பீதர் வரலாறு

பீதர் தென்னிந்தியாவில் கருநாடக மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். பீடபூமி நிலப்பகுதியின் விளிம்பில் அமைந்துள்ள பீதரிலிருந்து வடக்கிலும் கிழக்கிலும் தாழ்நிலங்களின் அழகான காட்சிகளைக் காண வியலும். கடல் மட்டதிலிருந்து 2,330 அடிகள் (710 m) உயரத்தில் அமைந்துள்ளது. இதமான வானிலையுடைய பீதரில் வேனிற்காலத்திலும் 105 °F (41 °C)க்கு மேல் செல்வதில்லை. பீதர் பீடபூமி ஓர் ஒழுங்கற்ற வடிவத்தில், 22 மைல்கள் (35 km) நீளமாகவும் மிகுந்த அளவில் 12 மைல்கள் (19 km) அகலமுடையதாகவும் உள்ளது.[1]:1

பண்டைக்காலம்

தொகு

மரபுவழிக் காதைகள் இந்து காவியமான மகாபாரதத்தின் முதன்மை நாயகர்களில் ஒருவரான விதுரன் வாழ்ந்திருந்த இடமாக விவரிக்கின்றன; அக்காலத்தில் இது விதுரநகரம் என அழைக்கப்பட்டதாக விளம்புகின்றன.[2] மேலும் பண்டைய விதர்பா நாட்டுடன் பீதர் தொடர்புபடுத்தப்படுகின்றது.[3] ஆனால் தற்போதைய ஆய்வுகள் விதர்பா பீரார் மாநிலத்தை ஒட்டி இருப்பதாக வெளிப்படுத்துகின்றன.

பண்டைய பெருங்கற்கால நாகரிகம் கி.மு 1200 முதல் கி.மு 1100 வரை தழைத்திருந்தது; இது கி.மு மூன்றாவது, இரண்டாவது நூற்றாண்டுகளில் வளர்ந்தோங்கி கி.மு 100 வரை நிலைத்திருந்தது. இந்த நாகரித்தில் விதர்பாவின் தாக்கமும் கிழக்கத்திய இந்தியாவின் தாக்கமும் கலந்திருந்தது. கர்நாடகத்தின் வடகிழக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள மட்பாண்ட வகைகளும் செப்புப் பொருட்களும் கற்களின் அமைப்புக்களும் இந்த நாகரிகத்தை அடையாளப்படுத்துகின்றன.[2]:214

இந்நிலப்பகுதி மௌரியப் பேரரசின் தென்பகுதியில் அடங்கியதாக அசோகர் காலத்து ஆவணங்கள் சாற்றுகின்றன. நந்தர்களை மௌரியர்கள் வென்றபோது அவர்களது ஆட்சியின் கீழிருந்த பீதரும் மௌரிய இராச்சியத்தில் இணைந்தது. பிந்துசாரர் கருநாடகத்தின் பகுதிகளை அடக்கிய தக்காணப் பீடபூமியை ஆண்டு வந்தார்.[2]:215

மௌரியர்களுக்குப் பிறகு சாதவாகனர்கள் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஆண்டு வந்தனர். கௌதமிபுத்ர சதகர்ணி தனது ஆட்சியை இங்கு நிறுவினார். இவரது ஆட்சிக்கால காசுகளை தக்காண பீடபூமியின் பல்வேறு பகுதிகளில் காணவியலும். [2]:217

இடைக்காலம்

தொகு

ஆங்கிலேயர் குடியேற்றவாதம்

தொகு

தற்காலம்

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. Ghulam Yazdani (10 June 1944). Bidar: Its History and Monuments. Hyderabad: Oxford University Press on behalf of Archaeological Department, ஐதராபாத் நிசாம்'s Government.
  2. 2.0 2.1 2.2 2.3 Karnataka Gazetteer (Second ed.). Govt. of Karnataka. 1 January 1983. {{cite book}}: |access-date= requires |url= (help)
  3. மாளவிகா அக்னிமித்திரா ; மகாபாரதம் ; அரிவம்சம், பாகவதம், மற்றும் ஏனைய சில புராணங்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீதர்_வரலாறு&oldid=1857858" இலிருந்து மீள்விக்கப்பட்டது