பாறைத் தாவி மறிமான்

ஒரு பாலூட்டி இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Oreotragus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

பாறைத் தாவி மறிமான் (Klipspringer) என்பது கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு சிறிய மறிமான் ஆகும். இதன் பேரினம் மற்றும் துணைக் குடும்பம் ஆகியவற்றின் ஒரே உறுப்பினராக இது உள்ளது. பாறைத் தாவி மறிமான் 1783 இல் செர்மானிய விலங்கியல் நிபுணர் எபர்ஹார்ட் ஆகஸ்ட் வில்ஹெல்ம் வான் சிம்மர்மேன் என்பவரால் முதலில் விவரிக்கப்பட்டது. பாறைத் தாவி மறிமான் ஒரு சிறிய, உறுதிமிக்க மறிமான் ஆகும். இது நிற்கும்போது தோள்வரை 43–60 சென்டிமீட்டர்கள் (17–23+12 அங்குலங்கள்) உயரம் இருக்கும். மேலும் இது 8 முதல் 18 கிலோகிராம்கள் (18 முதல் 40 pounds) எடை வரை இருக்கும். பாறைத் தாவி மறிமானின் உடல், மஞ்சள் கலந்த சாம்பல் முதல் சிவப்பு கலந்த பழுப்பு வரை இருக்கும். இதன் உடல் நிறமானது இதன் வாழிடமான பாறைப் பகுதிகளில் உருமறைப்பாக நன்கு செயல்படுகிறது. மற்ற மறிமான்களைப் போலல்லாமல், பாறைத் தாவி மறிமான் அடர்த்தியான, கரடுமுரடான உரோமங்களைக் கொண்டது. இதற்கு குறுகிய, கூர்மையான கொம்புகள் உண்டு. அவை பொதுவாக 7.5–9 செமீ (3–3+1⁄2 அங்குலம்) நீளம் இருக்கும்.

பாறைத் தாவி மறிமான்
Klipspringer
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Oreotragus
இனம்:
இருசொற் பெயரீடு
Oreotragus oreotragus
(Zimmermann, 1783)
Subspecies

See text

பாறைத் தாவி மறிமான் வாழும் பகுதி
வேறு பெயர்கள்
List
  • O. cunenensis Zukowsky, 1924
  • O. hyatti Hinton, 1921
  • O. klippspringer (Daudin, 1802)
  • O. saltator (Boddaert, 1785)
  • O. saltatricoides Neumann, 1902
  • O. saltatrixoides (Temminck, 1853)
  • O. steinhardti Zukowsky, 1924
  • O. typicus A. Smith, 1834

பொதுவாக இது ஒரு இரவாடி ஆகும். பாறைத் தாவி மறிமான் நடுப் பகலிலும், பின்னிரவிலும் ஓய்வெடுக்கும். இது ஒரு சமூக விலங்காகும். பாறைத் தாவி மறிமான் மற்ற மறிமான்களை விட அதிக அளவில் ஒற்றைத் துணையுடன் வாழக்கூடியது. இவை தங்களை இணைகளுடன் நீண்ட காலம் முதல் வாழ்நாள் வரையிலும் சோடியாக இணைந்து வாழ்கின்றன. இணைகள் பெரும்பாலான நேரங்களில் 5 மீ (16 அடி) தொலைவுக்குள் இருக்கும். ஆண் மன்கள் தங்களுக்கு என ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை எல்லையாக வகுத்துக் கொள்கின்றன. அது 7.5–49 எக்டேர்கள் (18+12–121 ஏக்கர்கள்) பரப்பளவு இருக்கும். அதில் அவை தங்கள் இணையுடனும், சந்ததியினருடன் தங்குகிறன. பாறைத் தாவி மறிமான் இளம் செடிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை விரும்பி உண்கிறது. இவற்றின் கர்ப்ப காலம் சுமார் ஆறு மாதங்கள் ஆகும். அதைத் தொடர்ந்து ஒரு குட்டி பிறக்கிறது. வசந்த காலத்திலிருந்து கோடையின் துவக்கம் வரை பிறப்பு விகிதம் உச்சநிலையை அடைகிறது. குட்டி ஒரு வயது ஆனவுடன் தாயை விட்டு பிரிந்து செல்கிறது.

