பழுப்பு பாறு ஆந்தை

ஆந்தை இனப் பறவை
பழுப்பு பாறு ஆந்தை
பழுப்பு பாறு ஆந்தை, புகெட், தாய்லாந்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இசுட்ரைசிடே
பேரினம்:
நினோக்சு
இனம்:
நி. இசுடுலேடா
இருசொற் பெயரீடு
நினோக்சு இசுடுலேடா
(இசுடாம்போர்ட் ராப்லிசு, 1822)

பழுப்பு பாறு ஆந்தை (Brown hawk-owl)(நினோக்சு இசுடுலேடா) என்பது ஒருவகை ஆந்தை ஆகும். இது தெற்கு ஆசியாவின் இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளத்தின் கிழக்கில் இருந்து மேற்கு இந்தோனேசியா மற்றும் தெற்கு சீனா போன்ற பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது.

வகைப்பாட்டியல்

தொகு

பழுப்பு பாறு ஆந்தையினை 1822-ல் இசுடாம்போர்ட் ராபில்ஸால் சுமத்ராவில் இசுடிரிக்சு இசுகுடுலாட்டா என்ற விலங்கியல் பெயரினைக் கொண்டு தான் சேகரித்த மாதிரியிலிருந்து முறையாக விவரித்தார்.[2] குறிப்பிட்ட அடைமொழியானது இலத்தீன் சொல்லான scutulatus என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. இதன் பொருள் "வைர வடிவமானது" என்பதாகும்.[3] வேட்டைக்கார ஆந்தையானது 1837ஆம் ஆண்டில் இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் பிரையன் ஹொக்டன் ஹோட்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நினோக்சு பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளது.[4][5] ஒன்பது துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:[5]

விளக்கம்

தொகு

பழுப்பு பாறு ஆந்தைகள் 32 செமீ (13 அங்குலம்) நீளம் கொண்ட நடுத்தர அளவு ஆந்தைகள் ஆகும். இதன் நீண்ட வால் மற்றும் தனித்துவமான முக வட்டம் இல்லாத காரணத்தால் பாறு போன்ற வடிவம் கொண்டதாக உள்ளது. இதன் மேல் பகுதிகள் அடர் பழுப்பு நிறத்திலும், வால் வரிகள் கொண்டவையாகவும் உள்ளன. சிவப்பு-பழுப்பு நிற கோடுகளுடன் கீழ்ப்பகுதி வெண்மையாக இருக்கும். அந்தமான் தீவுகளில் காணப்படும் இதன் கிளையினங்களின் அடிப்பகுதி அடர் பழுப்பு நிறத்தைக் இருக்கும். இதன் கண்கள் பெரியதாகவும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். பாலினங்கள் ஒரே மாதிரியானவையாக இருக்கும்.[6]

இந்த வகை ஆந்தை இனங்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளிவருகின்றன. இது பெரிய பூச்சிகள், தவளைகள், பல்லிகள், சிறிய பறவைகள், எலிகள் போன்றவற்றை வேட்டையாடி உண்கிறது. அந்தி சாயும் பொழுதும் விடியற்காலையில் ஓ-உக்...ஓஓ-உக் என மீண்டும் மீண்டும் ஒலிக்கும். பழுப்பு பாறு ஆந்தை வெப்பமண்டலத்தில் வாழக்கூடிய பறவை ஆகும். இது நன்கு மரங்களடர்ந்த காடு மற்றும் காடு போன்ற பகுதிகளில் வசிக்கிறது. இது மரப்பொந்துகளில் மூன்று முதல் ஐந்து முட்டைகள் இடும். இலங்கையின் கொழும்பு, போன்ற நகரங்கள் மற்றும் கட்டங்களுக்கு அருகிலுள்ள புறநகர் பகுதிகளில் இந்த ஆந்தை மிகவும் பொதுவாக காணப்படுகிறது.

பரவலும் வாழ்விடமும்

தொகு

இப்பறவை மத்திய கிழக்கு முதல் தெற்கு சீனா வரை வெப்பமண்டல தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் வசித்து இனப்பெருக்கம் செய்கிறது. இதன் வாழ்விடம் நன்கு மரங்கள் நிறைந்த நாடும், காடும் ஆகும். இது மரப் பொந்தில் மூன்று முதல் ஐந்து முட்டைகளை இடும்.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Ninox scutulata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Stamford Raffles (1822). "Second part of the descriptive catalogue of a zoological collection made in the Island of Sumatra and its vicinity". Transactions of the Linnean Society of London 13: 277-340 [280]. https://www.biodiversitylibrary.org/page/755026. 
  3. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  4. Hodgson, Brian Houghton (1837). "Indication of a new genus belonging to the Strigine family, with description of the new species and type". Madras Journal of Literature and Science 5: 23-25. https://www.biodiversitylibrary.org/page/46442146. 
  5. 5.0 5.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2021). "Owls". IOC World Bird List Version 11.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 May 2021.
  6. Kennedy, Robert (2000). A Guide to the Birds of the Philippines (in ஆங்கிலம்). Oxford: OUP Oxford. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198546689. பார்க்கப்பட்ட நாள் 25 November 2017.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ninox scutulata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_பாறு_ஆந்தை&oldid=3783660" இலிருந்து மீள்விக்கப்பட்டது