பிலிப்பீன்சு கருப்பு வெள்ளை விசிறிவால்

பிலிப்பீன்சு கருப்பு வெள்ளை விசிறிவால் (Philippine pied fantail)(ரைபிதுரா நிக்ரிடார்கிசு) என்பது பிலிப்பீன்சில் காணப்படும் ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு நடுத்தர அளவிலான பறவை சிற்றினமாகும். இது முன்னர் மலேசிய விசிறிவாலுடன் தெளிவாகக் கருதப்பட்டது.

பிலிப்பீன்சு கருப்பு வெள்ளை விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. nigritorquis
இருசொற் பெயரீடு
Rhipidura nigritorquis
விகோர்சு, 1831
கூடு ஒன்றில்

விளக்கம் தொகு

பிலிப்பீன்சு கருப்பு வெள்ளை விசிறிவால் மிதமான அளவிலான நீண்ட வால் கொண்ட பறவை ஆகும். இது பொதுவாக மரங்கள் நிறைந்த பகுதிகளிலும் தாழ் நிலப் பகுதிகளில் திறந்தவெளிகளிலும் காணப்படுகிறது. இதன் உடலின் மேற்பகுதி சாம்பல் நிறமாக இருக்கும். அதே சமயம் இதன் அடிப்பகுதி வெண்மையானது. இது தன் மார்பில் ஒரு கருப்பு பட்டை மற்றும் ஒரு கருப்பு நிற வடிவத்தினைக் கொண்டுள்ளது. ஒரு தனித்துவமான வெள்ளை தொண்டை மற்றும் புருவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது அடிக்கடி தன் வாலை பக்கத்திலிருந்து பக்கமாக நகர்த்தும். இதன் மூலம் வாலின் வெள்ளை முனைகளைக் காட்டுகிறது. இப்பறவையின் ஓசை மாறுபட்ட, சற்றே இசைக்காத மற்றும் கீறல் விசில் சொற்றொடர்களால் ஆனது.

வகைப்பாட்டியல் தொகு

இந்த பறவையினை குறிப்பிடும் மற்ற பெயர்கள் மரியா காப்ரா (பிலிப்பீன்சு),[1] மற்றும் தாரேகோய் (விசயன் தீவு, பிலிப்பீன்சு).[2]

வாழ்விடம் தொகு

பிலிப்பீன்சு கருப்பு வெள்ளை விசிறி வால் பிலிப்பீன்சு முழுவதும் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

மற்ற பறவைகளுடன் உறவு தொகு

இது பிலிப்பீன்சில் பொதுவானது, பெரும்பாலும் மிண்டனாவோவில் காணப்படும். பெண் பறவைகளை ஈர்க்க இது தன் வாலை உயர்த்துகிறது. இவை பெரும்பாலும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும் சாதாரண வடிவத்திலும் இருக்கும். இது யூரேசிய மரக் சிட்டுக்குருவிகள் மற்றும் கசுகொட்டை முனியாக்களுடன் ஒன்றாக/பொதுவாகப் பறக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Birds of Makati, Blog
  2. Kennedy, Robert S. A Guide to the Birds of the Philippines