பாக்கித்தான் வரலாறு
பாக்கித்தானின் வரலாறு (உருது: تاریخ پاکستان) தற்கால பாக்கித்தான் அடங்கியுள்ள நிலப்பகுதியின் வரலாறு ஆகும். இந்திய சுதந்திரத்திற்கு முன் பாலகிருஸ்தானம் என்ற பெயர் காலப்போக்கில் மறுவி பால்கிஸ்தான் மற்றும் தற்போது பாகிஸ்தான் ஆக மாறியது. மேலும் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் மாந்தர் வாழ்ந்து வந்துள்ளனர், [1] உலகின் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றான[2][3][4][5] சிந்துவெளி நாகரிகம் இங்கு தழைத்துள்ளது. நடு ஆசியாவை இந்தியத் துணைக் கண்டத்துடனும் கிழக்குடனும் இணைத்த சிந்துவெளி வழியாகச் சென்ற வணிக வழிகள் கிரேக்கம், மங்கோலியா போன்ற பலநாடுகளிலிருந்து மக்களை ஈர்த்தது[6] பல ஏகாதிபத்திய சக்திகள், கடைசியாக பிரித்தானியப் பேரரசு இங்கு ஆட்சி புரிந்துள்ளன.
பாக்கித்தானியர் அரப்பா, ஆரியர், பெர்சியர், கிரேக்கர், சகர்கள், பார்த்தியன், குசான், ஹெப்தலைட்டுகள், அராபியர், துருக்கியர், ஆப்கானித்தவர், மற்றும் மொகலாயப் பாரம்பரியத்தை உள்வாங்கியவர்கள்.
வரலாற்றுக் காலத்திற்கு முன்
தொகுபழங்கற்காலம்
தொகுபசணாபின் மேற்புறமுள்ள ரிவாத் பழங்கற்கால களமாகும். இங்குள்ள தொல்லியல் களம் 55 ஏறத்தாழ 45,000 ஆண்டுகளுக்கு முந்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. சோவனிக கலாசாரம் முற்பகுதி பழங்கற்காலத்திய தொல்லியல் பண்பாட்டைக் கொண்டுள்ளது. சாஜியும் அலியும் தழும்பழி காலத்தவை. தற்போதைய இஸ்லாமாபாத்/இராவல்பிண்டி அமைந்துள்ள சிவாலிக் மலைகளில் உள்ள சோவானிகப் பள்ளத்தாக்கை அடுத்து இது சோவானிக கலாசாரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த கலாசாரம் தழைத்த இராவல்பிண்டியிலிருந்து 16 கிலோமீட்டர்கள் (9.9 mi) தொலைவில் சோவன் ஆற்றின் வளைவில் உள்ள ஆதியலா, காசலா சிற்றூர்களில் நூற்றுக்கணக்கான கூர்மைத்தீட்டிய கல்லாயுதங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் இங்கு அக்காலத்திய மனித எலும்புக்கூடுகள் எதுவும் கிடைக்கவில்லை.
