பாரூக் இலெகாரி
பாரூக் அகமது கான் இலெகாரி (Farooq Leghari) (பிறப்பு:1940 மே 29 - 2010 அக்டோபர் 20), இவர் பாக்கித்தானின் எட்டாவது அதிபராக 1993 நவம்பர் 14 முதல் 1997 திசம்பர் 2 ஆம் தேதி தனது பதவியைத் துறக்கும் வரை பணியாற்றிய ஒரு பாக்கித்தான் அரசியல்வாதி ஆவார். மேலும் இவர், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பலூச் இனத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தார்.
மாண்புமிகு பாரூக் இலெகாரி | |
---|---|
பாரூக் இலெகாரி | |
பாக்கித்தானின் 8வது அதிபர் | |
பதவியில் 1993 நவம்பர் 14 – 1997 டிசம்பர் 2 | |
பிரதமர் | பெனசீர் பூட்டோ மாலில் மிராஜ் காலித் (பொறுப்பு) நவாஸ் ஷெரீப் |
முன்னையவர் | வாசிம் சாஜித் |
பின்னவர் | வாசிம் சாஜித் |
பாக்கித்தான் வெளியுறவு அமைச்சர் | |
பதவியில் 1993 அக்டோபர் 19 – 1993 நவம்பர் 14 | |
பிரதமர் | பெனசீர் பூட்டோ |
முன்னையவர் | அப்துல் சத்தார் |
பின்னவர் | அசெப் அகமது அலி |
பாக்கித்தான் நீர் மற்றும் மின்சார அமைச்சர் | |
பதவியில் 1988 டிசம்பர் 28 – 1990 ஆகஸ்ட் 6 | |
பிரதமர் | பெனசீர் பூட்டோ |
முன்னையவர் | வஜீர் அகமது ஜோகேசாய் |
பின்னவர் | ஷாஜாதா முஹம்மது யூசப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சர்தார் பாரூக் அஹ்மத் கான் இலெகாரி 29 மே 1940 சோதி சரீன், பிரித்தானிய இந்தியா (தற்போது பாக்கித்தான்) |
இறப்பு | 20 அக்டோபர் 2010 இராவல்பிண்டி, பாக்கித்தான் | (அகவை 70)
இளைப்பாறுமிடம் | சோதி சரீன், தேரா காசி கான்,பாக்கித்தான் |
அரசியல் கட்சி | பாக்கித்தான் மக்கள் கட்சி (1997க்கு முன்னர் ) மிஅத் கட்சி (1997–2002) பாக்கித்தான் முஸ்லீம் லீக் (கியூ) (2002–2010) |
பிள்ளைகள் | அவாய்ஸ் ஜமால் |
கல்வி | ஃபோர்மென் கிறுத்துவக் கல்லூரி செயின்ட் காத்த்ரின் கல்லூரி, ஆக்ஸ்போர்டு |
பலூச் பழங்குடி மற்றும் செல்வாக்குமிக்க நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த இவர் பாக்கித்தானில் உள்ள போர்மன் கிறிஸ்துவக் கல்லூரியிலும், ஐக்கிய இராச்சியத்தின் ஆக்சுபோர்டில் உள்ள புனித கேத்தரின் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இங்கிலாந்தில் இருந்து திரும்பியதும், 1973ஆம் ஆண்டில் அரசியலில் சேருவதற்கு முன்பு ஒரு அரசு ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் 1975 முதல் 1977 வரை பாக்கித்தான் மக்கள் கட்சி (பிபிபி) மேடையில் பலூசிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இருந்தார். 1980களில், அதிபர் சியா-உல்-ஹக்கின் நிர்வாகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இவர் தலைமை தாங்கினார். மேலும்,1988 இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டார். 1990 முதல் 1993 வரை, பெனாசீர் பூட்டோவின் கீழ் இவர் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார், 1993இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் பங்கேற்றார்.
இவரது நற்சான்றிதழ் மற்றும் நற்பெயர் காரணமாக இறுதியில் பிரதமர் பெனாசிர் பூட்டோவால் அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு 1993 ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், பாக்கித்தான் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளின் சர்ச்சைக்குரிய நியமனங்கள் குறித்து இவர் விமர்சனங்களைப் பெறத் தொடங்கினார், மேலும் மெக்ரான் வங்கி ஊழலிலும் சிக்கினார். கொள்கை விவகாரங்களில் பிரதமர் பெனசீர் பூட்டோவுடன் 1995இல் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. 1996இல் இவர் பெனாசிரின் அரசாங்கத்தை கலைத்தார். இவரது அரசியல் ஆவல் பின்னர் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் மோதலை ஏற்படுத்தியது. நீதிபதி சஜ்ஜாத் அலி ஷாவை தலைமை நீதிபதியாக தக்கவைக்க இவர் தலையிட்டது இறுதியாக 1997 ல் இவரை பதவி விலக வழிவகுத்தது. இவர் அரசியலில் தீவிரமாக இருந்தார். 2004 இல் பாக்கித்தான் முஸ்லிம் லீக்கில் (கியூ) சேர்ந்தார். நீண்டகால இதய நோயால் பாதிகப்பட்டிருந்த இவர் 2010 அக்டோபர் 20 அன்று ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் இறந்தார்.