பாறைத் தாவி மறிமான் பாறைகள் கொண்ட நிலப்பரப்பு மற்றும் அரிதான தாவரங்கள் நிறைந்த இடங்களில் வாழ்கிறது. இதன் வாழிட எல்லை வடகிழக்கு சூடான், எரித்திரியா, சோமாலிலாந்து மற்றும் எத்தியோப்பியா [2] கிழக்கில் இருந்து தெற்கில் தென்னாப்பிரிக்கா மற்றும் கடலோர அங்கோலா மற்றும் நமீபியா வரை பரவியுள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கமானது பாறைத் தாவி மறிமானை தீவாய்ப்புக் குறைந்த இனமாக வகைப்படுத்தியுள்ளது. பாறைத் தாவி மறிமான் உயிர்வாழ்வதற்கு பெரிய அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை, ஏனெனில் அதன் வாழ்விடங்கள் எளிதில் அணுக முடியாதவை. மேலும் வேட்டையாடுவதற்கு சாதகமற்ற இடங்களாகும். தனியார் விவசாய நிலங்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றன. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிட்டத்தட்ட 25% மான்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றன.

வகைபிரித்தல் மற்றும் சொற்பிறப்பியல்

தொகு

பாறைத் தாவி மறிமானின் அறிவியல் பெயர் Oreotragus oreotragus ஆகும். இது கிரேக்க மொழிச் சொல்லான ὄρος ( óros ), "மலை" மற்றும் τράγοatς, " trhegotς ) "ஆட்டுக்கிடாய்" என்பதில் இருந்து உருவாக்கபட்டது. இது ஓரியோட்ராகஸ் பேரினம் மற்றும் ஓரியோட்ராஜினே துணைக்குடும்பத்தின் ஒரே உறுப்பினர் ஆகும். [3] மேலும் இது மாட்டுக் குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1783 ஆண்டில் ஜெர்மன் விலங்கியல் நிபுணர் எபர்ஹார்ட் ஆகஸ்ட் வில்ஹெல்ம் வான் சிம்மர்மேனால் இந்த இனம் முதலில் விவரிக்கப்பட்டது . "கிளிப்ஸ்பிரிங்கர்" என்ற பொதுப் பெயர் ஆப்ரிக்கானா சொல்லான கிளிப் ("பாறை") மற்றும் ஸ்பிரிங்கர் ("குதிப்பவர்") ஆகியவற்றின் கலவையாகும். இந்த மறிமானின் மற்றொரு பெயர் "கிளிப்போக்" ஆகும். [4]

கிர்க்கின் டிக்-டிக் ( மடோகுவா கிர்கி ) மற்றும் சுனி ( நியோட்ராகஸ் மொஸ்காடஸ் ) ஆகியவற்றுடன் கிளிப்ஸ்பிரிங்கர் நெருங்கிய தொடர்புடையது என்று 2012 பைலோஜெனடிக் ஆய்வு காட்டுகிறது. பாறைத் தாவி மறிமான் கிட்டத்தட்ட 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. கீழே உள்ள கிளை வரைபடம் இந்த ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது. [5]

Tragelaphus

Suni (Neotragus moschatus)

பாறைத் தாவி மறிமான் (Oreotragus oreotragus)

Kirk's dik-dik (Madoqua kirkii)

Cephalophus

Philantomba

விலங்கியல் வல்லுநர்களான கொலின் க்ரோவ்ஸ் மற்றும் பீட்டர் குரூப் ஆகியோரால் இதில் 11 துணையினங்கள் அடையாளம் காணப்பட்டன. இருப்பினும் 2011 வெளியீட்டில் அவற்றில் சிலவற்றை தனி இனங்களாகக் கருதுகின்றனர்.

