பாலோற்சவம்

பாலோற்சவம் ( குழந்தைகள் விழா ) என்பது தெலுங்கு மொழிக் குழந்தைகளுக்காக இந்தியாவில் நடத்தப்படும் வருடாந்திர சர்வதேச கலாச்சார விழா ஆகும்.[1] இதில் ஓவியம், சொற்பொழிவு மற்றும் நாடகம் போன்ற பல்வேறு அம்சங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இது 1991 இல் நகர அளவிலான நிகழ்வாகவே முதலில் தொடங்கப்பட்டது. அப்போதிருந்து, இந்த நிகழ்வு பள்ளி மாணவர்களிடையே பிரபலமடைந்து த்ற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் தேசிய அளவிலான நிகழ்வாக நடந்துவருகிறது. 2017 க்கு முன்பு, நவம்பர் இரண்டாவது வாரத்தில் கொத்தகுடத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வாசிரெட்டி வெங்கடாத்ரி தொழிநுட்ப நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.

பாலோற்சவம்
బాలోత్సవ్
வகைகுழந்தைகள் திருவிழா
நாட்கள்நவம்பர் மாததில் 3 அல்லது 4 நாட்கள்
(close to Children's Day)
காலப்பகுதிவருடாந்திரம்
நிகழ்விடம்கோத்தகுடெம்[a]
[b]
நாடுஇந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்32
துவக்கம்1991
மிக அண்மைய28–30 நவம்பர் 2019
முந்தைய நிகழ்வு28–30 நவம்பர்2018
வலைத்தளம்
www.balotsav.com[a]
www.balotsav.in[b]

வரலாறு தொகு

தெலுங்கு மொழியின் நலன் மற்றும் பள்ளி மாணவர்களிடையே திறமை மற்றும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில், 1991 ம் ஆண்டு, முதல் முறையாக கொத்தகுடேம் கிளப் மூலமாக நகர அளவிலான பள்ளிகளுக்கிடையேயான கட்டுரை எழுதுதல், சொற்பொழிவு, பொது அறிவு மற்றும் ஓவியம் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 1995 ஆம் ஆண்டில் மாவட்ட அளவில், இரண்டு நாட்களுக்கு, எட்டு வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டதன. 2000 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த (இன்றைய ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ) 3000 குழந்தைகளுடன் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடிய இந்த விழா, "பாலோற்சவம்" என்று மறுபெயரிடப்பட்டு, மாநில அளவில் நடத்தப்பட்டது. .[2]

நிகழ்வு மற்றும் செயல்பாடுகள் தொகு

இந்தியாவின் குழந்தைகள் தினத்தை ஒன்றி, நவம்பர் இரண்டாவது வாரத்தில் இவ்விழா நடத்தப்படுகிறது.[2] ஓவியம், சொற்பொழிவு, கவிதை, கட்டுரை எழுதுதல், பாடல், நடனம், பாரம்பரிய நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நிகழ்ச்சிகள், கைவினைப்பொருட்கள், தனிநபர் நாடகம் மற்றும் கடிதம் எழுதுதல் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான போட்டிகள் தெலுங்கு மொழிக்காகவே நடத்தப்படுகின்றன. இருப்பினும் பிழையின்றி எழுத்துதல் மற்றும் பொதுப் பேச்சு போன்ற சில போட்டிகள் ஆங்கில மொழிக்காகவும் நடத்தப்படுகின்றன.[3]

சமீபத்திய ஆண்டுகளில் தொகு

2001-2011 தொகு

மாநில மற்றும் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற பிறகு, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. சில ஆண்டுகளில், போட்டி பிரிவுகள் மற்றும் நிலைகளின் அடிப்படையில் விழா அதன் நோக்கத்தை விரிவுபடுத்தியது. தற்போது, 36 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.[2] வருடாந்திர பங்கேற்பு புள்ளிவிவரங்கள் பின்வருமாறு;

ஆண்டுகள் பங்கேற்பு குறிப்புகள்
2001 6 மாவட்டங்களில் இருந்து 4,000 மாணவர்கள் [2]
2002 12 மாவட்டங்களில் இருந்து 5,400 மாணவர்கள்
2003 14 மாவட்டங்களில் இருந்து 7,000 மாணவர்கள்
2004 16 மாவட்டங்களில் இருந்து 8,000 மாணவர்கள்
2005 8,200 மாணவர்கள்
2006 8,500 மாணவர்கள்
2007 9,000 மாணவர்கள்
2008 10,000 மாணவர்கள்
2009 12,000 மாணவர்கள்
2010 கிடைக்கவில்லை
2011 கிடைக்கவில்லை

