சூரி (2003 திரைப்படம்)
சூரி (Soori) என்பது 2003 ஆம் ஆண்டய இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்குனர் ஷங்கரின் முன்னாள் துணை இயக்குநரான செல்வன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்னேஷ், உமா, விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சின்னி ஜெயந்த், செந்தில், மனோபாலா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளர். விருந்தினர் தோற்றத்தில் பார்த்திபன் ஒரு குண்டராக நடித்துள்ளார். பி. விஜயகுமார் தயாரித்த இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். விஜய் மில்டன் மற்றும் சுரேஷ் அர்ஸ் முறையே ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு போன்றவற்றை செய்துள்ளனர். இந்த படம் 2003 திசம்பர் 19 அன்று கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1]
சூரி | |
---|---|
இயக்கம் | செல்வன் |
தயாரிப்பு | பி. விஜயகுமார் |
கதை | செல்வன் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | ஸ்ரீ காமாட்சி ஸ்டுடியோஸ் |
விநியோகம் | தமிழன்னை டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 19, 2003 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2 கோடி |
படத்தின் கதை ஒரு மாணவியை காதலிக்கும் விற்பனை பிரதிநிதியைச் சுற்றி வருகிறது. அவர்களின் காதலின் உறுதியைக் காட்ட ஒரு வருடம் தனது காதலியை விட்டு விலகி இருக்கும் சவாலை அவர் ஏற்றுக்கொள்கிறார். வாக்குறுதியளித்தபடி ஓராண்டு அவ்வாறு இருந்த பிறகு இளைஞனால் தன் காதலி எங்கிருக்கிறாள் என்பதைக் கண்டறிய இயலவில்லை. பின்னனர் என்ன நடந்தது என்பதே கதை.[1][2]
நடிகர்கள்
தொகு- விக்னேஷ் சூரியாவாக
- உமா ரிஷாபா / பிரியா
- விஜயலட்சுமி தேவியாக
- சின்னி ஜெயந்த் சூரியாவின் நண்பர் பிச்சமுத்துவாக
- செந்தில் சூரியாவின் நண்பராக
- மனோபாலா கொள்கலன் பயணியாக
- வாசு விக்ரம் மதுக்கடை உரிமையாளர்
- லட்சுமி ரத்தன் சூரியாவின் நண்பராக
- விஜயா சிங் சூரியாவின் தாயாக
- பாண்டி ரவி சூரியாவின் நண்பராக
- பாவா லட்சுமணன் சூரியாவின் நண்பராக
- எஸ். கே. எஸ் மணி சூரியாவின் தாத்தாவாக
- மாஸ்டர் உதயராஜ் கள்ளத்தனமான திரைப்பட நுழைவுச்சீட்டு விற்பவராக
- சூரியகாந்த் தோபியாக
- கோவை செந்தில் பூசாரியாக
- ஸ்ரீதர் நடனமாடுபவராக ("பிரிவெல்லாம்")
- பார்த்திபன் (சிறப்பு தோற்றம்)
தயாரிப்பு
தொகுவளர்ச்சி
தொகுசெல்வன், திரைப்படப் பள்ளியில் பயின்று வந்தவர். இயக்குனர் ஷங்கரிடம் அவரது இந்தியன் , ஜீன்ஸ் ஆகிய இரண்டு படங்களில் துணை இயக்குநாராக பணியாற்றினார். தனது முதல் திரைப்படத்தை ஒரு வித்தியாசமான காதல் கதையைக் கொண்டு உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். இந்தப் "படத்தில் காதல், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை போன்றவை இருக்கும். ஆனால் படத்தின் முக்கிய நீரோட்டமாக காதல் மட்டுமே இருக்கும். உண்மையான, தெய்வீக காதலுக்கான ஒரு வரையறையை இப்படத்தில் காணலாம் ”என்று இயக்குனர் படம் குறித்து அறிவித்தார். "எனது திரைப்படம் வெளியான பிறகு சூரி தான் காதலின் வரையறை என்று கூறுவார்கள்." என்று செல்வன் பெருமையுடன் கூறினார்.[3][4][5]
நடிகர்கள்
தொகுவிக்னேஷ் உடனடியாக இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த படத்தை முடிப்பதற்கு முன்பு வேறு எந்த படத்தையும் ஏற்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.[6] மான்யா முதலில் படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவருக்கு பதிலாக நடிகை சுமித்ராவின் மகளான உமா நாயகியாக தேர்ந்தெடுக்கபட்டார்.[7][8] ரா. பார்த்திபன் படத்தில் ஒரு குண்டராக ஒரு சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.[9][10] கன்னட திரைப்படங்களில் வேகமாக இயங்கிவந்த நடிகை விஜயலட்சுமி, தமிழ் பின்னணி கொண்டவர் என்றாலும், முன்னாள் விபச்சாரி என்ற கவர்ச்சிகரமான பாத்திரமாகவும், பார்த்திபனால் காதல் கொண்டவராகவும் நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.[11][12] இந்த படத்தில் சுயம்வரத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக விக்னேசுடன் ரா. பார்த்திபன் இணைந்து நடித்தார்.[13] சாயாஜி சிண்டே இந்த படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பின்னர் அவர் இடம்மெறவில்லை.[14] படத்தின் ஒளிப்பதிவாளராக விஜய் மில்டன், படத்தொகுப்பாளராக சுரேஷ் அர்ஸ், கலை இயக்குநராக சாய் பிக்காசோ, சண்டை வடிவமைப்பாளராக சூப்பர் சுப்பாராயண் ஆகியோர் நியமிக்கபட்டனர்.[3]