விளக்கம்

தொகு
கிடாயின் தலை
பெட்டையின் தலை

பாறைத் தாவி மறிமான் நின்ற நிலையில் தோள்வரை 43–60 cm (17–23+12 அங்) உயரமுள்ள ஒரு சிறிய, உறுதியான மறிமானாகும். தலை மற்றும் உடல் நீளம் பொதுவாக 75 மற்றும் 115 cm (30 மற்றும் 45 அங்) வரை இருக்கும் . இதன் எடை 8 முதல் 18 kg (18 முதல் 40 lb) வரை இருக்கும் [6] பாறைத் தாவி மறிமான் பால் ஈருருமை கொண்டது. பெண் மான்கள் ஆண் மான்களை விட சற்று பெரியதாகவும் கனமாகவும் இருக்கும். இதன் வால் அளவானது 6.5–10.5 cm (2+124+14 அங்) இருக்கும். இதன் முக்கிய முக அம்சங்களில் பழுப்பு நிற நெற்றி, கறுப்பு நிறத் திட்டுகளுடைய குறுகிய காதுகள், கண்களுக்கு அருகில் பிரீஆர்பிட்டல் சுரப்பிகள், வெள்ளை நிற உதடுகளும் கன்னங்களும் ஆகியவை அடங்கும். இதன் கொம்புகள், குட்டையாகவும், கூர்முனை கொண்டதாகவும் இருக்கும். ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் இருக்கும். கொம்புகள் பொதுவாக 7.5–9 cm (3–3+12 அங்) நீளம் இருக்கும். அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்ட கொம்பு நீளம்15.9 cm (6+14 அங்) ஆகும்.

பாறைத் தாவி மறிமானின் உடல் நிறம் மஞ்சள் கலந்த சாம்பல் முதல் சிவப்பு கலந்த பழுப்பு வரை இருக்கும். இது வாழும் பாறை வாழ்விடத்திற்கு ஏற்ற சிறந்த உருமறைப்பாக இதன் நிறம் செயல்படுகிறது. இதன் அடிவயிறு வெள்ளையாக இருக்கும். இவற்றின் கால்கள் பாறைகளில் தாவிச் செல்வதற்கேற்ற வகையில் உறுதியாக உள்ளன. பிற மறிமான்களுக்கு உள்ளது போலோல இதன் குளம்புகள் தட்டையாக இல்லாமல் அடியில் கூர்மையாக செதுக்கி வைத்தது போல இருக்கும். இக்குளம்புகள் உறுதியின இரப்பர் போல உள்ளதால் பாறைகளுக்கு மேல் எளிதில் துள்ளிச் செல்ல உதவுகின்றன. [7]

சூழலியல் மற்றும் நடத்தை

தொகு
 
வழக்கமான லுக்அவுட் (பின்புறம்) மற்றும் உணவளிக்கும் (முன்) ஜோடி நடத்தையை காட்டும் கிளிப்ஸ்பிரிங்கர்கள்

இது பொதுவாக இரவாடி (முக்கியமாக இரவில் நடமாடும்) ஆகும். பாறைத் தாவி மறிமான் நண்பகலிலும், பின்னிரவிலும் ஓய்வெடுக்கிறது. நில ஒளி உள்ள இரவுகளில் இது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இது தன் உடலை கதகதப்பாக்கிக் கொள்ள காலை நேரத்தில் வெயில் காய்கிறது. பாறைத் தாவி மறிமான், மற்ற மறிமான்களை ஒப்பிடும்போது ஒரே இணையுடனே வாழ்கிறது. தன் இணையில் ஒன்று இறக்கும் வரை பிரியாமல் வாழ்கின்றது. [8] [9] இணை மான்கள் பெரும்பாலான நேரங்களில் ஒன்றுக்கொன்று 5 மீ (16 அடி) தொலைவுக்குள் நெருக்கமாக இருக்கும். எடுத்துகாட்டாக ஒரு மான் மேய்ந்து கொண்டிருக்கும்போது இன்னொருமான் வேட்டையாடிகள் போன்ற ஆபத்து ஏதும் வருகின்றனவா என கண்காணித்தபடி இருக்கும். கிளிப்ஸ்பிரிங்கர்கள் ஆபத்து ஏற்படும்போது சில மீட்டர் தொலைவுக்கு குதிக்கும். [8] [9] இவற்றின் சமூகக் குழுக்களில் 8 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட சிறிய குடும்ப மந்தையாக இருக்கும். சமூகக் குழுக்களில் கிளிப்ஸ்பிரிங்கர்கள் ஒன்றுக்கொன்று கன்னங்களைத் தடவி அன்பை வெளிப்படுத்தும். [10]

