புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி
புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி (J.J. College of Arts and Science) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் சிவபுரம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.[1][2][3][4][5][6][7][8] புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17 ஆம் நாள் அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் க. பொன்னுசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுகையின்கீழ் செயல்படுகிறது.[9][10] கல்லூரியில் கலை, வணிகம் மற்றும் அறிவியல் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
ஜெ. ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லுரி (தன்னாட்சி) | |
வகை | சுயநிதி, தன்னாட்சி, கலை அறிவியல், இருபாலர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1994 |
நிறுவுனர் | சே. இரகுபதி |
முதல்வர் | ஜெ. பரசுராமன் |
அமைவிடம் | , , 10°20′29″N 78°47′31″E / 10.3414468°N 78.792076°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://jjc.kvet.in/ |
நிர்வாகம்
தொகுகற்பக விநாயகா அறக்கட்டளை மூலம் ஜெ. ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கல்லூரியினை நிறுவியவர் சே. இரகுபதி ஆவார். இவர் முன்னாள் தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் நகர்ப்புற அமைச்சராகவும், திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார். முன்னாள் மத்திய இணை அமைச்சராகவும் இந்திய அரசாங்கத்தில் பதவி வகித்தார்.
கல்லூரியின் தரம்
தொகு1994ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 2003ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் தரக்குறியீட்டில் பி++ அங்கீகாரத்தை முதன்முதலில் பெற்றது. மீண்டும் 2009 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஏ தரக்குறியீட்டை பெற்றது. 19.10.2012 முதல் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரியாக புது தில்லி, பல்கலைக்கழக மானியக் குழு, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலமும் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கல்லூரி பாடப்பிரிவுகள்
தொகு- இளங்கலை வகுப்புகள்
- முதுகலை வகுப்புகள்
- மேலாண்மை வகுப்புகள்
- ஆய்வியல் நிறைஞர் வகுப்புகள்
- முனைவர் பட்ட வகுப்புகள்
வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்
தொகு- மத்தியக் கல்விப்பாடத்திட்டத்துடன் கூடிய பள்ளி
- மெட்ரிக் பாடத்திட்டத்துடன் கூடிய பள்ளி
- செவிலியர் கல்லூரி
- கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- பொறியியல் கல்லூரி
முக்கிய நிகழ்வுகள்
தொகுஉயிரிதொழில்நுட்பவியல் தொடர்பான தேசிய மாநாடும் [11] சமுதாயக் கல்லூரி துவக்கவிழாவும் இக் கல்லூரியில் நடைபெற்றன.[12]
விளையாட்டு
தொகுகல்லூரியானது மண்டலங்களிடையிலான துடுப்பாட்டம் [13] மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடுகிறது. 2017 ஆம் ஆண்டில் இல் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ DIN (2022-08-10), "ஜெ.ஜெ. கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்", Dinamani, பார்க்கப்பட்ட நாள் 2024-06-29
- ↑ Contemporary Issues in Multidisciplinary Subjects: Volume-1. RED'SHINE Publication. Pvt. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-93239-59-4.
- ↑ Security and Privacy in Social Networks. SK Research Group of Companies. 18 January 2024. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-19980-65-9.
- ↑ Pink Power. SpotWrite Publications. 20 August 2022.
- ↑ Bioentrepreneurship in Biosciences – Recent Approaches. Darshan Publishers. 15 June 2022. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-93942-38-8.
- ↑ Data Science with Python. Leilani Katie Publication. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-968567-7-9.
- ↑ Universities Handbook: India. Inter University Board of India. 2014. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7520-117-0.
- ↑ Indian Science Abstracts. Indian National Scientific Documentation Centre. September 2010.
- ↑ "Affiliated College of Bharathidasan University".
- ↑ Evolving Corporate Education Strategies for Developing Countries: The Role of Universities: The Role of Universities. IGI Global. 31 January 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4666-2846-5.
- ↑ "Campus Connect". தி இந்து. 8 January 2024. Archived from the original on 8 January 2024.
- ↑ "புதுகை ஜெ.ஜெ.,கல்லூரியில் சமுதாயக் கல்லூரி துவக்கவிழா". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-pudukottai/news/139673. பார்த்த நாள்: 29 June 2024.
- ↑ "National College triumphs". The Hindu. 23 October 2015.
- ↑ "St. Joseph's College triumphs". The Hindu. 2 November 2017. Archived from the original on 9 November 2020.