பிரம்மகிரி காட்டுயிர் உய்விடம்
பிரம்மகிரி காட்டுயிர் உய்விடம் (Brahmagiri Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெங்களூரிலிருந்து சுமார் 250 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள சரணாலயம் ஆகும். இந்த சரணாலயம் சுமார் 181 சதுர கி. மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் மிக உயரமான இடமான பிராமிகிரி சிகரத்தின் பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது. இந்த வன உயிரி காப்பகம் ஜூன் 5, 1974-ல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[சான்று தேவை]
பிரம்மகிரி காட்டுயிர் உய்விடம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
பிரம்மகிரி காட்டுயிர் உய்விடம், கர்நாடக மாநிலத்தில் | |
அமைவிடம் | இந்தியா |
ஆள்கூறுகள் | 12°23′13″N 75°29′28″E / 12.387°N 75.491°E |
பரப்பளவு | 181 சதுர கிலோமீட்டர் |
நிறுவப்பட்டது | சூன் 5, 1974 |
வனஉயிரி
தொகுதாவரங்கள்
தொகுஇந்தச் சரணாலயம் பசுமையான மற்றும் பகுதி-பசுமைமாறாக் காடுகள் கொண்டுள்ளது. மலை உயரங்களில் புல்வெளிகளும் சோலைக்காடுகளும் உள்ளன. மூங்கில் பரவலாக உள்ளன.
விலங்கினங்கள்
தொகுஇச்சரணாலயத்தில் காணப்படும் பாலூட்டிகளாக சோலைமந்தி, இந்திய யானை, இந்தியக் காடெருது, புலி,[1] காட்டுப்பூனை, சிறுத்தை பூனை, செந்நாய், , தேன் கரடி, காட்டுப் பன்றி, கடமான், புள்ளிமான், நீலகிரி மந்தி, தேவாங்கு, குல்லாய் குரங்கு, கேளையாடு, சருகுமான், இந்திய மலை அணில், ராட்சத பறக்கும் அணில்கள், கரும்வெருகு, நீர்நாய், பழுப்புக்கீரி, புனுகுப்பூனை, முள்ளம்பன்றி மற்றும் கீறி உள்ளன.
மலைப்பாம்பு, நாகப்பாம்பு, இராச நாகம் மற்றும் மலபார் குழி விரியன் போன்ற ஊர்வனவையும் மரகதப்புறா, கருப்புச்சின்னான் மற்றும் தீக்காக்கை போன்ற பறவைகளும் இச்சரணாலயத்தில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "On the scent of a tiger". Deccan Herald (in ஆங்கிலம்). 2012-05-14. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.