படத்திற்கான இசையை தேவா அமைத்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதினார்.[15]
படப்பிடிப்பு
தொகுபடத்தின் முக்கிய காட்சிகள் திருச்சிராப்பள்ளியில் படமாக்கப்பட்டன. இயக்குனர் காவிரி ஆற்றை விரும்பினார். அதனால் படத்தின் உச்சகட்டத்தை அங்கு படமாக்க முடிவு செய்தார். படத்தில் சாலமன் பாப்பையாவின் தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்தில் பேச்சாளர்கள், சூடான விவாதத்தில் ஈடுபடும் காட்சி எடுக்கப்பட்டது.[3] தங்கள் தலையை மொட்டையடித்து நடித்த பல நடிகர்களுக்கு அந்தப் படம் திரை வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது ( சத்யராஜ் நடித்த அமைதிப்படை, சரத்குமார் நடித்த சூரியன், விக்ரம் நடித்த சேது ). இப்படத்திற்காக விக்னேஷ் 70 முறை மொட்டை அடித்தார்.[16][17]
படப்பிடிப்பு சென்னையின் சில இடங்களில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ராமேஸ்வரம், திருச்சி, மும்பை கொல்கத்தா போன்ற இடங்களிலும் நடைபெற்றது.[18] படத்தின் படப்பிடிப்பு பல முறை ஒத்திவைக்கப்பட்டது. படத் தயாரிப்பாளர் பி. விஜயகுமார் மற்றும் இணை தயாரிப்பாளர் எஸ். சுரேஷ்குமார் இடையே தகறாறு ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக படம் கிட்டத்தட்ட முடிந்ததும் கூட்டாளிகள் இருவரும் பிரிந்தனர். இதற்கான தீர்வின் ஒரு பகுதியாக 13 லட்சம் தொகையை சுரேஷுக்கு திருப்பி செலுத்த விஜயகுமார் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து விஜய்குமார் பல்வேறு தேதிகளில் காசோலைகளை வழங்கியிருந்தார். அனைத்து காசோலைகளும் பணமின்றி திரும்பவந்து சுரேஷ் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையில், விஜயகுமார் சூரி படத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளைல் ஈடுபடத் தொடங்கினார். இசை வெளியீட்டு விழாவைக் கூட நடத்தினார். ஆத்திரமடைந்த சுரேஷ் தனது தொகை செலுத்தப்படும் வரை சூரி படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். பாலசுப்பிரமணியன் சூரி படத்தை வெளியிடதடை விதித்தார். மேலும் சுரேஷுக்கு அளிக்கவேண்டிய தோகையை வழங்குமாறும் பணித்தார்.[19][20]
இசை
தொகுபடத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையமைப்பை திரைப்பட இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டார். 2003 இல் வெளியான இந்த படத்தின் பாடல் பதிவில், வைரமுத்து எழுதிய ஏழு பாடல் வரிகள் இடம்பெற்றன.[21][22][23]
எண் | பாடல் | பாடகர் (கள்) | காலம் | நடன இயக்குனர் | நடித்தவர்கள் |
---|---|---|---|---|---|
1 | "கடவுளே கடவுளே" | ஹரிஹரன் | 6:27 | பிரபு சீனிவாஸ் | விக்னேஷ் |
2 | "லாபமா நஷ்டமா" | அனுராதா ஸ்ரீராம் | 5:15 | பிரபு சீனிவாஸ் | விஜயலட்சுமி |
3 | "ஓ மை லவ்வர்" | ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி | 6:02 | ராஜூ சுந்தரம் | விக்னேஷ், உமா |
4 | "பிரிவெல்லாம்" (தனி) | ஹரிஷ் ராகவேந்திரா | 5:37 | ஸ்ரீதர் | ஸ்ரீதர், விக்னேஷ், உமா |
5 | "பிரிவெல்லாம்" (இருவர்) | ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி | 5:37 | ஸ்ரீதர் | ஸ்ரீதர், விக்னேஷ், உமா |
6 | "வானம் குணிந்து" | உதித் நாராயண், ஸ்ரீமதுமிதா | 5:32 | ஸ்ரீதர் | விக்னேஷ், உமா |
7 | "ப்ரீ பெய்டா" | டிம்மி | 5:56 |
வரவேற்பு
தொகுவிமர்சனங்கள்
தொகுஇந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்து.காமின் மாலதி ரங்கராஜன் நேர்மறையான விமர்சனத்தை அளித்தார். "விஜய் மில்டனின் சிறந்த ஒளிப்பதிவு, காட்சிக் கோணங்களின் தனித்துவமான தேர்வு சிறப்பாக குறிப்பிடத்தக்கது" மேலும் "சாய் பிக்காசோவின் கலை, மலைக் கோட்டைக் கோயில், திருவரங்கம், திருச்சியைச் சுற்றியுள்ள சாலைகள் ஆகியவை கதைக்கு கணிசமான அழகை அளிக்கின்றன" என்று அவர் எழுதினார். . மேலும் அவர் நடிகர்களின் நடிப்பைப் பாராட்டினார்.[24] மற்றொரு விமர்சகர் நடிகர்களைப் பாராட்டினார் : "நடிகர் விக்னேஷ் இந்த படத்தின் மூலம் மீண்டு வந்துள்ளார். அவர் நன்கு நடித்துள்ளார். பார்த்திபனின் நடிப்பு பாராட்டத்தக்கதாக உள்ளது. உமா புத்துணர்ச்சியும், அழகும் கொண்டவராக இருக்கிறார். தனது பாத்திரத்தைப் புரிந்து நடித்துள்ளார் ". படம் சராசரியானது என்று அவர் கூறினார்.[25] பாலாஜி பாலசுப்பிரமணியம் படத்துக்கு 5 க்கு 1.5 மதிப்பெண்ணை வழங்கினார்.[26]
வணிகம்