2012–2016 தொகு

2012 இல், பாலோற்சவத்தின் 21 வது விழா நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு ஈர்ப்பாக இருந்தது, வியர்த்தம்தோ அர்த்தம் (கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளை உருவாக்குதல்), மற்றும் ஒரு குறும்படப் போட்டியாகும்.[4] 2013 ஆம் ஆண்டில், பாலோற்சவத்தின் 22 வது நிகழ்வில் நவம்பர் 8 முதல் நவம்பர் 10 வரை நடைபெற்றது. தொடக்க விழாவை இந்தியாவின் இளம் எழுத்தாளர்களில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த நிதி பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 512 பள்ளிகளைச் சேர்ந்த 5,112 குழந்தைகள் கலந்து கொண்டனர்.[5][6] 2014 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய ஆறு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்பாளர்களுடன், பாலோற்சவத்தின் 23வது மறுநிகழ்வு நவம்பர் 7 முதல் நவம்பர் 9 வரை நடைபெற்றது. விழாவில் தெலுங்கானாவில் இருந்து 15,000 மாணவர்களும், மற்ற ஐந்து மாநிலங்களில் இருந்து 2,000 மாணவர்களும் கலந்து கொண்டனர்.[7][8] 2015 ஆம் ஆண்டில், பாலோற்சவத்தின் 24 வது விழா நவம்பர் 12 முதல் நவம்பர் 14 வரை நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் சிறுவர் பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்ற உயர்நிலைப் பள்ளி மாணவர் ஷேக் சாதிக் பாஷா இதனைத் தொடங்கி வைத்தார்.[9] 2016 ஆம் ஆண்டில், வெள்ளி விழாவைக் குறிக்கும் வகையில், பாலோற்சவத்தின் 25 வது விழாவானது நவம்பர் 10 முதல் நவம்பர் 13 வரை 29 நிகழ்வுகளுடன் நான்கு நாட்களாக விரிவுபடுத்தப்பட்டது. நிறைவு விழாவிற்கு தெலுங்கானா மாநில தகவல் தொழினுட்பம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் தலைமை தாங்கினார்.[10][11]

2017 தொகு

2017 ஆம் ஆண்டில், பாலோற்சவத்தின் 26 வது விழா நவம்பர் 12 முதல் நவம்பர் 14 வரை நடத்தப்பட்டது. இது 1991 இல் தொடங்கப்பட்ட இதை, முதல் ஒருங்கினைப்பாலர்கள் 2017உடன் ரத்து செய்ய முடிவு செய்தனர். வசிரெட்டி வெங்கடாத்ரி தொழில்நுட்ப நிறுவனம் (விவிஐடி) நிகழ்ச்சியை நடத்த விருப்பம் தெரிவித்ததாகவும், அதன் பிறகு திட்டம் கொடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர் சந்திப்பின் போது பல முந்தைய மறுமுறைகளின் ஒருங்கிணைப்பாளர் வாசிரெட்டி ரமேஷ் பாபு தெரிவித்தார். இது ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகம், ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், ஆந்திரப் பிரதேச மாநிலத் திறன் கழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் அல்லாத குடியுரிமைக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.[1] விழாவில் 12,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். நிறைவு விழாவிற்கு சபாநாயகரும், ஆந்திர மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான கோடேலா சிவபிரசாத் ராவ் மற்றும் மண்டலி புத்த பிரசாத் ஆகியோர் தலைமை தாங்கினர் . ஒரு நிறைவுக் குறிப்பில், எதிர்காலத்தில் விவிஐடி விழாவை நடத்தும் என்று வாசிரெட்டி கூறினார்.[12]

குறிப்புகள் தொகு

அடிக்குறிப்புகள்
  1. 1.0 1.1 1991–2016
  2. 2.0 2.1 2017–
மேற்கோள்கள்
  1. 1.0 1.1 "VVIT to host Balotsav 2017". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 October 2017. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 "బాలోత్సవ్ అంకురార్పణ". Balotsav (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 10 November 2017."బాలోత్సవ్ అంకురార్పణ". Balotsav (in Telugu). Retrieved 10 November 2017.
  3. "పోటీ అంశాలు". Balotsav (in தெலுங்கு). Archived from the original on 10 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
  4. "'Balotsav' brings out the best in children". தி இந்து. 12 November 2012. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
  5. "Balotsav off to a spectacular start". தி இந்து. 9 November 2013. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
  6. "'Balotsav' to be held from Nov. 8". தி இந்து (in Indian English). 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
  7. "Balotsav-2014 begins on grand note". தி டெக்கன் குரோனிக்கள். 8 November 2014. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
  8. "Kothagudem coal town to host Balotsav-2014 in November in Telangana". தி இந்து. 15 September 2014. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
  9. "Three-day Balotsav gets under way in Kothagudem". தி இந்து. 14 November 2015. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
  10. "National Balotsav-2016 from Nov.10". தி இந்து (in Indian English). 3 November 2016. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
  11. "Warangal girl excels at Balotsav-2016". The Hans India. 15 November 2016. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
  12. "Balotsav concludes". தி இந்து. 16 November 2017. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலோற்சவம்&oldid=3909222" இலிருந்து மீள்விக்கப்பட்டது