பார்பரா நூஹால் ஃபாலட்
பார்பரா நூஹால் ஃபாலட் (Barbara Newhall Follett[1] மார்ச் 4, 1914 [2] - காணாமல் போதல் 7, திசம்பர், 1939) என்பவர் ஒரு அமெரிக்க சிறுமுது அறிஞர் புதின எழுத்தாளர் ஆவார். [3] இவரது முதல் புதினமான, தி ஹவுஸ் வித்அவுட் விண்டோஸ் இவருக்கு பன்னிரெண்டு வயதாக இருந்தபோது 1927 சனவரியில் வெளியிடப்பட்டது. இவரது அடுத்த புதினமான தி வோயேஜ் ஆஃப் தி நார்மன் டி., இவரது பதினான்கு வயதில் வெளியாகி விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது. [3]
பார்பரா நூஹால் ஃபாலட் | |
---|---|
பிறப்பு | அனோவர், நியூ ஹாம்சயர், அமெரிக்கா | மார்ச்சு 4, 1914
காணாமல்போனது | திசம்பர் 7, 1939 (அகவை 25) புரூக்லைன், மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா |
தகுதி | காணாமல் போய் 85 ஆண்டுகள் மற்றும் 28 நாட்கள் |
தேசியம் | அமெரிக்கர் |
மற்ற பெயர்கள் | பார்பரா ரோஜர்ஸ் |
பணி | புதின ஆசிரியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி அவுஸ் வித்தவுட் விண்டோஸ் (1927) தி வோயேஜ் ஆஃப் தி நார்மன் டி. (1928) |
பெற்றோர் | வில்சன் ஃபாலட் ஹெலன் ஃபாலட் |
வாழ்க்கைத் துணை | நிக்கர்சன் ரோஜர்ஸ் (தி. 1933–1939) |
ஃபாலட் தனது திருமணத்தால் மனத்தளர்ச்சியடைந்து தன் 25 வயதில் 1939 திசம்பரில் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை அதன்பிறகு மீண்டும் பார்க்க முடியவில்லை.[4]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபார்பரா நூஹால் ஃபோலெட், அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள ஹனோவரில் 1914 மார்ச் 4 அன்று பிறந்தார். இலக்கிய ஆசிரியரும், விமர்சகரும் பல்கலைக்கழக விரிவுரையாளரும், குழந்தைகளுக்கான எழுத்தாளருமான வில்சன் ஃபாலட் மற்றும் ஹெலன் தாமஸ் ஃபாலட் ஆகியோர் இவரது பெற்றோராவர். இவருக்கு இவரது தந்தையின் முதல் திருமணத்தின் வழியாக கிரேஸ் என்ற அக்காள் இருந்தார். அதே போல், சப்ரா ஃபாலட், பின்னர் சப்ரா ஃபாலட் மெசர்வே என்று அழைக்கப்பட்ட ஒரு தங்கை இருந்தார். இவரது தங்கையே 1961 இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவியாக அனுமதிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். [5] தன் தாயாரிடம் வீட்டிலேயே படிக்கவைக்கப்பட்ட பார்பரா, தனது நான்கு வயதிலேயே தனது சொந்தமாக கவிதைகளை எழுதத் தொடங்கியதால், வாசிப்பதிலும், எழுதுவதிலும் ஆரம்பகாலத்திலேயே திறன்களைக் கொண்டவராக இருந்தார். [4] பார்பரா கற்பனைத்திறன் மிக்க ஒரு புத்திசாலி குழந்தையாக இருந்தார். இவர் தன் ஏழு வயதிற்குள் தனது சொந்த கற்பனை உலகமான ஃபார்க்சோலியாவை எழுதத் தொடங்கினார், மேலும் அதன் மொழியான ஃபார்க்சூவை உருவாக்கத் தொடங்கினார். [6] பார்பராவின் கதைகள், கவிதைகள் போன்றவை பெரும்பாலும் இயற்கை உலகம் மற்றும் வனப்பகுதியைக் கொண்டதாக இருந்தன.