புதுக்கற்காலம்
தொகுமெஹெர்கர் முதன்மையான புதிய கற்காலக் களமாகும்; இது 1974இல் கண்டறியப்பட்டது. இங்கு வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் இருந்தமைக்கானச் சான்றுகள் கிடைத்துள்ளன.[7] பல் வைத்தியமும் நடைபெற்றுள்ளது.[1] இந்த தொல்லியல் களத்தின் காலம் 7000–5500 பொது ஊழி ஆகும். இது பலூசிஸ்தானின் கச்சி சமவெளியில் அமைந்துள்ளது. மெகர்கர்வாசிகள் சேற்றுச் செங்கல்களாலான குடிசைகளில் வாழ்ந்தனர்; வேளாண் பொருட்களை கூலக்களங்களில் சேகரித்து வைத்தனர், செப்பாலான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். பார்லி, கோதுமை, இலந்தைகள், பேரீச்சைகள் விவசாயம் செய்தனர். வெள்ளாடு, செம்மறியாடு, மாடுகளை வளர்த்தனர். நாகரிகம் முன்னேறிய காலத்தில் (5500–2600 பொதுஊழி) மக்கள் கைவினைப் பொருட்கள் செய்யத் துவங்கியிருந்தனர். தீக்கல் செதுக்கல், தோல் பதனிடுதல், குண்டுமணி தயாரிப்பு, மாழைக்கலங்கள் போன்ற தொழில்கள் தொடங்கின. இங்கு மக்கள் 2600 பொ.ஆ வரை தொடர்ந்திருந்தனர்;[8] வானிலை மாற்றங்கள் தொடங்கின; பொது ஆழி 2600க்கும் 2000 க்கும் இடையே இப்பகுதி மிகவும் வறண்டதால் இங்கிருந்து மக்கள் சிந்துச் சமவெளிக்கு இடம் பெயர்ந்தனர்.[9] இங்கு புதிய நாகரிகம் துவக்கநிலையில் வளர்ந்து வந்தது.[10]
சிந்துவெளி நாகரிகம்
தொகு
|
|
|
சிந்து ஆற்றுப்பகுதியில் வெண்கலக் காலம் ஏறத்தாழ பொதுஆழி 3300 இல் சிந்துவெளி நாகரிகமாக வளர்ந்தது.[11] பண்டைய எகிப்துடனும் மெசொப்பொத்தேமியாவுடனும் இது பழைய உலகின் மூன்று துவக்ககால நாகரிகங்களில் ஒன்றாக விளங்கியது. இந்த மூன்றில் மிகவும் பரந்த அளவில் [12] 1.25 மில்லியன் கிமீ2 பரப்பளவில் அமைந்திருந்தது.[13] இந்த நாகரிகம் சிந்து ஆற்று வடிநிலத்தில் தற்போதைய பாக்கித்தானிய மாகாணங்கள் சிந்து, பஞ்சாப் and பலூசிஸ்தான் பகுதிகளில் தழைத்திருந்தது. இப்பகுதியிலிருந்த வற்றாவளமிக்க பருவமழையால் நீர் பெறும் ஆறுகளும் பருவகாலத்தில் மட்டும் பாயும் காகர் நதி உள்ளிட்டவை இப்பகுதியில் அடங்கும்.[14] தன் உச்சகாலத்தில் இந்த நாகரித்தில் ஏறத்தாழ 5 மில்லியன் மக்கள்தொகை கொண்டிருந்தது; அரபிக்கடலில் தொடங்கி தற்காலத்திய தெற்கு மற்றும் கிழக்கத்திய ஆப்கானித்தான், மற்றும் இமயமலை வரை பரவியிருந்தது.[15] சிந்துவெளி மக்கள், அரப்பன்கள், மாழையியலில் புதிய நுட்பங்களை கண்டுபிடித்தனர்; செப்பு,வெங்கலம்,பித்தளை,ஈயம், வெள்ளீயம் தயாரித்தனர்.
சிந்துவெளி நாகரிகத்தின் பிற்பகுதியில் மெதுவாக வீழ்ச்சியடையலாயிற்று. பொதுஆழி 1700 இல், பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டன. இருப்பினும் இந்த நாகரிகம் திடீரென்று மறையவில்லை. இந்நாகரிகத்தின் சில கூறுகள் இன்னமும் தங்கியுள்ளன. பொதுஆழி மூன்றாம் ஆயிரவாண்டில் ஏற்பட்ட வறட்சி நகராக்கத்திற்கான தூண்டுதலாக இருந்திருக்கலாம். அதே நகராக்கத்தால் நீர்த்தட்டுப்பாடு எழுந்து நாகரிகம் அழிவதற்கும் காரணமாக இருக்கலாம். நீரின்றி மக்கள்தொகை கிழக்கு நோக்கி பரவியிருக்கலாம். சிந்துவெளி நாகரிகம் முற்றிலுமாக பொதுஆழி 1700 இல் அழிபட்டது. இருப்பினும் இந்த வீழ்ச்சிக்கான காரணங்கள் இன்னமும் அறியப்படவில்லை. அகழ்வாராய்ச்சி களங்களில் கண்ட நகர்புறத் திட்டமிடலும் சின்னங்களும் மிகுந்த நுட்பமிக்க திட்டமிடலைக் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Coppa, A.; L. Bondioli; A. Cucina; D. W. Frayer; C. Jarrige; J. F. Jarrige; G. Quivron; M. Rossi et al. (2006). "Palaeontology: Early Neolithic tradition of dentistry" (PDF). Nature 440 (7085): 755–756. doi:10.1038/440755a. பப்மெட்:16598247. Bibcode: 2006Natur.440..755C. http://www.nature.com/nature/journal/v440/n7085/pdf/440755a.pdf. பார்த்த நாள்: 22 November 2007.
