பாபு (நடிகர்)

பாபு (அண். 1963 – 19 செப்டம்பர் 2023) தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவந்த ஒரு இந்திய நடிகர் ஆவார். பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் (1990) திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்தார். 1990களில் திரைப்படம் ஒன்றில் சண்டைக் காட்சியில் நடித்தபோது காயமடைந்து தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாதவாறு முடங்கினார்.

பாபு
பிறப்புஅண். 1963
இறப்பு (அகவை 60)
பணிநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1990–1991

திரைப்பணி தொகு

1990 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் திரைப்படத்தில் பாபு நடிகராக அறிமுகமானார், புதுமுக நடிகர்களான தென்னவன், ரமா ஆகியோரைக் கொண்ட நடிகர்களுடன் முன்னணிப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துப் பாராட்டுகள் பெற்றார்.[1][2] பின்னர் விக்ரமனின் பெரும்புள்ளி (1991) திரைப்படத்தில் நடிகை சுமனுடன் நடித்தார், பின்னர் தாயம்மா (1991), பொண்ணுக்கு சேதி வந்தாச்சு (1991) ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

1990களின் தொடக்கத்தில் மனசார வாழ்த்துங்களேன் என்ற தனது சொந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சண்டைக் காட்சியில் நடித்ததில், பாபு முதுகுத்தண்டில் காயம் அடைந்து செயலிழந்தார்.[3] அதன் பின்னர் நடிப்பதை நிறுத்தினார்.[4] 1997 இல், ராதா மோகனின் தயாரிப்பில் பிரகாஷ் ராஜ் நடித்து சிமைல் பிளீஸ் என்ற வெளிவராத திரைப்படத்திற்கு உரையாடல்களை எழுதினார்.[5]

சூன் 2004 இல், இயக்குனர் பொன்வண்ணன் தனது நண்பரான பாபுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கப் போவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை பாபுவிற்கு அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், இப்படம் இறுதியில் தயாரிக்கப்படவில்லை.[6]

இறப்பு தொகு

பாபு 2023 செப்டம்பர் 19 இல் தனது 60-ஆவது அகவையில் காலமானார்.[7]

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1990 என் உயிர்த் தோழன் தர்மா
1991 பெரும்புள்ளி
1991 தாயம்மா பாபு
1991 பொண்ணுக்கு சேதி வந்தாச்சு

மேற்கோள்கள் தொகு

  1. "Bharathiraja's "En Uyir Thozhan"". geocities.ws. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
  2. "Why Bharathiraja's Kollywood movie En Uyir Thozhan is so special, Bharathiraja, En Uyir Thozhan". behindwoods.com. Archived from the original on 26 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
  3. "சாகத்தான் போறோம்; அதைச் சொல்லி அவங்கள பயமுறுத்த வேண்டாம்னு நினைச்சேன்"- 'என் உயிர்த் தோழன்' பாபு". ஆனந்த விகடன். 19 September 2023. Archived from the original on 19 September 2023. பார்க்கப்பட்ட நாள் 19 September 2023.
  4. "Big Bang Theory - The Hindu". thehindu.com. Archived from the original on 22 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
  5. "A-Z (V)". webcache.googleusercontent.com. Archived from the original on 2013-04-24. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  6. "Film on En Uyir Thozhan Babu - Tamil Movie News". indiaglitz.com. Archived from the original on 20 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
  7. "Bharathiraja mourns the demise of En Uyir Thozhan actor Babu". The Times of India. 19 September 2023. Archived from the original on 19 September 2023. பார்க்கப்பட்ட நாள் 19 September 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_(நடிகர்)&oldid=3799550" இலிருந்து மீள்விக்கப்பட்டது