தொழில்
தொகு1923 ஆம் ஆண்டில், ஃபாலட்டுக்கு எட்டு வயதாக இருந்தபோது, தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஈப்பர்சிப் எழுதத் தொடங்கினார். பின்னர் அது தி ஹவுஸ் வித்தவுட் விண்டோஸ் என்று பெயர் மாற்றறப்பட்டது. இதை தன் பிறந்த நாளை முன்னிட்டு தாயாருக்குக் பரிசாக கொடுக்க சிறிய கையடக்க தட்டச்சுக் கருவியைப் பயன்படுத்தி எழுதினார். இக்கதை ஈபர்சிப் என்ற இளம் பெண்ணைப் பற்றியது, அவள் இயற்கையில் மகிழ்ச்சியாக வாழ, வீட்டையும் குடும்பத்தையும் விட்டு ஓடி, விலங்கு நண்பர்களுடன் வாழ்கிறாள். [6] அந்த ஆண்டின் பிற்பகுதியில் இவரது அந்தக் கையெழுத்துப்படி வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தால் எரிந்துபோனது. ஆனால் ஃபாலட் முழு கதையையும் மீண்டும் எழுதினார். அவரது தந்தை தான் பணியாற்றிய, நாப்ஃப் பதிப்பகத்தின் வாயிலாகவே 1927 இல் வெளியிட்டார். தி ஹவுஸ் வித்தவுட் விண்டோசுக்கு த நியூயார்க் டைம்ஸ், தி சாட்டர்டே ரிவியூ, எச்.எல் மென்கென் ஆகியவற்றின் மதிப்புரையையும், பாராட்டைப் பெற்றது. [3] [4] இந்த ஆரம்ப வெற்றியின் காரணமாக, பார்பரா ஒரு குழந்தை மேதை என்று சிலரால் பாராட்டப்பட்டார். இவரது கருத்து வானொலி நிலையங்களால் ஒலிபரப்பபட்டது. மேலும் பிரித்தானிய எழுத்தாளரான ஏஏ மில்னேவின் நவ் வி ஆர் சிக்ஸ் போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்களை மதிப்புரை வழங்கும்படி கேட்கப்பட்டது. [7]
ஃபாலட்டின் அடுத்த புதினமான தி வோயேஜ் ஆஃப் தி நார்மன் டி., நோவா ஸ்கோசியாவில் கடலோர இசுக்கூனர் கப்பலில் பயணித்த அவரது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு ஆண்டு கழித்து 1928 இல் வெளியிடப்பட்டது. அது பல இலக்கிய வெளியீடுகளில் திறனாய்வையும், பாராட்டையும் பெற்றது.
அதே ஆண்டில், ஃபாலட்டின் தந்தை வேறொரு பெண்ணுக்காக இவரது தாயைக் கைவிட்டார். இந்த நிகழ்வு தனது தந்தையுடன் ஆழமாக பிணைப்பைக் கொண்டிருந்த ஃபாலட்டுக்கு பெருத்த அடியாக ஆனது. [3] 14 வயதில், இவர் தனது வாழ்க்கையில் தொழில் வாழ்க்கையின் உச்சத்தை அடைந்தார். [3] [4]
அதன்பிறகு, இவரது குடும்பம் கடினமான சூழலில் விழுந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி தீவிரமைந்து வந்ததால் நியூயார்க் நகரில் தன் 16 வயதிற்குள், செயலாளராகப் பணிபுரிந்தார். [3] லாஸ்ட் ஐலண்ட் மற்றும் டிராவல்ஸ் வித்தவுட் எ டான்கி, என்னும் ஒரு பயண இலக்கியம் உட்பட மேலும் பல கையெழுத்துப் பிரதிகளை அவர் எழுதினார் (இவற்றின் தலைப்பு ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் டிராவல்ஸ் வித் டான்கி என்பதிலிருந்து பெறப்பட்டது).
திருமணம்
தொகு1931 கோடையில், ஃபாலட் நிக்கர்சன் ரோஜர்சை சந்தித்தாள். இந்த இணையர் 1932 கோடையில் கடாடாடினிலிருந்து மாசசூசெட்ஸ் எல்லைக்கு அப்பலாச்சியன் தடத்தில் நடந்து, பின்னர் எசுபானியாவுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் மயோர்க்கா மற்றும் சுவிஸ் ஆல்ப்ஸ் வழியாக தங்கள் நடைப் பயணத்தைத் தொடர்ந்தனர். மாசசூசெட்சின் புரூக்லைனில் குடியேறிய பிறகு, இவர்கள் 1934 சூலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நேரத்தில், பார்பரா மேலும் எழுதினார். ஆனால் அவரது கதைகள் வெளியீட்டாளர்கள் விரும்புபடியாக இல்லை. ஆரம்பத்தில் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தாலும், 1937 வாக்கில் பார்பரா தன் நெருங்கிய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் திருமண வாழ்க்கையில் திருப்தி இன்மை குறித்து குறிப்பிடத் தொடங்கினார். மேலும் 1938 வாக்கில் இவர்களுக்கு இடையிலான விரிசல்கள் மேலும் விரிவடைந்தன. [6] ரோஜர்ஸ் தனக்கு துரோகம் செய்வதாக எண்ணிய ஃபாலட் மனத்தளர்ச்சியடைந்தார். [3]
வெளியேறுதல்
தொகுஇவரது கணவரின் கூற்றுப்படி, 1939 திடசம்பர் 7, அன்று, சண்டையிட்ட ஃபாலட் தனது பையில் இருந்த $30 (2021 மதிப்பில் $589) பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினாள். அவளை மீண்டும் பார்க்கவே முடியவில்லை என்றார். [4] ஃபாலட் காணாமல் போனதை ரோஜர்ஸ் இரண்டு வாரங்களாக காவல் துறையில் தெரிவிக்கவில்லை. அவர் திரும்பி வர காத்திருப்பதாகக் கூறினார். காவல்துறையிடம் தெரிவித்த நான்கு மாதங்களுக்குப் பின்னர், காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு கோரினார். ஃபாலட்டின் திருமணப் பெயரான "ரோஜர்ஸ்" என்ற பெயரில் அறிவிக்கை வெளியிடப்பட்டதால், 1966 வரை இவர் காணாமல் போனதை அறியாத ஊடகங்களால் இது கவனிக்கப்படாமல் போனது.
