationally இடலாமா ?? --Natkeeran 04:46, 20 அக்டோபர் 2011 (UTC)
- ஒரு கட்டுரையில் எவ்வளவு இயலுமோ அவ்வளவு குறைவான NFCC (non free criteria) படங்களை மட்டுமே இணைக்க வேண்டும். ஆங்கில விக்கியில் ரூல் ஆஃப் தம்ப் நான்கு அல்லது ஐந்துக்கு மேல் போக விடுவதில்லை. மேலும் அப்படம் காட்டும் விசயம் உரையில் ஒரு பகுதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க அல்லது விளக்கப்பட்டிருக்க வேண்டும். (இறந்தவர்கள் படங்கள், நிறுவனச் சின்னங்கள், நூல அட்டைகள் இதற்கு விதி விலக்கு - ஆனால் இவை மூன்றும் அவை குறித்த கட்டுரைகளில் மட்டுமே இடம் பெறலாம்). --சோடாபாட்டில்உரையாடுக 05:10, 20 அக்டோபர் 2011 (UTC)
மொழிபெயர்ப்புத் தவறு
தொகுசில தகவற் பெட்டிகளில் வரும் தகவல்கள் பிழையான மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளன. Before என்பதை முன்னிருந்தவர் என்றும் After என்பதைப் பின் வந்தவர் என்றும் குறிப்பிட்டிருப்பது பெரிய குறைபாட்டை ஏற்படுத்துகிறது. அவை முறையே முன்னர் என்றும் பின்னர் என்றும் மாற்றப்பட வேண்டும். நீங்கள் சமர்கந்து கட்டுரையின் கீழ்ப் பகுதியில் உள்ள ஈரானியத் தலைநகரங்கள் தகவற் பெட்டியைப் பார்த்தால் நல்லது. அதனைச் சீராக்க முடியுமா?--பாஹிம் 05:23, 20 அக்டோபர் 2011 (UTC)
- s தகவல் பெட்டி ஆங்கிலத்தில் அனைத்துக்கும் (நபர் + அமைப்பு) பொதுவானதாக இருக்கிறது. இதனை ஆரம்பித்த ரெங்கராசு நபர்களுக்கு என்றே உருவாக்கினார் போலும். ஆனாலும் பாஹிம் குறிப்பிட்டபடி முன்னர், பின்னர் என மாற்றுவதில் தவறில்லை.--Kanags \உரையாடுக 05:52, 20 அக்டோபர் 2011 (UTC)
- {{Succession box}} வார்ப்புரு நபர்களுக்காக உருவாக்கப்பட்டதே. நபர்/இடம்/ பொருள் என்பதற்கு பொதுவாக முன்னர் / பின்னர் என்று மாற்றி விடலாம். அவ்வாறே செய்து விட்டேன். --சோடாபாட்டில்உரையாடுக 06:55, 20 அக்டோபர் 2011 (UTC)
commons
தொகுIf i went to commons to add picture from your link in aarumugaswamy sithar image it asked to login. what canmi do? I think this is newly added procedure. இவ்வார்ப்புரு நிறைய படிமங்களுடன் இணைக்கப்படவேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் 17:38, 24 அக்டோபர் 2011 (UTC)
- when you log in ta wiki, choose the "log me in globally" option, that would automatically login in all wiki projects. விக்கி ஊடகப் போட்டியின் ஒரு பகுதியாக த.விக்கியில் உள்ள பதிப்புரிமை தெளிவான படங்களை காமன்சுக்கு மாற்ற உள்ளோம். உங்களுக்கு மாற்றுவது கடினமாக இருந்தால் (எனக்கு எரிச்சலைக் கொடுக்கும் செயல்முறையாக உள்ளது :-)) விட்டுவிடுங்கள், பின்னர் மொத்தமாக தானியங்கி கொண்டு மாற்றிவிடலாம் என திட்டமிட்டுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:56, 24 அக்டோபர் 2011 (UTC)
சில மாற்றங்கள் கோரி
தொகுபெயர் தெளிவை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் தொடர்பில்லாத இடங்கள் மற்றும் வார்த்தைகளில் தனித்தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை. உதாரணமாக, கிறிஸ்து என்பது கிறித்து என்றும், ஜெர்மனி என்பது செருமனி என்றும், ஆகஸ்ட் என்பது ஆகத்து என்றும் எழுதப்படுவது சரியானதாக இல்லை. மேலும், வார்த்தை தெளிவுக்காக ஆங்கிலம் அல்லது பிறமொழிப் பெயர்களை தமிழில் எழுதும்போது மெய்யெழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளைத் தொடங்குவதில்கூட தவறில்லை என்று கருதுகிறேன். இதன்மூலம், தமிழ் விக்கிப்பீடியா அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் கலைக்களஞ்சியமாக துலங்கும் என்று நம்புகிறேன். தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்
மேலும் லூர்து அன்னை பற்றிய தொகுப்பில் நான் பயன்படுத்தி இருக்கும்
Sodabottle/தொகுப்பு10 |
---|
சரியாக இயங்கவில்லை; சரிசெய்தால் நலமாக இருக்கும். புதிய பகுப்புகளை தொகுப்பது எப்படி என்ற தகவலையும் தந்தால் உதவியாக இருக்கும். -பயனர்: Agnel
- >>தனித்தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை.
