பிர்ஹோர் மக்கள்
பிர்ஹோர் மக்கள், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் நாடோடி பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் ஆஸ்த்ரோ-ஆசியா மொழிக் குடும்பத்தில் உள்ள முண்டா மொழியின் துணை மொழியான பிர்ஹோர் மொழியைப் பேசுகிறார்கள்.[2][3]
மொத்த மக்கள்தொகை | |
---|---|
17,044[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | |
ஜார்கண்ட் | 10,726 |
சத்தீஸ்கர் | 3,104 |
மேற்கு வங்காளம் | 2,241 |
ஒடிசா | 596 |
பிகார் | 377 |
மொழி(கள்) | |
பிர்ஹோர் மொழி • இந்தி மொழி | |
சமயங்கள் | |
பாரம்பரிய நம்பிக்கைகள் • இந்து சமயம் • கிறித்துவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
முண்டா மக்கள் • ஹோ மக்கள் • கோல் மக்கள் • பூமிஜ் மக்கள் • சந்தாலிகள் |
சொற்பிறப்பியல்
தொகுபிர்ஹோர் மொழியில் பிர்ஹோர் எனின் காட்டு மக்கள் என்று பொருள்படும். பிர் என்றால் 'காடு', ஹோர் என்றால் ஆண்கள்.[4]
இனவியல்
தொகுபிர்ஹோர் மக்கள் குட்டையான உயரம், நீண்ட தலை, அலை அலையான முடி மற்றும் அகன்ற மூக்கு கொண்டவர்கள். தாங்கள் சூரியனில் இருந்து வந்தவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும் சூரியனிலிருந்து தங்கள் வம்சாவளியைக் கண்டுபிடிக்கும் கர்வார் மக்களைத் தங்கள் சகோதரர்கள் என்று நம்புகிறார்கள். இனவியல் ரீதியாக பிர்ஹோர் மக்கள் சந்தாலிகள், முண்டா மக்கள் மற்றும் ஹோ மக்களுக்கு ஒத்தவர்கள்.[4][5]
வாழ்விடம்
தொகுபிர்ஹோர் மக்கள் ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டம், ராஞ்சி மாவட்டம், மேற்கு சிங்பூம் மாவட்டம் மற்றும் கிழக்கு சிங்பூம் மாவட்டங்களில் அதிகமாக வாழ்கின்றனர். மேலும் பிர்ஹோர் மக்கள் ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்திலும் பட்டியல் பழங்குடி மக்களாக வாழ்கின்றனர்.[6] ஜார்க்கண்டில் வாழும் முப்பது பழங்குடியினரில் சிறுபான்மையினர் பிர்ஹோர் மக்கள் ஆவார்.[7]
மக்கள் தொகை
தொகுஇந்தியாவில் பிர்ஹோர்கள் சுமார் 10,000 எண்ணிக்கையில் உள்ளனர்.[3] சில ஆதாரங்களின்படி, அவர்களின் எண்ணிக்கை இதைவிடக் குறைவாக இருக்கலாம்.[8]
மொழி
தொகுபிர்ஹோர் மக்கள் ஆஸ்த்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தில் உள்ள முண்டா மொழியின் துணை மொழியான பிர்ஹோர் மொழியைப் பேசுகிறார்கள். பெரும்பாலானோர் இந்தி மொழியைப் பேசுகிறார்கள். அவர்களின் மொழி சந்தாலி, முண்டாரி மற்றும் ஹோ மொழிகளுடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. பிர்ஹோர்கள் நேர்மறையான மொழி அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். அவர்கள் நடமாடும் பகுதிகளில் உள்ள மொழிகளை சுதந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சத்ரி, சந்தாலி, ஹோ, முண்டாரி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தாய்மொழியான பிர்ஹோர் மொழியில் எழுத்தறிவு விகிதம் 1971இல் 0.02 சதவீதம் இருந்தது. ஆனால் இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் இந்தி மொழியில் கல்வியறிவு பெற்றவர்கள்.[3]
சமூக-பொருளாதார சூழ்நிலை
தொகுநாடோடி பிர்ஹோர்களின் "பழமையான வாழ்வாதாரப் பொருளாதாரம்" வனப் பொருட்களைச் சேகரிப்புகள் மற்றும் வேட்டையை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக குரங்கு, முயல், பறவைகளை வேட்டையாடி உண்பர். மேலும் தேனை சேகரித்து விற்கிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை கொடியின் நார்களைக் கொண்டு கயிறு திரிக்கிறார்கள். கயிற்றை அருகிலுள்ள விவசாய மக்களின் சந்தைகளில் விற்கிறார்கள். ஓரளவு சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு, ஓரளவு அரசாங்க அதிகாரிகளின் ஊக்கத்தால், அவர்களில் சிலர் நிலையான விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் சிலர் தங்கள் நாடோடி வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு கிராமத்தில் குடியேறினாலும், நாடோடி வாழ்க்கையை நடத்துவதே அவர்களின் போக்கு. சமூக-பொருளாதார நிலைப்பாட்டின் படி பிர் ஹோர்கள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. அலைந்து திரியும் நாடோடி பிர்ஹோர்களை உத்லஸ் என்றும், நிலையாக குடியேறிய பிர்ஹோர்களை ஜாங்கிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.[3][4][5][8][9]