ஆண் மான்கள் தங்ளுக்கு என ஒரு பிரதேச எல்லையை உருவாக்கிக் கொள்கின்றன அது 7.5–49 எக்டேர்கள் (18+12–121 ஏக்கர்கள்) பரப்பளவைக் (பரப்பளவு மழைப்பொழிவு அளவைப் பொறுத்தது மாறுபடலாம்) கொண்டிருக்கும். அதில் இவை தங்கள் கூட்டாளிகள் மற்றும் சந்ததியினருடன் தங்குகிறன. [11] பொதுவாக பெண் மான்களை விட ஆண் மான்களே அதிக விழிப்புடன் இருக்கும். பாறைத் தாவி மறிமான் தங்கள் பிரதேச எல்லையைக் குறிக்கும் விதமாக கிட்டத்தட்ட 1 மீ (3 அடி 3 அங்குலம்) நீளமும், 10 செமீ (4 அங்குலம்) அகலமும் கொண்ட பெரிய சாணக் குவியல்களை உருவாக்குகிறன. எல்லையைக் குறிக்கும் மற்றொரு வடிவமாக தன் உடலில் சுரக்கும் சுரபியைக் கொண்டு தன் பிரதேசத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் பாறைகள் மீது பூசுகிறது. [12][13] பாறைத் தாவி மறிமான் இணைகள் தங்களுக்குள் சீழ்கை ஒலி மூலம் தொடர்பு கொள்கின்றன. இது ஒரு தகவல் தொடர்பு அல்லது வேட்டையாடிகளிடமிருந்து எச்சரிக்கும் ஒரியாகும். இவற்றை வேட்டையாடுபவைகளில் பபூன், கறுப்பு முதுகு குள்ளநரி, கறகால் பூனை, குடுமிக் கழுகு, சிறுத்தை, தற்காப்பு கழுகு, சேர்வல், புள்ளிக் கழுதைப்புலி வெர்ரோக்ஸ் கழுகு ஆகியவை உள்ளன. மஞ்சள்-வயிறு புல்புல்ஸ் போன்ற பறவைகள் கிளிப்ஸ்பிரிங்கரின் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை உண்பதைக் காண முடிந்தது.

உணவுமுறை

தொகு

முதன்மையாக இது ஒரு உலாவி ஆகும். பாறைத் தாவி மறிமான் இளம் செடிகள், பழங்கள் பூக்களை விரும்பி உண்கிறது. முக்கியமாக ஈரமான பருவத்தில் காணப்படும் புற்கள் உணவின் ஒரு குறிப்பிட்ட பகுதியாக உள்ளது. பாறைத் தாவி மறிமான் தனது உடலுக்கு தேவைப்படும் தண்ணீர் தேவைக்கு நீர்நிலை களை சாராமல் சதைப்பற்றுள்ள தாவரங்களை உண்டு அதிலிருந்து நீர் சத்தை பெறுகிறது. தரையில் இருந்து 1.2 மீ (3 அடி 11 அங்குலம்) வரை உள்ள உயரமான கிளைகளை எட்டிப் பிடிக்க இவை தங்கள் பின்னங்கால்களில் நிற்கக்கூடியன. நமீபியாவில் சில மான்கள் 5.4 மீ (17 அடி 9 அங்குலம்) உயரம் வரை ஃபைதர்பியா அல்பிடா மரங்களில் ஏறுவதைக் காண முடியும்.

இனப்பெருக்கம்

தொகு

பாறைத் தாவி மறிமான் பருவகாலத்துக்கு ஏற்ப இனச்சேர்கையில் ஈடுபடும். இனச்சேர்க்கை நிகழும் காலம் புவியியல் ரீதியாக மாறுபடும். பெண் மான்கள் ஒரு வயதிற்குள் பாலியல் முதிர்ச்சியடைகிறன. ஆண் மான்கள் பாலியல் முதிர்ச்சியடைய அதைவிட சிறிது காலம் எடுக்கும். இனச்சேர்க்கை நடத்தை குறித்து விரிவாகத் தெரியவரவில்லை. கர்ப்பம் சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கும், அதைத் தொடர்ந்து 1 கிலோ (2 பவுண்டு) எடையுள்ள ஒரு குட்டி பிறக்கிறது; வசந்த காலத்திலிருந்து கோடையின் துவக்கம் வரை பிறப்பு உச்சநிலையில் இருக்கும். அடர்ந்த தாவரங்கள் உள்ள இடத்தில் பிறப்புகள் நடைபெறுகின்றன. புதிதாகப் பிறந்த குட்டியை வேட்டையாடிகளின் பார்வையில் இருந்து பாதுகாக்க மூன்று மாதங்கள் வரை கவனமாக அவை மறைவிடங்களில் பாதுகாக்கப்படுகிறது. தாய் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை பாலூட்டும். சந்ததிகள் வளரும்போது வருகைகள் படிப்படியாக கூடுகின்றன. ஆண் மான்கள் தங்கள் சந்ததிகளைப் பாதுகாக்கிறன, மற்ற ஆண் மான்களையும் வேட்டையாடிகளையும் கண்காணிக்கிறன. [6] குட்டி நான்கு முதல் ஐந்து மாதங்கள் பால் குடிக்கிறது. ஒரு வயது ஆனவுடன் குட்டி தன் தாயை விட்டுப் பிரிகிறது. கிளிப்ஸ்பிரிங்கர்கள் சுமார் 15 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. [6]