சுயசரிதை
தொகுஇவர் 1940 மே 2 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபின் தேரா காசி கான் மாவட்டத்தில் அமைந்துள்ள சோட்டி ஜரீன் என்ற கிராமத்தில் பிறந்தார். [1] பிரபுக்களின் தலைப்பான சர்தார் என்ற முன்னொட்டு இவரது பெயருக்கு முன் சேர்க்கப்பட்டது. இது இவரது இலெகாரி பழங்குடியினரின் தலைமையைக் குறிக்கிறது. :455 இவரது குடும்பம் ஒரு சாராய்கி பேசும் பலூச் மற்றும் அதன் செல்வத்திற்காக அறியப்பட்டது. இது பரம்பரைத் தலைவர்களாக பணியாற்றியது. மேலும் பிரித்தானிய ஆட்சியின் காலத்திலிருந்து அரசியலில் தீவிரமாக இருந்து வருகிறது.[2][3] இவரது தந்தை நவாப் முகம்மது கானும், இவரது தாத்தா நவாப் ஜமால் கான் இலெகாரி ஆகிய இருவரும் முற்போக்கான தலைவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் பழங்குடியினத்தை நவீன கருத்துக்களுக்கு உட்படுத்தினர். இவரது தந்தை பாக்கித்தான் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். மேலும், இதற்காக 1946இல் அரசியல் கைதியாக அடைத்து வைக்கப்பட்டார். இந்தியா பிரிக்கப்பட்ட பின்னர், இவரது தந்தை 1949 முதல் 1955 வரை பஞ்சாப் மாகாண அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றினார். [4][5]
இவர் ஆரம்பத்தில் லாகூரில் உள்ள புகழ்பெற்ற அட்ச்சன் கல்லூரியில் பயின்று 1957 இல் பட்டம் பெற்றார். இவர் போர்மன் கிறித்துவக் கல்லூரிப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு இவர் 1960இல் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் [6] இவர் ஆக்சுபோர்டில் உள்ள புனித கேத்தரின் கல்லூரியில் சேர ஐக்கிய இராச்சியம் சென்றார். அங்கு இவர் தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இவர் ஒரு தீவிரமான விளையாட்டு வீரராக இருந்தார். டென்னிசு, போலோ போன்ற விளையாட்டுகளில் ஒரு வழக்கமான வீர்ரராக இருந்தார். 1974 இல், ஈரானின் தெகுரானில் நடைபெற்ற 7 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாக்கித்தானை துப்பாக்கி சுடும் வீரராகப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர், நாட்டின் முக்கிய நில உரிமையாளராக இருந்தார். இவர் சுமார் 40,500 ஏக்கர்கள் (164 km2) நிலம் வைத்திருந்தார். இவர் இறந்த பிறகு இவரது மகன் ஜமால் கான் இலெகாரி என்பவர் இலெகாரி பழங்குடியினரின் 23 வது முதல்வரானார்.
இறப்பு
தொகுசிலகாலம் தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் 2010 அக்டோபர் 20 அன்று இராவல்பிண்டியில் இறந்தார். தேரா காசி கான் உட்பட பிற உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் இவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர். இவர் 2010 அக்டோபர் 21, அன்று பாகிஸ்தானின் பஞ்சாப், தேரா காசி கான் மாவட்டம், சோதி ஜரீன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் .[7]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ NOTHING BUT!. பார்க்கப்பட்ட நாள் 9 October 2016.
- ↑ "Former Pakistani President Farooq Leghari dies". BBC News. 20 October 2010. https://www.bbc.com/news/world-south-asia-11584496. பார்த்த நாள்: 9 October 2016.
- ↑ "Sardar Farooq Ahmad Khan Leghari | Former President of Pakistan & Head of Millat Party". Story of Pakistan. Story of Pakistan. 1 June 2003.
- ↑ "Farooq Ahmad Khan: Bhutto's pick, until he sacked her | The National". 30 October 2010. http://www.thenational.ae/news/world/south-asia/farooq-ahmad-khan-bhuttos-pick-until-he-sacked-her. பார்த்த நாள்: 9 October 2016.
- ↑ "Sardar Farooq Ahmad Khan Leghari". Pakistan Herald. Archived from the original on 9 September 2015. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
- ↑ "Sardar Farooq Ahmad Khan Leghari, Former President of Pakistan Ex-MNA fron NA-172 D.G.Khan-II". Sardar Farooq Ahmad Khan Leghari, Former President of Pakistan Ex-MNA fron NA-172 D.G.Khan-II. Archived from the original on 10 May 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
- ↑ Ismaeel, Tariq (21 October 2010). "Hundreds mourn as Leghari is laid to rest – The Express Tribune". The Express Tribune. The Express Tribune, Tariq (The Express Tribune, Tariq). http://tribune.com.pk/story/65401/hundreds-mourn-as-leghari-is-laid-to-rest/. பார்த்த நாள்: 9 October 2016.