பீலா ராஜேஷ்

பீலா ராஜேஷ் (Beela Rajesh, பிறப்பு: 15 நவம்பர் 1969) என்பவர் ஒரு பெண் மருத்துவரும், தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும் ஆவார். இவர் இந்திய ஆட்சிப் பணியாளராகவும்(ஐஏஎஸ்) இருந்துள்ளார்.[2]

பீலா ராஜேஷ்
பிறப்புநவம்பர் 15, 1969 (1969-11-15) (அகவை 54)
கொட்டிவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விமருத்துவர், ஐஏஎஸ்
பணிதமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் (2019 முதல் 12 சூன் 2020 வரை)[1]
பெற்றோர்எல். என். வெங்கடேசன், ராணி வெங்கடேசன்
வாழ்க்கைத்
துணை
ராஜேஸ் தாஸ்
பிள்ளைகள்பிங்கி, பிரீத்தி (மகள்கள்)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

பீலா ராஜேஷ் நவம்பர் 15, 1969 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் பிறந்தார். இவருடைய தந்தை எல். என். வெங்கடேசன், இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி ஆகும். இவர் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாய் ராணி வெங்கடேசன், இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆகும். இவர் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3]

திருமண வாழ்க்கை தொகு

பின்னர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ் தாஸ் எனும் இந்தியக் காவல் பணி அதிகாரியை காதலித்து 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிங்கி, பிரீத்தி என இரண்டு மகள்கள் உள்ளனர்.[4][5][6]

கல்வி தொகு

இவர் மதராசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் பயின்றார். அதன் பிறகு, இந்திய ஆட்சிப் பணியாளராக இருந்தார். அரசுத்துறைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

அரசுத்துறை பொறுப்புகள் தொகு

தமிழகத்தில் செங்கல்பட்டு துணை ஆட்சியாராக இருந்துள்ளார். மீன்வளத்துறையின் திட்ட இயக்குனராக இருந்துள்ளார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக பணியாற்றியுள்ளார். இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குனராக பணியாற்றியுள்ளார். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தில், கொரானா தொற்று தொடர்பான, இவரது சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மக்களை கவர்ந்தது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "பீலா ராஜேஷ் மாற்றம்; தமிழக அரசின் சுகாதார துறை செயலராகும் ஜெ. ராதாகிருஷ்ணன்- பின்னணி என்ன?".பி‌பிசி தமிழ் (சூன் 12, 2020)
  2. "Who is Dr Beela Rajesh, and how is she handling the pandemic in Tamil Nadu?".
  3. "Congress fields Ponnappa Nadar's grandson". தி இந்து (ஏப்ரல் 24, 2016)
  4. "தமிழகமே உற்றுநோக்கும் இந்த பீலா ராஜேஷ் யார்?". விகடன் (ஏப்ரல் 03, 2020)
  5. பீலா ராஜேஷ்
  6. பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ்தாஸுக்கு முக்கியப் பதவி
  7. "சர்ச்சை பாதி; பாராட்டு மீதி: யார் இந்த பீலா ராஜேஷ் ஐஏஎஸ்?". இந்தியன் எக்சுபிரசு தமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீலா_ராஜேஷ்&oldid=3295660" இலிருந்து மீள்விக்கப்பட்டது