பியூட்டைரால்டிகைடு
பியூட்டைரால்டிகைடு (Butyraldehyde) என்பது CH3(CH2)2CHO என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூட்டேனின் ஆல்டிகைடு வகை வழிப்பொருளான இச்சேர்மத்தை பியூட்டனால் என்றும் அழைப்பர். நிறமற்ற இச்சேர்மம் எளிதில் தீப்பிடிக்கும் பியூட்டைரால்டிகைடு கார்ப்பு நெடியுடன் காணப்படுகிறது. பல கரிமக் கரைப்பான்களுடன் கலக்கும் இயல்புடையாகவும் உள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Butanal
| |
இனங்காட்டிகள் | |
123-72-8 | |
ChEBI | CHEBI:15743 |
ChemSpider | 256 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C01412 |
பப்கெம் | 261 |
| |
UNII | H21352682A |
பண்புகள் | |
C4H8O | |
வாய்ப்பாட்டு எடை | 72.11 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | கார மணம், ஆல்டிகைடின் மணம் |
அடர்த்தி | 0.8016 கி/மி.லி |
உருகுநிலை | −96.86 °C (−142.35 °F; 176.29 K) |
கொதிநிலை | 74.8 °C (166.6 °F; 347.9 K) |
7.6 கி/100 மி.லி (20 °செ) | |
கரைதிறன் | எத்தனால், ஈதர், தொலுயீன் ஆகியவற்றில் கலக்கும் அசிட்டோன், பென்சீன் ஆகியவற்றில் நன்றாகக் கரையும் குளோரோஃபார்மில் சிறிதளவு கரையும். |
மட. P | 0.88 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3766 |
பிசுக்குமை | 0.45 cP (20 °செ) |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 2.72 D |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of combustion ΔcH |
2470.34 கியூ/மோல் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Sigma-Aldrich |
ஈயூ வகைப்பாடு | எளிதில் தீப்பிடிக்கும் (F) |
R-சொற்றொடர்கள் | R11 |
S-சொற்றொடர்கள் | (S2), S9, S29, S33 |
தீப்பற்றும் வெப்பநிலை | −7 °C (19 °F; 266 K) |
Autoignition
temperature |
230 °C (446 °F; 503 K) |
வெடிபொருள் வரம்புகள் | 1.9–12.5% |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
2490 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஆல்டிகைடு தொடர்புடையவை |
புரோப்பியனால்டிகைடு பென்டனால் |
தொடர்புடைய சேர்மங்கள் | பியூட்டன்-1-ஓல் பியூட்டரிக் அமிலம், சமபியூட்டைரால்டிகைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபுரோபைலீனை ஐதரோபார்மைலேற்றம் செய்வதால் பியூட்டைரால்டிகைடு தயாரிக்கலாம்.
- CH3CH=CH2 + H2 + CO → CH3CH2CH2CHO
கோபால்ட் கார்பனைல் மற்றும் பின்னர் முப்பீனைல்பாசுப்பைனின் ரோடியம் அணைவுச் சேர்மங்கள் மரபுவழியாக பார்மைலேற்ற வினைகளுக்கு வினையூக்கியாகச் செயல்பட்டன. பின்னர் நீரில் கரையக்கூடிய ஈனிகளில் இருந்து தருவிக்கப்பட்ட ரோடியம் வினையூக்கிகள் ஆதிக்கம் செலுத்தின.ரோடியம் வினையூக்கியின் நீர்க்கரைசல் புரோப்பைலீனை ஆல்டிகைடாக மாற்றுகிறது. ஐதரோபார்மைலேற்ற வினையின் மூலம் ஆண்டொன்றுக்கு ஆறு பில்லியன் கிலோகிராம் பியூட்டைரால்டிகைடு உற்பத்தி செய்யப்படுகிறது.
n-பியூட்டனாலை வினையூக்க ஐதரசன் நீக்கம் செய்தும் பியூட்டைரால்டிகைடைத் தயாரிக்க முடியும். அசிட்டால்டிகைடில் இருந்து தருவிக்கப்பட்ட குரோட்டனால்டிகைடை வினையூக்க ஐதரசனேற்றம் செய்தும் ஒரு காலத்தில் பியூட்டைரால்டிகைடு தயாரிக்கப்பட்டது.[2]
காற்றில் படிப்படியாக பியூட்டைரால்டிகைடு ஆக்சிசனேற்றம் அடைந்து பியூட்டரிக் அமிலம் உருவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Merck Index, 11th Edition, 1591
- ↑ Boy Cornils, Richard W. Fischer, Christian Kohlpaintner "Butanals" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2000, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a04_447