- கிரந்தம் + தனித்தமிழ் பற்றி தமிழ் விக்கியில் உறுதியான கொள்கை எதுவும் கிடையாது. கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஒரு பொதுப்பரிந்துரையாகவே தமிழ் விக்கி கொண்டுள்ளது. என்னைப் பொறுத்த வரை கிரந்தம் கலந்து எழுதுவோர் எழுதட்டும், தனித்தமிழில் இலக்கணப் பிழைகளின்றி எழுதுவோர் எழுதட்டும் என்றே கொண்டுள்ளேன். இது குறித்து பல விவாதங்கள் முன்பு நடந்துள்ளன. இறுதியான நிலை எதுவும் ஏற்படவில்லை. என்னைப் பொறுத்தவரை சில கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகிறேன், சிலவற்றைப் பயன்படுத்துவதில்லை.
- >>தமிழ் விக்கிப்பீடியா அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் கலைக்களஞ்சியமாக துலங்கும் என்று நம்புகிறேன்.
- இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. “அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும்” என்பது ஒரு subjective வரையறை. இதே காரணத்தை முழுக்க ஆங்கிலத்தில் தலைப்பிட, லத்தீன் எழுத்துருவை பயன்படுத்தக் கோருவோரும் வேண்டியதுண்டு. ஆங்கிலத்தில் உள்ளடக்கங்களை சேர்க்கலாம் என்று கூடக் கோரியோரும் உண்டு. கலைச்சொற்களை ஆக்க வேண்டாம், ஆங்கில சொற்களை எழுத்துப்பெயர்த்தால் போதும் என்று கோருவோரும் இதே வாதத்தை முன் வைத்துள்ளனர். (தமிழில் விக்கிப்பீடியா எதற்கு ஆங்கிலம் போதுமே என்று சொல்வோரும் இதே காரணத்தை சொன்னதுண்டு :-)). எனவே “புரிதல்” என்பது நிலையானதல்ல, எங்கோ ஒரிடத்தில் நடைக் கையேடு வரையறுக்க வேண்டிய நிலை நமக்கு உண்டு. மெய்யெழுத்தில் தொடங்கும் தலைப்பை வழிமாற்றாகக் கொள்வதில் எந்த மறுப்பும் இல்லை. மெய்யெழுத்தில் தொடங்குவதால் (ப்ரியா vs பிரியா) புரிதல் எளிதாகும், ஒலிப்புத் துல்லியம் கிடைக்கும் என்பதில் எனக்கு ஒப்புதல் கிடையாது. (இதுவும் என் தனிப்பட்ட கருத்தே). நான் பங்களிக்கத் தொடங்கிய புதிதில் இங்கு மட்டுமல்ல ஆங்கில விக்கியின் நடையும் புதிதாகவே எனக்குத் தோன்றியது (இப்போது உங்களுக்குத் தோன்றுவது போலவே). வெகுஜன ஊடகங்களைக் கண்டு பழகிய நமக்கு, கலைக்களஞ்சியத்தின் சற்றே இறுக்கமான விதிகள் இவ்வாறு படுவது இயல்பே. பிரிட்டானிக்கா, என்கார்ட்டா, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் ஆகியவற்றை ஒப்பு நோக்கியபின் இந்த நடைக்கையேடு வேறுபாடு (வெகுஜன ஊடகங்கள் எதிர். கலைக்களஞ்சியங்கள்) அனைத்து மொழிகளிலும் இருப்பதைக் கண்டு கொண்டேன். பின் போகப் போகப் பழகி விட்டது.