- ↑ Gregory Possehl (October 1990). "Revolution in the Urban Revolution: The Emergence of Indus Urbanization". Annual Review of Anthropology 19 (1): 261–282. doi:10.1146/annurev.an.19.100190.001401. http://arjournals.annualreviews.org/toc/anthro/19/1?cookieSet=1. பார்த்த நாள்: 6 May 2007.
- ↑ Kenoyer, Jonathan Mark; Kimberley Heuston (மே 2005). The Ancient South Asian World. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517422-9. Archived from the original on 20 நவம்பர் 2012.
{{cite book}}
: Unknown parameter|deadurl=
ignored (help) - ↑ "Palaeolithic and Pleistocene of Pakistan". Department of Archaeology, University of Sheffield. பார்க்கப்பட்ட நாள் 1 December 2007.
- ↑ Murray, Tim (1999). Time and archaeology. London; New York: Routledge. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-11762-3.
- ↑ Young, Margaret Walsh; Susan L. Stetler (November 1987). Cities of the World, 3rd Edition, Vol. 4, Page 439. Gale Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 081032542X.
- ↑ Hirst, K. Kris. 2005. "Mehrgarh". Guide to Archaeology
- ↑ போசெல், கிரிகோரி எல். 1996. "Mehrgarh." Oxford Companion to Archaeology, edited by Brian Fagan. Oxford University Press, Oxford
- ↑ The Centre for Archaeological Research Indus Balochistan பரணிடப்பட்டது 28 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம், Musée National des Arts Asiatiques — Guimet
- ↑ Chandler, Graham. 1999. "Traders of the Plain". Saudi Aramco World.
- ↑ Wright 2009, ப. 1.
- ↑ Wright 2010:Quote: "The Indus civilization is one of three in the 'Ancient East' that, along with மெசொப்பொத்தேமியா and பண்டைய எகிப்து, was a cradle of early civilization in the Old World (Childe 1950). Mesopotamia and Egypt were longer lived, but coexisted with Indus civilization during its florescence between 2600 and 1900 B.C. Of the three, the Indus was the most expansive, extending from today's northeast Afghanistan to Pakistan and India."
- ↑ Blanc De La, Paul. "Indus Epigraphic Perspectives: Exploring Past Decipherment Attempts & Possible New Approaches 2013 Pg 11" (PDF). University of Ottawa Research. University of Ottawa. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
- ↑ Wright 2010, ப. 1.
- ↑ Feuerstein, Georg; Subhash Kak; David Frawley (1995). In search of the cradle of civilization: new light on ancient India. Wheaton, Illinois: Quest Books. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8356-0720-9.
வெளி இணைப்புகள்
தொகு- பாக்கித்தான் வரலாற்று ஆய்வுகள் இதழ், - வரலாற்று ஆய்வுக்கான கல்துனியா மையம், இலாகூர், பாக்கித்தான்.
- பண்பாட்டு பாரம்பரியத்துக்கான தேசிய நிதியம், பாக்கித்தான் அரசு
- பாக்கித்தானின் கதை
- பாக்கித்தானின் விரைவான வரலாறு
- பாக்கித்தான் வரலாறு திறந்த ஆவணத் திட்டத்தில்
- Wikimedia Atlas of பாக்கித்தானின் வரலாறு