பீகார் செரீப்
பீகார் செரீப் (Bihar Sharif), இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். இது பாட்னாவிற்கு தென்கிழக்கே 69.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் தெற்கு பிகாரின் வணிகம், பொருளாதாரம், கல்வி, சுற்றுலா மற்றும் வேளாண்மையின் முக்கிய மையம் ஆகும். 14-ஆம் நூற்றாண்டின் பாலப் பேரரசு காலத்தில் இந்நகரத்தின் ஒடந்தபுரியில் பெரிய விகாரையுடன், பௌத்த பல்கலைக்கழகமும் கட்டப்பட்டது. நாளந்தா பல்கலைக்கழகம் மற்றும் இந்நகரத்தில் இருந்த நாலந்தா மகாவிகாரையை[5] தில்லி சுல்தானின் தளபதி பக்தியார் கில்ஜி அழித்து சிதைத்தார்.
பீகார் செரீப் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°11′49″N 85°31′05″E / 25.197°N 85.518°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
கோட்டம் | பாட்னா |
மாவட்டம் | நாலந்தா |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பீகார் செரீப் மாநகராட்சி |
• மேயர் | அனிதா தேவி[2] |
பரப்பளவு | |
• நகரம் | 152.94 km2 (59.05 sq mi) |
• நகர்ப்புறம் | 23.5 km2 (9.1 sq mi) |
• [3] | 78.53 km2 (30.32 sq mi) |
ஏற்றம் | 55 m (180 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 2,97,268 |
• அடர்த்தி | 15,743/km2 (40,770/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி[4] |
• கூடுதல் மொழி | உருது |
• வட்டார மொழி | மகதி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 803101 803118 803216 803111 803113 |
தொலைபேசி குறியீடு | +916112 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR-21 |
மக்களவைத் தொகுதி | நாலாந்தா |
சட்டமன்றத் தொகுதி | பீகார் செரீப் |
இணையதளம் | Bihar Sharif - Nagarseva |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பீகார் செரீப் மாநகரத்தின் மக்கள் தொகை 2,97,268 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 927 வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 75.30% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 65.86%, இசுலாமியர் 33.59% மற்றும் பிறர் 0.55% ஆகவுள்ளனர்.[6]
போக்குவரத்து
தொகுபீகார் செரீப் தொடருந்து சந்திப்பு நிலயம் புது தில்லி மற்றும் பாட்னா நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Nalanda District Officials Details". nalanda.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 April 2021.
- ↑ "E-Municipality Bihar". nagarseva.bihar.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 April 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Nadim, Farrukh (26 November 2018). "37 villages to be part of Biharsharif Smart City project" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/patna/37-villages-to-be-part-of-biharsharif-smart-city-project/articleshow/66799264.cms.
- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.
- ↑ Centre, UNESCO World Heritage. "Archaeological Site of Nalanda Mahavihara at Nalanda, Bihar". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 August 2021.
- ↑ Biharsharif Population 2011