பாரம்பரிய சமய நம்பிக்கைகள்
தொகுபிர்ஹோர்களின் பாரம்பரிய மந்திர-தாந்தீரிக சமய நம்பிக்கைகள் ஹோ மக்களின் நம்பிக்கைகளுக்கு நிகரானவை. முண்டா மக்களின் தெய்வங்களான சிங் போங்கா (சூரியக் கடவுள்[10]) மற்றும் ஹப்ரம் (மூதாதையரின் ஆவிகள்) ஆகியவை உயர் மதிப்பில் வழிப்படப்படுகிறது.[4][11] இந்து சமயம் மற்றும் பெந்தேகோஸ்தே கிறித்துவம் பிர்ஹோர் மக்களிடத்தில் கணிசமான அளவில் ஊடுருவி வருகிறது..[9]
குடியிருப்புகள்
தொகுபிர்ஹோர் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை தாண்டாக்கள் அல்லது பட்டைகள் என அழைக்கப்படுகிறது. இவை குறைந்தபட்சம் அரை டஜன் கூம்பு வடிவ குடிசைகளைக் கொண்டிருக்கும். இக்குடிசைகள் இலைகள் மற்றும் கிளைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். வீட்டு உடைமைகள் பாரம்பரியமான மண் பாத்திரங்கள், சில தோண்டும் கருவிகள், வேட்டை மற்றும் பொறிக்கான கருவிகள், கயிறு தயாரிக்கும் கருவிகள், கூடைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. சமீப காலங்களில் அலுமினியம் மற்றும் எஃகு ஆகியவை பிர்ஹோர் மக்கள் குடிசைகளுக்குள் உள்ளது.[5]
ஒருங்கிணைப்பு முயற்சி
தொகு1947 இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, பிர்ஹோர்களுக்கு வேளாண்மை நிலம், உழவுக்கு காளைகள், விவசாய கருவிகள் மற்றும் விதைகள் ஆகியவற்றைக் கொடுத்து குடியமர்த்த அரசாங்கம் முயற்சித்தது. குழந்தைகளுக்கான பள்ளிகள், கயிறு தயாரிக்கும் மையங்கள், தேன் சேகரிப்பு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. இருப்பினும் பெரும்பாலான பிர்ஹோர்கள் நாடோடி வாழ்க்கைக்குத் திரும்பியதால் இந்த முயற்சிகள் சிறிதளவு பலனைத் தந்துள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
- ↑ "Peaceful Societies Alternatives to Violence and War". Birhor. Archived from the original on 2008-05-16. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.
- ↑ 3.0 3.1 3.2 "Birhor – A Language of India". Ethnologue. SIL International. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Soan, Kamal Kishore. "The Birhors". பார்க்கப்பட்ட நாள் 2008-03-17. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 5.0 5.1 5.2 5.3 "The Birhor". A Global Network of Jharkhand. Archived from the original on March 27, 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.
- ↑ "Peaceful Societies Alternatives to Violence and War". Birhor. Archived from the original on 2008-05-16. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.
- ↑ "Jharkhand: Data Highlights the Scheduled Tribes" (PDF). Census of India 2001. Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-03-06.
- ↑ 8.0 8.1 "Peaceful Societies Alternatives to Violence and War". Has the Birhor vanished. Archived from the original on 2008-05-16. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.
- ↑ 9.0 9.1 "Peaceful Societies Alternatives to Violence and War". Have the Birhor been roped into social changes?. Archived from the original on 2008-07-26. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.
- ↑ Although sing literally means 'sun' and bonga literally means 'spirit, deity,' the actual conceptualization of Sing Bonga is not as a 'sun god.' Sing Bonga is rather the creator of the universe, including humans, animals, plants, rocks, the moon, and the sun. Therefore, the word sing in Sing Bonga is sometimes interpreted as an adjective, like 'luminous' or 'brilliant.'
- ↑ Adhikary, Ashim Kumar. "Primal Elements: The Oral Tradition". The Birhor Universe. Archived from the original on 2008-02-25. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.
வெளி இணைப்புகள்
தொகு- http://projekt.ht.lu.se/rwaai RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)