வாழ்விடம் மற்றும் பரவல்

தொகு
 
பாறைத் தாவி மறிமான்கள் அரிதான தாவரங்களைக் கொண்ட மலைப் பகுதிகளில் வாழ்கின்றன.

பாறைத் தாவி மறிமான் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பில், அரிதான தாவரங்கள் காணப்படும் இடங்களில் வாழ்கிறது. இது உணவுப் பற்றாக்குறையின் போது தாழ்வான பகுதிகளுக்கு இடம்பெயர்கிறது. கிளிமஞ்சாரோ மலையில் 4,500 மீ (15,000 அடி) உயரத்தில் பாறைத் தாவி மறிமான் காணப்படுகிறது. பாறைத் தாவி மறிமான் பெரிய பரப்பளவில் உள்ள சாதகமான வாழ்விடங்களில் அதிக அடர்த்தியாக வாழக்கூடும்; எத்தியோப்பியாவின் சிமியன் மலைகள் தேசிய பூங்காவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 10 முதல் 14 மான்கள் உள்ளனர். இருப்பினும், வாழ்விடத்தில் பெரும் பகுதிகளில் பாறைகளாக இருந்து புல்வெளி நிலப்பரப்பு குறைவாக இருக்கும் பகுதியில் இவற்றறின் அடர்த்தி பொதுவாக ஒரு சதுர கிலோமீட்டருக்கு 0.01 மற்றும் 0.1 இருக்கும்.

கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா முழுவதும் கணிசமான எண்ணிக்கையில் இந்த மறிமான் காணப்படுகிறது. இதன் வாழும் எல்லை வடகிழக்கில் சூடான், எரித்திரியா, வடக்கில் சோமாலியா மற்றும் கிழக்கில் எத்தியோப்பியாவிலிருந்து தெற்கில் தென்னாப்பிரிக்கா வரையிலும், கடலோர அங்கோலா மற்றும் நமீபியா வரையிலும் பரவியுள்ளது. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் வடக்கு மற்றும் மேற்கு மலைப்பகுதிகள், காங்கோவின் தென்கிழக்கு ஜனநாயகக் குடியரசு, ஜோஸ் பீடபூமி மற்றும் நைஜீரியாவில் உள்ள கஷாகா கும்டி தேசியப் பூங்காவின் கிழக்கே சிறிய எண்ணிக்கையில் காணப்படுகிறது. இது புருண்டியில் அற்றுவிடும் என்று அஞ்சப்படுகிறது. [14]

அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு

தொகு
 
குளம்புகளின் நெருக்கமான தோற்றம்

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் பாறைத் தாவி மறிமானை தீவாய்ப்பு குறைந்த இனமாக வகைப்படுத்தியுள்ளது. பாறைத் தாவி மறிமான் அதன் இறைச்சி, தோல், முடி போன்றவற்றிற்காக வேட்டையாடப்படுகிறது. [15] இருப்பினும், பாறைத் தாவி மறிமான்கள் உயிர்வாழ்வதற்கு பெரிய அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. ஏனெனில் அதன் வாழ்விடங்கள் எளிதில் அணுக முடியாதவையாகவும், வேட்டையாடுவதற்கு சாதகமற்றவையாகவும் உள்ளன. மேலும், மலைப் பகுதிகளுக்கு மேய்சலுக்கு அடிக்கடி செல்ல முடியாத கால்நடைகளுடன் மான் உணவுக்கு போட்டியிட வேண்டிய தேவை இல்லை. இருப்பினும், குறைந்த உயரத்தில் உள்ள மறிமான்கள் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. [14]