- தகவல் பெட்டிகளை உருவாக்க: ஆங்கில விக்கியில் template என்ற முன்னொட்டை இட்டுத் தேடுங்கள் எ.கா. நீங்கள் குறிப்பிடும் தகவல் பெட்டி Template:Infobox Catholic apparition என்ற தலைப்பில் இருக்கும். அதன் உள்ளடக்கங்களைப் படியெடுத்து வார்ப்புரு:Infobox Catholic apparition என்ற பக்கத்தில் இட்டு சேமித்தால் தமிழில் இத்தகவல் பெட்டி உருவாகிவிடும். அதன் உள்ளடக்கங்களில் “label" களை மட்டும் தமிழாக்கம் செய்து விடுங்கள் (நிரல்கள் ஆங்கிலத்தில் இருக்கட்டும்)--சோடாபாட்டில்உரையாடுக 13:54, 26 அக்டோபர் 2011 (UTC)
தலைப்பு மாற்றம்
தொகுதிரு சோடாபாட்டில்,
Louise de Marillac என்ற பெயரின் பெண் பாலில் லுயீஸ் டி மரிலாக் என்று ஒலிப்பெயர்க்க வேண்டியதாக இருந்தாலும், லூயிஸ் டி மரிலாக் என்று ஒலிப்பெயர்ப்பதே தமிழ் கத்தோலிக்க மரபு. எனவே அப்பக்கத்தின் வழிமாற்றை நீக்க வேண்டுகின்றேன். மேலும் Catholic Apparitions வார்ப்புருவை செயலாக்கம் செய்ததற்காக உங்களுக்கு நன்றி! -ஆக்னல்.
- தவறான ஒலிபெயர்ப்பு மரபாக இருந்தால், வழிமாற்றாகக் கொள்ளலாம். தற்போது “லுயீஸ் டி மரிலாக்” என்பது முதன்மைப் பெயராகவும், “லூயிஸ் டி மரிலாக்” என்பது வழிமாற்றாகவும் உள்ளது. இதனுடன் கட்டுரையின் உள்ளே ஒரு வரி சேர்த்து விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 14:59, 31 அக்டோபர் 2011 (UTC)
- ஆக்னல், சோடாபாட்டில்,
இங்கே விவாதிக்கப்படுகின்ற பெயர் ஒலிப்பு பற்றி என் கருத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். Louise de Marillac என்பது பிரஞ்சு மொழிப் பெயர் என்பதால் அதை "லுயீஸ் தெ மரியாக்" என்பதே சரி. இதோ ஒரு யூட்யூப். இணைப்பு: "லுயீஸ் தெ மரியாக்" ஒலிப்பு.
எனவே, வழிமாற்று கொடுக்கும்போது, "லுயீஸ் தெ மரியாக்" என்றும் கொடுப்பது பொருத்தம் ஆகும்.
தமிழில் சிலர் Louis என்பதற்கும் Louise என்பதற்கும் ஒலிப்பில் வேறுபாடு காட்டுவதில்லை என்பது. உண்மைதான். என்றாலும், தமிழ் விக்கியில் அந்த வேறுபாட்டைக் காட்டுவது மிகவும் விரும்பத்தக்கது.--பவுல்-Paul 15:10, 31 அக்டோபர் 2011 (UTC)
- நன்றி பவுல். இப்போது தான் உங்களிடமோ செல்வாவிடமோ இது பற்றி உதவி கேட்கலாமா என எண்ணிக் கொண்டிருந்தேன் :-). தேவையான மாற்றங்களை தாங்களே செய்துவிட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:30, 31 அக்டோபர் 2011 (UTC)