தொகுசூரிக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், அது திரையரங்குகளில் வந்த சுவடு தெரியாமல் சென்றது.[27][28][29]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Find Tamil movie Soori". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
- ↑ "Soori Valentine day from Kollywood with love". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-23.
- ↑ 3.0 3.1 3.2 S. R. Ashok Kumar (2002-12-06). "The Hindu : A message of true love". Hindu.com. Archived from the original on 2003-07-30. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Director Selvan to go on a hunger strike". atozmasala.com. 2011-06-30. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Four films from Shankar's kitty". behindwoods.com. 2007-05-07. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
- ↑ "TAMIL CINEMA 2000". cinematoday2.itgo.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
- ↑ Malathi Rangarajan (2004-11-26). "The Hindu : Making a mark in a man's world". Hindu.com. Archived from the original on 2005-01-14. பார்க்கப்பட்ட நாள் 2011-10-22.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Debutante Uma in 'Soori'". india4u.com. Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 2011-10-22.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Soori in big league". mohankumars.com. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Nilacharal". nilacharal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-29.
- ↑ "Vijayalakshmi does sexy role in Suri". thatstamil.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.[தொடர்பிழந்த இணைப்பு] (in தமிழ்)
- ↑ "Actress Vijayalakshmi calling the shots in Tamil films". thatstamil.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2011-10-24.[தொடர்பிழந்த இணைப்பு] (in தமிழ்)
- ↑ "Find Tamil Movie Suyamvaram". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
- ↑ "Nilacharal". nilacharal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-29.
- ↑ "Nilacharal". nilacharal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-29.
- ↑ "(Ton)sure route to success". mohankumars.com. Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-10-23.
- ↑ "Tamil cinema mottai heroes". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-23.
- ↑ https://web.archive.org/web/20031212170734/http://www.chennaionline.com/location/soory.asp
- ↑ "Court stay release of Soori film". thatstamil.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.[தொடர்பிழந்த இணைப்பு] (in தமிழ்)
- ↑ "Soori in trouble ?". mohankumars.com. Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-10-23.
- ↑ "AllIndianSite — Soori — It's all about music". tamilsongs.allindiansite.com. Archived from the original on 2011-11-08. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
- ↑ "Soori Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
- ↑ "Find Tamil movie Soori". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
- ↑ Malathi Rangarajan (2003-12-26). "The Hindu : "Soori"". Hindu.com. Archived from the original on 2004-04-22. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "AllIndianSite — Soori — It's all about movie". kollywood.allindiansite.com. Archived from the original on 2012-03-29. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Balaji Balasubramaniam. "Soori". bbthots.com. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
- ↑ Balaji Balasubramaniam. "Ulla Kadathal — Tamil Movie Review". thiraipadam.com. Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Krishnaleelai". tamilgrounds.com. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Director threatens to go on hunger strike". sify.com. Archived from the original on 2011-07-02. பார்க்கப்பட்ட நாள் 2011-10-23.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)