1999 ஆம் ஆண்டில், பன்னாட்டு இயற்கை பாது காப்பு சங்கத்தின் மறிமான் நிபுணர் குழுவினர் பாறைத் தாவி மறிமானின் மொத்த எண்ணிக்கை 42,000 என மதிப்பிட்டுள்ளனர். இவை தனியார் விவசாய நிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காணப்படுகின்றன. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, சிமியன் மற்றும் பேல் மலைகள் தேசிய பூங்காக்கள் (எத்தியோப்பியா); சாவோ கிழக்கு மற்றும் மேற்கு தேசிய பூங்காக்கள் (கென்யா); வடக்கு மற்றும் தெற்கு லுவாங்வா தேசிய பூங்காக்கள் ( சாம்பியா ); நைக்கா தேசிய பூங்கா ( மலாவி ); Namib-Naukluft தேசிய பூங்கா (நமீபியா); மற்றும் மாடோபோ தேசிய பூங்கா (ஜிம்பாப்வே) போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 25% மான்கள் உள்ளன. [14]

குறிப்புகள்

தொகு
  1. IUCN SSC Antelope Specialist Group (2016). "Oreotragus oreotragus". IUCN Red List of Threatened Species 2016: e.T15485A50191264. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T15485A50191264.en. https://www.iucnredlist.org/species/15485/50191264. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Aerts, Raf (2019). Forest and woodland vegetation in the highlands of Dogu'a Tembien. In: Nyssen J., Jacob, M., Frankl, A. (Eds.). Geo-trekking in Ethiopia's Tropical Mountains - The Dogu'a Tembien District. SpringerNature. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-030-04954-6. பார்க்கப்பட்ட நாள் 18 June 2019.
  3. "Explore the Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.
  4. [Merriam-Webster Dictionary] Klipspringer
  5. Johnston, A.R; Anthony, N.M (2012). "A multi-locus species phylogeny of African forest duikers in the subfamily Cephalophinae: evidence for a recent radiation in the Pleistocene". BMC Evolutionary Biology 12 (120): 120. doi:10.1186/1471-2148-12-120. பப்மெட்:22823504. 
  6. 6.0 6.1 6.2 {{cite book}}: Empty citation (help)
  7. {{cite book}}: Empty citation (help)
  8. 8.0 8.1 Dunbar, R. (1984). "The ecology of monogamy". New Scientist (1419): 12–5. 
  9. 9.0 9.1 Dunbar, R.I.M.; Dunbar, E.P. (1980). "The pairbond in klipspringer". Animal Behaviour 28 (1): 219–29. doi:10.1016/S0003-3472(80)80026-1. 
  10. Dunbar, R.I.M.; Dunbar, E.P. (1974). "Social organization and ecology of the klipspringer (Oreotragus oreotragus) in Ethiopia". Zeitschrift für Tierpsychologie 35 (5): 481–93. doi:10.1111/j.1439-0310.1974.tb00462.x. பப்மெட்:4456903. 
  11. Norton, P.M. (2011). "The habitat and feeding ecology of the klipspringer Oreotragus Oreotragus (Zimmermann, 1973) in two areas of the Cape Province". MSC Dissertation, University of Pretoria: 97–100. https://repository.up.ac.za/bitstream/handle/2263/27760/dissertation.pdf?sequence=1&isAllowed=y. 
  12. Mills, G.; Hes, L. (1997). The Complete Book of Southern African Mammals (1st ed.). Cape Town, South Africa: Struik Publishers. p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-947430-55-9.
  13. Apps, P. (2000). Wild Ways : Field Guide to the Behaviour of Southern African Mammals (2nd ed.). Cape Town, South Africa: Struik Publishers. pp. 157–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86872-443-7.
  14. 14.0 14.1 14.2 East, R.; IUCN/SSC Antelope Specialist Group (1999). African Antelope Database 1998 (Illustrated ed.). Gland, Switzerland: The IUCN Species Survival Commission. pp. 298–301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-8317-0477-7.East, R.; IUCN/SSC Antelope Specialist Group (1999).
  15. Mares, M.A. (1999). Encyclopedia of deserts (Illustrated ed.). Norman, US: University of Oklahoma Press. p. 324. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8061-3146-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாறைத்_தாவி_மறிமான்&oldid=3641494" இலிருந்து மீள்விக்கப்பட்டது