பிரம்மவித்ய உபநிடதம்
பிரம்மவித்ய உபநிடதம் ( Brahmavidya Upanishad ) என்பது ஒரு சமசுகிருத உரையாகும். இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றான [2] இது நான்கு வேதங்களில் உள்ள இருபது யோக உபநிடதங்கங்களில் ஒன்றாகும்.[3]
பிரம்மவித்ய உபநிடதம் | |
---|---|
Om | |
தேவநாகரி | ब्रह्मविद्या |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு | பிரம்மவித்யா |
உபநிடத வகை | யோகக் கலை[1] |
தொடர்பான வேதம் | யசுர் வேதம் |
அத்தியாயங்கள் | 1 |
பாடல்களின் எண்ணிக்கை | பல கையெழுத்துப் பிரதிகள் (14 முதல் 110) |
அடிப்படைத் தத்துவம் | யோகக் கலை, வேதாந்தம்a |
iதன் கையெழுத்துப் பிரதிகளின் இரண்டு முக்கிய பதிப்புகள் அறியப்படுகின்றன. ஒன்று அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்ட பதினான்கு வசனங்களைக் கொண்டுள்ளது. [4] மற்றொரு பெரிய கையெழுத்துப் பிரதி தெலுங்கில் உள்ளது.[5] நூற்று பத்து வசனங்கள் இடம் பெற்ற இது யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [6][7]
உபநிடதம் முக்கியமாக ஓம் என்ற பிரவண மந்திரத்தின் அமைப்பு, அதன் ஒலியின் அம்சம், அதன் இடம், அதன் ஆரம்பம் மற்றும் முடிவு மற்றும் இலயத்தின் முக்கியத்துவம் (அதன் ஒலி மறைதல்) ஆகியவற்றை விளக்குகிறது.[8][9] ஓம் என்பது பிரம்மம் (இறுதி உண்மை) என உரை வலியுறுத்துகிறது. [10] தொண்டையில் விஷ்ணுவும், அண்ணத்தின் நடுவில் உருத்திரனும், நெற்றியில் சிவனும், மூக்கின் நுனியில் சதாசிவனும், இதயத்தில் பிராமணனும் ஐந்து ஆத்மாக்களாக மனித உடலுக்குள் தேவர்கள் வாழ்கிறார்கள் என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.[11][12] எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பிரம்மம், எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரமாத்மாவைப் போலவே உள்ளார்ந்த ஆன்மா என உரை கூறுகிறது.[13]
இது பிரம்மவித்யோபநிஷத் என்றும் அழைக்கப்படுகிறது.[14][15] 108 உபநிடதங்களின் நவீன சகாப்தத் தொகுப்பில் இராமன் அனுமனுக்கு கூறப்பட்டதாகச் சொல்லப்படும் முக்திகா நியதிகளின் வரிசையில் இது 40 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[16]
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ Deussen 1997, ப. 567.
- ↑ Deussen 1997, ப. 557, 713.
- ↑ Ayyangar 1938, ப. vii.
- ↑ Deussen 1997, ப. 667-670.
- ↑ Deussen 1997, ப. 667.
- ↑ Prasoon 2008, ப. 82.
- ↑ Ayyangar 1938, ப. 198-216.
- ↑ Nair 2008, ப. 252.
- ↑ Deussen 1997, ப. 668.
- ↑ Deussen 1997.
- ↑ Ayyangar 1938, ப. 205.
- ↑ Larson & Bhattacharya 2008, ப. 610.
- ↑ Ayyangar 1938, ப. 205-206.
- ↑ Karl H. Potter 1995, ப. 1472.
- ↑ Vedic Literature, Volume 1, A Descriptive Catalogue of the Sanskrit Manuscripts, p. PA482, கூகுள் புத்தகங்களில், Government of Tamil Nadu, Madras, India, page 482
- ↑ Deussen 1997, ப. 556-557.
உசாத்துணை
தொகு- Ayyangar, TR Srinivasa (1938). The Yoga Upanishads. The Adyar Library.
- Deussen, Paul (1 January 1997). Sixty Upanishads of the Veda. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
- Flood, Gavin D. (1996), An Introduction to Hinduism, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521438780
- Hattangadi, Sunder (2000). "ब्रह्मविद्योपनिषत् (Brahmavidya Upanishad)" (PDF) (in சமஸ்கிருதம்). பார்க்கப்பட்ட நாள் 12 January 2016.
- Goudriaan, Teun and André Padoux (Editors), Jan Schoterman. Ritual and Speculation in Early Tantrism: Studies in Honor of Andre Padoux. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4384-0454-7.
{{cite book}}
:|first=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - Larson, Gerald James; Bhattacharya, Ram Shankar (2008). Yoga : India's Philosophy of Meditation. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-3349-4.
- Nair, Shantha N. (1 January 2008). Echoes of Ancient Indian Wisdom. Pustak Mahal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-223-1020-7.
- Nair, Sreenath (2007). Restoration of Breath: Consciousness and Performance. Rodopi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-420-2306-2.
- Prasoon, Prof.S.K. (2008). Indian Scriptures. Pustak Mahal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-223-1007-8.
- Karl H. Potter (1995). Encyclopedia of Indian Philosophies: Bibliography, Vol. 1. Sect. 2. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0308-4.
- Vogel, Jean Ph. Vogel (1947). India antiqua. Brill Archive. GGKEY:5XD2J7XAQB6.
வெளி இணைப்புகள்
தொகு- Brahmavidya Upanishad in Sanskrit