பாண்டி ரவி
பாண்டி ரவி (Pondy Ravi) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]
தொழில்
தொகுபாண்டி ரவி மின்சார கனவு (1997) படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.[2] அலைபாயுதே (2000), மின்னலே (2001), காக்க காக்க (2003) உள்ளிட்ட பல படங்களில் இவர் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் ஆங் லீயின் லைஃப் ஆஃப் பை (2013) க்கான கலைக்காணலுக்குச் சென்றார்.[3] படத்தில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.[1] வஜ்ரம் (2015) படத்தில் பணத்திற்காக ஊழல் அமைச்சர் சார்பாக செயல்படும் காவல் அதிகாரி பாத்திரத்தில் ரவி நடித்தார்.[4] செம்பி என்ற பெயரில் சாமிதா (2008) என்ற படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்; படம் குறைந்த அரங்குகளில் வெளியானது.[5][6]
நடிப்பு தொழில் அல்லாமல், ரவி ஒரு காணொளி ஆய்வகத்தை நிர்வகிக்கிறார். இது புதுச்சேரியில் படமாக்கப்படும் படங்களுக்கு பயன்படுகிறது.[1][7][8]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவரது தந்தை நெய்வேலியில் நாடகக் கலைஞராக இருந்தவர்.[1]
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1999 | ஜோடி | பத்திரிகையாளர் | |
2000 | அலைபாயுதே | காவல்துறை அதிகாரி | |
2001 | தீனா | ||
மின்னலே | ரவி | ||
சிட்டிசன் | |||
2002 | ரமணா | ||
2003 | சேனா | பாண்டி | |
காக்க காக்க | காவல்துறை அதிகாரி | ||
சூரி | சூர்யாவின் நண்பர் | ||
2004 | கில்லி | ||
மச்சி | நாராயணனின் அனியாள் | ||
2008 | சாமிடா | சாமி | செம்பி என்று குறிப்படப்பட்டுள்ளது |
2012 | லைப் ஆப் பை | போக்குவரத்து போலீஸ் அதிகாரி | ஆங்கில படம் |
2013 | தகராறு | காவல்துறை அதிகாரி | |
2014 | ஜில்லா | காவல்துறை அதிகாரி | |
பூஜை | அண்ணா தாண்டவத்தின் அடியாள் | ||
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா | காவல்துறை அதிகாரி | ||
மீகாமன் | யாகுப் | ||
2015 | என்னை அறிந்தால் | ||
வஜ்ரம் | காவல்துறை அதிகாரி | ||
2016 | தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் | ||
2018 | காலக்கூத்து | ||
2019 | சத்யா | வீரசிங்கம் | தொலைக்காட்சித் தொடர்; இவருக்கு பதிலாக 'பொராலி' திலீபன் |
நட்பே துணை | அப்துல் மரக்காயர் | ||
சங்கத்தமிழன் | சஞ்சயின் உதவியாளர் | ||
2020 | தீர்ப்புகள் விற்கப்படும் | அறிவிக்கப்படும் |
குறிப்புகள்
தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 Ramakrishnan, Deepa (14 March 2013). "Cop in!". The Hindu. Archived from the original on 18 March 2013.Ramakrishnan, Deepa (14 March 2013). "Cop in!". The Hindu. Archived from the original on 18 March 2013.
- ↑ "கோலிவுட், பாலிவுட், பாண்டிவுட்!". Vikatan.
- ↑ ""லைப் ஆப் பை படக்குழுவினரைபாராட்ட முதல்வரிடம் கோரிக்கை". Dinamalar. 27 February 2013.
- ↑ Subramanian, Anupama (1 March 2015). "Movie review 'Vajram': Ramesh Selvan has gone a little overboard with violence". Deccan Chronicle.
- ↑ "Saamida". Sify.
- ↑ "Threat to Naan Kadavul - Behindwoods.com". Behindwoods.
- ↑ "கார் கவிழ்ந்தது பாண்டி ரவி படுகாயம்". Dinakaran.
- ↑ "ஒரு நாள் ஜெயிப்பேன்!". Vikatan.