வாருங்கள்!

வாருங்கள், User15may, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:51, 5 திசம்பர் 2024 (UTC)Reply

ஏற்கனவே உள்ள பயனர் கணக்கின் வழியாக கருத்துகளை முன்வைத்தல்

தொகு
  • புதிய பயனர்களும் கருத்திடலாம். ஆனால், கருத்திடுவதற்காக புதிதாக இன்னொரு கணக்கை ஆரம்பித்து செயல்பட்டிருப்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.
  • விக்கிமீடியா அறிஞர் திட்டம் பற்றி விரிவாக வைக்கப்படாத நிலையில், //விளம்பரங்கள் வேறு// என எழுதியிருப்பது... தாக்குதல் மட்டுமே நோக்கம் எனச் சொல்கிறது.
  • அடையாளங் காட்டாத ஒருவரின் அறிவுரைகள் அர்த்தமற்றவை.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் விளம்பரம் செய்ய முற்படுவோர், தகாத செயல்களில் ஈடுபடுவோரின் பயனர் பக்கங்கள், உரையாடல் பக்கங்கள் நீக்கப்படும். தீய செயல்களைச் செய்வோரின் கணக்கு தடைக்குள்ளாகும். அதே போன்று தொடர்ச்சியாக தொகுத்தலில் முரண்பட்டுச் செயல்படுவோரின் கணக்கு தடைக்குள்ளாகும். ஆனால், கருத்துகளை முன்வைப்பவர்களின் கணக்குகள் தடைசெய்யப்படுவது இல்லை. அடையாளங் காட்டாது, மனிதர்களின் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அக்கணக்கிற்குரிய உரையாடல் பக்கம் நீக்கப்படுவது இல்லை. ஏனெனில், எதிர்ப்பை மறைக்க தமிழ் விக்கிப்பீடியா எனும் குமுகாயம் விரும்புவதில்லை. Sockpuppet'ஆக செயல்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தேவைப்படும் ஒன்று.
  • மொட்டைக் கடிதாசி எழுதுபவர் எத்தகைய bad taste (சீர்கேடான) வார்த்தைகளையும் எழுதிவிட இயலும். என்னுடைய செயல்பாடுகளில் விமர்சனம் இருந்தால், எனது உரையாடல் பக்கத்திலோ ஆலமரத்தடியில் புதிய தலைப்பின் கீழோ கேள்விகள் கேட்கலாம் - ஏற்கனவே உள்ள பயனர் கணக்கின் வழியாக வந்து!
  • விக்கிமீடியா அறக்கட்டளை எனும் அமைப்பு ஏற்படுத்தியுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். அறக்கட்டளை நடத்தும் பல்வேறு இயக்கங்கள் (movement), நிகழ்வுகள் (event) போன்று தமிழ் விக்கிப்பீடியாவிலும் செயல்பாடுகள் நடக்கின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:User15may&oldid=4156822" இலிருந்து மீள்விக்கப்பட்டது