பி. ஜி. என். உன்னிதன்
பி.ஜி.என் உன்னிதன் (P. G. N. Unnithan) என்பவர் திருவிதாங்கூரின் கடைசி திவான் (பிரதமர்) ஆவார். சர் சே. ப. இராமசுவாமி 1947 ஆகத்து 20 அன்று பதவி விலகியதைத் தொடர்ந்து (1947 சூலை 25 அன்று சுவாதித் திருநாள் ராம வர்மனின் இசை அகாதமியில் சேர்ந்தார்) திவானாக பதவியேற்றார். உன்னிதன், திருவிதாங்கூர் அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவின் தலைவராக இருந்தார். 1948 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பட்டம் தாணு பிள்ளை தலைமையிலான மக்கள் அரசாங்கம் பதவியேற்றபோது இவர் திவான் பதவியை கைவிட்டார்.[1]
இராச்சிய சேவை பிரசன்னம் பி.ஜி.என்.உன்னிதன் | |
---|---|
திவான் (பிரதம அமைச்சர்) of திருவிதாங்கூர் | |
பதவியில் 1947 ஆகத்து 19 – 1948 மார்ச்சு 24 | |
ஆட்சியாளர் | த்ருவிதாங்கூரின் சித்திரை திருநாள் |
முன்னையவர் | சே. ப. இராமசுவாமி |
பின்னவர் | திருவிதாங்கூர் மாநிலம் கலைக்கப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1898 மாவேலிக்கரா |
இறப்பு | 1965 |
துணைவர் | பார்கவி அம்மா |
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, சென்னை |
வேலை | வழக்கறிஞர், |
தொழில் | துணை ஆட்சியர், அரசியல்வாதி |
குடும்பம்
தொகுஉன்னிதன், திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உயர் இராணுவ சேவையின் வரலாற்றைக் கொண்ட மாவேலிக்கராவின் எடசேரி பட்டாவீட்டில் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை இத்தாமர் கோயில் தம்புரான் ஹரிப்பாடு அரண்மனையைச் சேர்ந்தவர். மேலும், கேரள வர்மா வலியா கோயில் தம்புரானின் மருமகன் ஆவார். இவரது சகோதரி மாவேலிகரா அரச குடும்பத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர் ராஜா ரவி வர்மாவின் மகனை மணந்தார்.
திருமணம்
தொகுசெங்கனூரின் புல்லம்பிள்ளை பிச்சநாட்டு குடும்பத்தைச் சேர்ந்த கோவிந்த பிள்ளையின் (ஆலப்புழாவில் அரசு வழக்கறிஞர்) மகள் பார்கவி அம்மா என்பவரை மணந்தார். பார்கவி அம்மா வெளிநாட்டு ஆடைகளை புறக்கணிப்பதன் மூலம் தொடங்கும் தேசிய இயக்கத்திற்கு ஆதரவளித்த பிராந்தியத்தின் ஆரம்பகால பெண்களில் ஒருவராக இருந்தார். மூத்த சுதந்திர போராட்ட வீரர் மற்றும் திருவிதாங்கூரைச் சேர்ந்த பி.ஜி.என் உன்னிதனின் வகுப்புத் தோழர் கே.குமார் தலைமையில் ஆழப்புழாவில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதற்கு தலைமை தாங்கினார். இவருக்கு நான்கு குழந்தைகள் இருந்தன.
இறப்பு
தொகுஇவர் 1965 ஏப்ரல் 5 அன்று இறந்தார்.
நினைவு
தொகுதிருவனந்தபுரத்தில் சாத்தமங்கலத்தில் உள்ள ஒரு தெருவிற்கு உன்னிதன் சந்து என இவரது பெயரிடப்பட்டுள்ளது.