Vimalaranjan
வாருங்கள்!
வாருங்கள், Vimalaranjan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:48, 9 சூன் 2012 (UTC)
சமூக கட்டமைப்பு வலை
தொகுசமூக கட்டமைப்பு வலை குறித்த கட்டுரையை உருவாக்கியுள்ளீர்கள், இது ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள சமூக வலைத் தளம் கட்டுரையுடன் கருத்தொற்றுமையுள்ள பக்கமாகும். அதனால், இப்பக்கத்தினை அக்கட்டுரையுடன் இணைக்கலாம் என்று எண்ணியுள்ளேன். உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:50, 9 சூன் 2012 (UTC)
- தினேஷ்குமார் இணைப்பதுதான் சிறந்தது.--Vimalaranjan (பேச்சு) 15:36, 9 சூன் 2012 (UTC) விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:37, 10 சூன் 2012 (UTC)
{{mergeto}} வார்ப்புரு இணைத்துள்ளேன். நிருவாகிகள் கவனத்திற்கொள்ள வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 02:39, 10 சூன் 2012 (UTC)
வரவேற்கிறோம்
தொகுநல்வரவு, விமலரஞ்சன்! --செல்வா (பேச்சு) 15:19, 9 சூன் 2012 (UTC)
- நன்றி செல்லா ஐயா
விவரங்களைத் தொகுக்கவும்
தொகு- வணக்கம் விமலரஞ்சன். விக்கிபீடியாவுக்கு வரவேற்கிறோம். தங்களைப்பற்றிய விவரங்களைத் தங்களின் பயனர் பக்கத்தில் தந்தால் தங்களைப்பற்றி அறிந்துகொள்ள வசதியாக இருக்கும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:39, 9 சூன் 2012 (UTC)
நன்றி பார்வதிஸ்ரீ
என்னைப்பற்றி: எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் ஆரம்பக்கல்வி: வட்டக்கச்சி மகா வித்தியாலயம் மற்றும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி.
பட்டயப் படிப்பினை மலேசியாவின் பைனரி யூனிவர்சிட்டியிலும் தற்பொழுது யூனிவர்சிட்டி ஒப் போட்ஸ்மவுத் (இங்கிலாந்து) இல் இணைய இயந்திரவியல் இளங்கலைப் பட்டப்படிப்பின் கடைசி ஆண்டு மாணவன்.
எனக்கு மிகப்பிடித்தது தமிழ் இரண்டாவது இணைய வடிவமைப்பு, அனைத்து வகையான இணையத்தளங்களையும் பலதரப்பட்டோருக்கு வடிவமைத்து வளங்கியுள்ளேன். கடந்த ஓராண்டாக சமூக வலைத் தளம் ஒன்றினை உருவாக்கிவருகிறேன்.
- வணக்கம் விமலராஜன் இதே தகவலை உங்களுடைய பயனர் பக்கத்தில் குறிப்பிடுங்கள். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:22, 11 சூன் 2012 (UTC)
நன்றி தினேஷ்குமார் அப்படியே செய்கிறேன்.
- நீங்கள் பதில்கூறும் போது அல்லது உங்களுடைய கருத்துகளை உரையாடல் பக்கங்களில் தெரிவிக்கும் போது உங்களுடைய கையொப்பத்தினை இடவும், பார்க்க விக்கிப்பீடியா:கையெழுத்து -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:07, 11 சூன் 2012 (UTC)
ப்ரண்ட்ஸ்
தொகுப்ரண்ட்ஸ் கட்டுரையில் நீங்கள் இந்த மாற்றத்தைச் செய்திருந்தீர்கள். கிரந்த எழுத்தைத் தவிர்த்து அவ்வாறு எழுதுவது எந்த விதத்திலும் தவறாகத் தோன்றவில்லை. ஏற்கனவே ராமானுஜன் என்பது இராமானுசன் என மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கேயும் விஜய் என்பதைத் தமிழ் எழுத்துகளின் மூலம் விசய் என்றே பயன்படுத்துவது தவறில்லை. இதற்கான விளக்கத்தை அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:41, 11 சூன் 2012 (UTC)
- மதனாகரன், இந்த நடிகர் விஜய் என்றே அறியப்படுகிறார். அவ்வாறே விக்கி கட்டுரையும் உள்ளது. ராமானுஜன் என்பதை இராமானுசன் என விக்கியில் மட்டுமல்ல வேறு பல இடங்களிலும் எழுதி வந்துள்ளனர்.--Kanags \உரையாடுக 12:59, 11 சூன் 2012 (UTC)
அப்படியானால் விஜய் என்று விக்கித் தானுலாவி மூலம் மாற்றி விடவா? --மதனாகரன் (பேச்சு) 13:57, 11 சூன் 2012 (UTC)
மதனாஹரன் மற்றுவதே சிறந்தது வே. கு. விமலரஞ்சன் (பேச்சு) 16:05, 13 சூன் 2012 (UTC)
- ரசினிகாந்து (நடிகர்) என்றுள்ளது. ஆனால், விஜய் என்பதை மாற்ற முடியாதா (கூடாதா!)? மேலும் விjaய் என்று எழுதுவதற்கும் விஜய் எந்த வேறுபாடும் இருப்பதாக நான் கருதவில்லை. --மதனாகரன் (பேச்சு) 11:12, 27 சூன் 2012 (UTC)
சமையல் எண்ணெய்
தொகுநீங்கள் பகுப்பு:சமையல் எண்ணெய்
என்ற தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளீர்கள். பொதுவாக கட்டுரைகளை முதன்மைவெளியில் எழுதுவதே வழமை. கட்டுரைகளுக்கு பகுப்பு வழங்கலாம். சில பகுப்புப் பக்கங்களுக்கு விளக்கமாக ஓரிரு உரைகள் எழுதலாம். நான் உங்கள் கட்டுரையை முதன்மைவெளிக்கு (நகர்த்த முடியாதலால்) வெட்டி ஒட்டி உள்ளேன். ஏதேனும் ஐயம் இருப்பின் எனது பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம்.--மணியன் (பேச்சு) 19:06, 26 சூன் 2012 (UTC)
தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு
தொகுஇம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:47, 26 திசம்பர் 2012 (UTC)
கூகூள் மொழிபெயர்ப்பு
தொகுவணக்கம் விமலரஞ்சன்,
தாங்கள் கூகுள் மொழிபெயர்ப்பியைக் கொண்டு கட்டுரைகளை உருவாக்குகிறீர்கள். கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தமிழ் விக்கியில் பயன்படுத்துமளவுக்கு தரமானதல்ல. இலக்கணப் பிழைகளும், தவறான சொற்றொடர் அமைப்புகளும் மலிந்த மொழிபெயர்ப்புகளையே அதனால் தர இயலும். இக்கருவியினைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டுரைகள் நீக்கப்படும் என கொள்கை உள்ளது (காண்க: விக்கிப்பீடியா:தானியங்கித் தமிழாக்கம்). எனவே இனி இதனைப் பயன்படுத்தி கட்டுரைகள் உருவாக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:35, 28 திசம்பர் 2012 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.