ஃபாலட்டின் உடல் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இவர் இறந்த நாள், சூழ்நிலைகள் போன்றவை நிறுவப்படவில்லை. [3]
2019 ஆம் ஆண்டில், எழுத்தாளர் டேனியல் மில்ஸ், ஃபாலட்டின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், ஆனால் சரியாக அது அடையாளம் காணப்படவில்லை என்ற ஒரு கோட்பாட்டை வெளியிட்டார். காணாமல் போன பல நபர்களின் வழக்குகளை விசாரித்த பிறகு, ஃபாலட்டின் உடல் 1948 இல் கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்ததாக மில்ஸ் கூறினார். ஆனால் காணாமல் போன மற்றொரு நபரான எல்சி விட்டெமோர் என தவறாக இவரது உடல் அடையாளம் காணப்பட்டது என்று குறிப்பிட்டார். ஃபாலட்டும், ரோஜர்சும் நீண்ட காலமாக வாடகை ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த பண்ணை வீட்டில் இருந்து அரை மைல் தொலைவில் உள்ள பல்சிஃபர் என்ற மலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்று அவர் விளக்கினார். மேலும் உடலுடன் காணப்பட்ட உடைமைகள் ஃபாலட்டின் உடைமைகளுடன் ஒத்துப்போகின்றன. இருப்பினும், உள்ளூர் காவல்துறையினருக்கு இவர் காணாமல் போனது பற்றி தெரியாது மேலும் அது பற்றிய பதிவு எதுவும் இல்லை. நிகழ்விடத்தில் பார்பிட்யூரேட் எச்சம் கொண்ட ஒரு போத்தல் கண்டுபிடிக்கப்பட்டதால் மரணத்திற்கான காரணம் தற்கொலை என்று தீர்மானிக்கப்பட்டது. [8]
நூல் பட்டியல்
தொகு- The House Without Windows & Eepersip's Life There. New York and London: Knopf 1927. இணையக் கணினி நூலக மையம் 870940 (Reprinted 1968, New York: Avon Camelot.) (Reprinted 2019, London: Hamish Hamilton இணையக் கணினி நூலக மையம் 1112384789)
- The Voyage of the Norman D.. New York and London: Knopf 1928. இணையக் கணினி நூலக மையம் 3561118
- Lost Island (Plus Three Stories and an Afterword). Farksolia 2020 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780996243148
மேற்கோள்கள்
தொகு- ↑ "Barbara Newhall Follett Papers, 1919–1966". Columbia University Archive Collection. Retrieved February 17, 2012.
- ↑ Follett, Barbara N., The House Without Windows, Knopf, 1927, Historical Note by Wilson Follett, p. 156
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Paul Collins (December 2010). "Vanishing Act". Lapham's Quarterly. Archived from the original on August 2, 2014. பார்க்கப்பட்ட நாள் August 2, 2014.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "Books: Tragedy in a Hothouse". Time. June 3, 1966. Archived from the original on 1 February 2011. பார்க்கப்பட்ட நாள் January 3, 2011.
- ↑ "Photos of Barbara's family". Farksolia (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-11.
- ↑ 6.0 6.1 6.2 farksoo (2012-02-15). "Biography". Farksolia (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-11.
- ↑ Morris, Jackie (14 September 2019). "First novel at 12, gone at 25: the mystery of Barbara Newhall Follett". The Guardian.
- ↑ Mills, Daniel (5 April 2019). "A Place of Vanishing: Barbara Newhall Follett and the Woman in the Woods". Los Angeles Review of Books.