பிந்தநாத் ( Bintanath ) அல்லது பெந்தநாத் எகிப்திய பார்வோன் இரண்டாம் ராமேசசின் முதல் மகளும் பட்டத்தரசியுமாவார்[1][2][3]

பிந்தநாத்
எகிப்தின்
அரசி
இரு நிலங்களின் பெண்மணி
கீழ் மற்றும் மேல் எகிப்தின் தலைவி போன்ற பல
லூக்சரில் உள்ள இரண்டாம் ராமேசசின் சிலையின் பக்கவாட்டு சிலையில் சித்தரிக்கப்பட்டுள்ள பிந்தநாத்
துணைவர்இரண்டாம் ராமேசஸ்
மெர்நெப்தா? (இருக்கலாம்)
வாரிசு(கள்)ஒரு மகள் ஆனால் பெயர் தெரியவில்லை
அரச குலம்எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்
தந்தைஇரண்டாம் ராமேசஸ்
தாய்ஐசேத்னோபிரெட்
அடக்கம்QV71, அரசிகளின் சமவெளி, Thebes
சமயம்பண்டைய எகிப்தின் சமயம்
பிந்தநாத் படவெழுத்துக்களில்
E10 Z1 R7N18
Z2
t
R7
D36
n
U33iB1

பிந்தநாத் (கலலறையில்)
Daughter of Anath
E11Z1 n
Z2
a
n
U33T

பிந்தநாத் (கற்கள் மேலே)
அனாத்தின் மகள்

குடும்பம்

தொகு

பிந்தநாத் அவரது தாத்தா முதலாம் சேத்தியின் ஆட்சியின் போது பிறந்திருக்கலாம். இவரது தாயார் ஐசேத்னோபிரெட்‎, இரண்டாம் ராமேசசின் இரண்டு முக்கிய மனைவிகளில் ஒருவர். பிந்தநாத் என்பது செமிடிக் மொழியில், கானானிய தெய்வமான அனாத்தை குறிக்கிறது. இவருக்கு குறைந்தபட்சம் மூன்று சகோதரர்கள், ராமேசசு, கெம்வெசேத், மற்றும் மெர்நெப்தா மற்றும் ஒரு சகோதரியும் இருந்தனர். இவருக்கு இவருடைய தாயின் பெயரால் ஐசேத்னோபிரெட் எனவும் பெயரிடப்பட்டது. [1]

பிந்தநாத்துக்கு ஒரு மகள் இருந்துள்ளார். அவள் அரசிகளின் சமவெளியில் உள்ள அவரது கல்லறையில் உள்ள ஓவியங்களில் தோன்றுகிறாள். அவளுக்கு அங்கு பெயரிடப்படவில்லை. ஆனால் தொல்லியல் அறிஞர் ஜாய்ஸ் டில்டெஸ்லியின் கூற்றுப்படி அவள் பெயரும் பிந்தநாத் என்றும் அவள் அடுத்த பாரோவான மெர்நெப்தாவை மணந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவரது கூற்றுப்படி, அல்-உக்சுரிலுள்ள மெர்நெப்தாவின் சிலையில் "பட்டத்தரசி பிந்தநாத்" என்று குறிப்பிடுகிறது.[4]

`வாழ்க்கை

தொகு
 
அஸ்வான் கோயிலில் காணப்படும் உருவங்கள் மேலே: கூபு கடவுளுக்கு முன் இரண்டாம் ராமேசசு, ஐசேத்னோபிரெட் மற்றும் கெம்வெசேத். கீழே இடமிருந்து வலமாக: மெர்நெப்தா, பிந்தநாத் மற்றும் இளவரசர் ராமேசசு.

பிந்தநாத் அல்-உக்சுரிலுள்ள ஒரு கோபுரத்தின் மீது இரண்டாம் ராமேசசின் 3 ஆம் ஆட்சியாண்டு தேதியிட்ட ஒரு காட்சியில் சித்தரிக்கப்படுகிறார். இவர் மன்னரின் மகள் என்றும், இளவரசிகளில் முதன்மையானவர் என்றும் கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து மெரிட்டாமென் இவரது சகோதையாக இருக்கிறார். பிந்தநாத் அபு சிம்பெல் கோயில்களில் இளவரசியாக இருமுறை தோன்றுகிறார். நெபெட்டாவியுடன் சேர்ந்து இவர் பெரிய கோவிலின் முகப்பில் தெற்கே உள்ள பெரிய சிலையைச் சுற்றி நிற்கிறார். கோவிலுக்குள் இருக்கும் தூண் ஒன்றில் அனுகேத் தேவிக்கு மலர்களை வழங்குவது போல் காட்சியளிக்கிறார். [5]

மரணம் மற்றும் அடக்கம்

தொகு

இவர் ராமேசசின் முதல் மகளாக இருந்தபோதிலும், நீண்ட காலம் வாழ்ந்த தந்தையை விட அதிகமாக வாழ்ந்த சில குழந்தைகளில் இவரும் ஒருவர். மெரென்ப்டாவால் அபகரிக்கப்பட்ட ஒரு சிலையில் அவள் சித்தரிக்கப்படுகிறாள். [1] அவர் தனது சகோதரர் மெர்னெப்தாவின் ஆட்சியின் போது இறந்தார் மற்றும் அரசிகளின் சமவெளியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[1]

 
நேப்டிசு தெவத்தின் முன் நிற்கும் ராணி பிந்தநாத்தும் அவரது மகளும்

பிந்தநாத்தின் பெயர் கல்லறையில் சற்று வித்தியாசமான எழுத்துப்பிழைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.[6] பிந்தநாத் ஒசிரிசு மற்றும் நெப்டிசுக்கு முன் காட்டப்பட்டுள்ளார். ராணி பிந்தநாத் அவரது பயரிடப்படாத மகளுடன் சித்தரிக்கப்படுகிறார். இவரது கல் சவப்பெட்டி பின்னர் ஒருவரால் அபகரிக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Dodson, Aidan and Hilton, Dyan. The Complete Royal Families of Ancient Egypt. Thames & Hudson. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05128-3, p.170
  2. Gaballa, G. A. (August 1973). "Three Documents from the Reign of Ramesses Iii" (in en). The Journal of Egyptian Archaeology 59 (1): 109–113. doi:10.1177/030751337305900114. பன்னாட்டுத் தர தொடர் எண்:0307-5133. http://journals.sagepub.com/doi/10.1177/030751337305900114. 
  3. Robins, Gay (December 1994). "Book Review: Growing up in Ancient Egypt" (in en). The Journal of Egyptian Archaeology 80 (1): 232–235. doi:10.1177/030751339408000127. பன்னாட்டுத் தர தொடர் எண்:0307-5133. http://journals.sagepub.com/doi/10.1177/030751339408000127. 
  4. Tyldesley, Joyce. Ramesses: Egypt's Greatest Pharaoh. Penguin. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-028097-9
  5. 5.0 5.1 Kitchen, K.A., Ramesside Inscriptions, Translated & Annotated, Translations, Volume II, Blackwell Publishers, 1996
  6. Lepsius, Denkmahler University of Halle Website பரணிடப்பட்டது மார்ச்சு 9, 2007 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்தநாத்&oldid=4054190" இலிருந்து மீள்விக்கப்பட்டது