பாரோய்

மலேசியா நெகிரி செம்பிலானில் உள்ள சிரம்பான் புறநகர்

பாரோய் (மலாய்; ஆங்கிலம்: Paroi; சீனம்: 帕罗伊) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில்; சிரம்பான் மாநகரின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இங்கு பல கம்போங் குடியிருப்புகளும்; பல வீடு மனைத் திட்டங்களும் உள்ளன.[2]

பாரோய்
Paroi
நெகிரி செம்பிலான்
துவாங்கு அப்துல் ரகுமான் அரங்கம்
துவாங்கு அப்துல் ரகுமான் அரங்கம்
Map
ஆள்கூறுகள்: 2°45′N 101°52′E / 2.750°N 101.867°E / 2.750; 101.867
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம் சிரம்பான்
லுவாக் சுங்கை ஊஜோங்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
70300[1]
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 631 0000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

அத்துடன் இங்கு ஏராளமான விளையாட்டு வளாகங்களும் உள்ளன. குறிப்பாக துவாங்கு அப்துல் ரகுமான் அரங்கம் என்று அழைக்கப்படும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பிரபலமான விளையாட்டு அரங்கத்தை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். 2023-ஆம் ஆண்டில் மலேசிய ரிங்கிட் 1.2 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்டது.[3]

பொது

தொகு

மற்றொரு விளையாட்டு மையம் பாரோய் விளையாட்டு இளைஞர் மையம் ஆகும். இதன் வெட்டவெளி திடல் மலேசியாவில் முதன்முதலில் செயற்கை புல்வெளியைக் கொண்ட திடலாக அறியப்படுகிறது.

மேலும் கூடுதலாக, இரண்டு விளையாட்டு வளாகங்கள் உள்ளன. அவை மாநில விளையாட்டு வளாகம் மற்றும் மாநில நீர் விளையாட்டு மையம். இவை இரண்டும் துவாங்கு அப்துல் ரகுமான் அரங்கத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளன.

போக்குவரத்து

தொகு

பாரோய் நகரம், மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை   மூலமாகச் சேவை செய்யப்படுகிறது. மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை   பாரோய் புறநகர்ப் பகுதியை செனவாங் நகருடன் இணைக்கிறது. பாரோய் நகரத்திற்குள் டோக் டகாங் சாலை (JKR(N)|101) உள்ளது. இந்தச் சாலை பாரோயில் உள்ள தாமான் பாரோய் ஜெயா மற்றும் தாமான் பஞ்சோர் ஜெயா போன்ற சில வீட்டு மனைகளுக்குச் சேவை செய்கிறது.

தோக் டகாங் சாலை (Jalan Tok Dagang), பாரோய் நகரத்தை மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை  ; மற்றும் காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை  EXIT 2106 (அம்பாங்கான்) வழியாக இணைக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kampung Paroi is situated in Seremban, Negeri Sembilan, MALAYSIA. Its geographical coordinates are 2° 43' 18 North, 101° 59' 43 East and its original name is Kampung Paroi". பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  2. "Paroi is a neighbourhood of Seremban. It is located to the east of the Seremban town centre, and is reached on Jalan Seremban-Kuala Pilah". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  3. "Tunku Abdul Rahman Paroi Stadium was upgraded for RM1.2 million". பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரோய்&oldid=3880354" இலிருந்து மீள்விக்கப்பட்டது